ஐந்தாம் முத்திரை Jeffersonville, Indiana, USA 63-0322 1ஜெபம் ஏறெடுக்க இப்பொழுது நாம் தலைவணங்குவோம். கிருபையுள்ள பரம தந்தையே, இயேசு கிறிஸ்துவை மரித்தோரி லிருந்து உயிரோடெழுப்பி இக்கடைசி நாட்களில் பரிசுத்த ஆவியின் வல்லமையாக அவரை எங்களுக்கு அளித்திருக்கும் சர்வ வல்லமை யுள்ள தேவனே, என்றென்றும் ஜீவிக்கும் தேவனுடைய இந்த மகத்துவ மான சந்திப்புகளுக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். இப் பொழுதும் பிதாவே, நாங்கள் வேறொரு முக்கியமான மணி நேரத்தில் வந்திருக்கிறோம். இந்த நேரம் ஒருக்கால் அநேகருடைய பாதைகளை மாற்றி நித்தியவழியில் அவர்களை நடத்தும் ஒன்றாக இருக்கக்கூடும். கர்த்தாவே முத்திரைகளை அணுகுவதற்கு நாங்கள் தகுதியற்ற வர்களாயிருக்கிறோம். ஏனெனில் “ஆட்டுக்குட்டியானவர் அந்த புஸ்த கத்தை வாங்கி முத்திரைகளை உடைத்ததாக'' நாங்கள் வேதத்தில் காண் கிறோம். ஓ! தேவ ஆட்டுக்குட்டியே, நீர் முன்வரவேண்டுமாய் நாங்கள் கெஞ்சுகிறோம். கர்த்தாவே, மகத்தான மீட்பராகிய உம்மை நோக்கிக் கூப்பிடுகிறோம். நீர் புறப்பட்டு வந்து, காலங்கள்தோறும் மறைக்கப் பட்டிருந்த உம் மீட்பின் திட்டத்தை எங்களுக்கு வெளிப்படுத்தித்தாரும். இன்றிரவு எங்களுக்காக ஐந்தாம் முத்திரையை உடைத்து, அதனுள் அடங்கியுள்ள இரகசியங்களை எங்களுக்கு வெளிப்படுத்தும், அப் பொழுது நாங்கள் இப்பொழுதுள்ளதைக் காட்டிலும் மேலான கிறிஸ்த வர்களாக இவ்விடம் விட்டு புறப்பட்டு, எங்களுக்கு முன் வைக்கப்பட் டுள்ள பணியை மேற்கொள்வதற்கு நாங்கள் இன்னும் அதிக தகுதி யுள்ளவர்களாய்க் காணப்படுவோம். இயேசுவின் நாமத்தில் இதைக் கேட்கிறோம். ஆமென். நீங்கள் உட்காரலாம். 2மாலை வணக்கம், நண்பர்களே. இன்றிரவு இந்த பெரிதான சம்ப வத்தைக் குறித்து பேச வந்துள்ளதை நான் பெரிய சிலாக்கியமாகக் கருதுகிறேன். இராஜாவின் பணியைச் செய்வதுபோன்றுள்ள சந்தோஷத்தை நான் வேறெந்த பணியிலும் பெறமுடியாது. ஆகவே, இப்பொழுது இப்பாடங்களைக் கற்றுக்கொள்வதற்கு நாம் காத்திருக்கி றோம். அவர் எனக்கு அதை வெளிப்படுத்தித் தராவிடில், நான் உங்க ளிடம் அதை எடுத்துக் கூற இயலாது. இதில் என் சுய சிந்தனைகளை உப யோகிக்க நான் முயல்வதில்லை. அவர் அதை எனக்கு அளிக்கும் வித மாகவே நான் உங்களிடம் கூறுகிறேன். அது உண்மை . ஆகவே, என் சுய சிந்தனைகளை உபயோகிக்காமல், அது அளிக்கப்பட்ட விதமாகவே நான் அதை ஏற்றுக்கொள்வதால், என் வாழ்நாள் முழுவதும் அது தவறாக இருந்தது கிடையாது. ஆகவே, இம்முறையும் அது தவறாக இருக்க வழியில்லை. இப்பொழுது, அவர் நமக்குச் செய்த எல்லாவற்றிற்காகவும் நாம் அவருக்கு நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம் -ஜீவனுள்ள தேவனுடைய மகத்தான, அதிசயமான கரமே இதைச் செய்கின்றது. இராஜாதி ராஜா வும், கர்த்தாதி கர்த்தருமானவர் நம் மத்தியில் பிரசன்னராயிருப்பதைக் காட்டிலும் விசேஷித்த செயல் எது? நாம் எல்லாரைப் பார்க்கிலும் மிக வும் சிலாக்கியம் பெற்ற மக்களாயிருக்கிறோம். 3தேசத்தின் ஜனாதிபதி நம் பட்டிணத்துக்கு வருவாரெனில், நாம் ஊதலை ஊதி, கொடியேற்றி, கம்பளங்களை விரிப்போம். அவரது வருகை நம் பட்டிணத்திற்கு மதிப்பையளிக்கும் என்று நாம் சற்று சிந்திக்கையில் அது நமக்கு சரியாகவே புலப்படும். ஆனால், நம் சிறிய, தாழ்மையான கூடாரத்திற்கு வர ராஜாதி ராஜா வாகிய தேவனுக்கு நாம் அழைப்பு விடுக்கிறோம் என்பதை சற்று ஆலோசியுங்கள். கம்பளம் மற்றவற்றையும் விரிப்பது அவருக்கு விருப்பமில்லை. அவருக்கு விரிப்பதற்கென்று தாழ்மையான இருதயங் களையே அவர் விரும்புகிறார். அங்ஙனம் செய்யும்போது, தம்மில் அன்பு கூருகிறவர்களுக்காக அவர் சேமித்து வைத்திருக்கும் எல்லா நல்ல காரி யங்களையும் அவர் அந்த தாழ்மையான இருதயங்களுக்கு வெளிப் படுத்துவார். இப்பொழுது இங்கு ஒரு சாட்சியைக் கூற விரும்புகிறேன். இப் பொழுதுதான் அதை நான் சொல்லக் கேட்டேன். ஒருக்கால் அதை நான் சற்று தவறாகவும் உரைக்கலாம், ஆனால் அந்த சாட்சியைப் பற்றியவர் கள் இங்குள்ளனர். 4சில நாட்களுக்கு முன்பு, நான் இப்பொழுது தங்கியிருக்கும் அரி சோனா (Arisona) பட்டிணத்தில் இருந்தபோது, ஒரு சிறு பையன் கீல் வாத ஜுரத்தினால் (Rheumatic fever) அவதியுறுகிறான் என்றும், அது அவனுடைய இருதயத்தைப் பாதித்துள்ளது என்றும் எனக்கு அறிவிக் கப்பட்டது. அவனுடைய பெற்றோர் எனது ஆப்த நண்பர்கள். அவர் நம் சபையில் ஒரு மூப்பராக இருக்கிறார். சகோ. காலின்ஸ் (Bro. Collins). அவர் சிறிய பையன், மிக்கி (Milkie) (அவன் ஜோவின் விளையாட்டுத் தோழன்) இருதய கீல் வாத ஜுரத்தினால் அவதியுற்றான். வைத்தியர்கள் அவனை வீட்டுக்கு அனுப்பி வைத்து, அவன் படுக்கையிலேயே படுத் திருக்க வேண்டுமென்றும், தண்ணீர் குடிப்பதற்குங் கூட அவன் எழுந் திருக்கக் கூடாதென்றும், ஒரு வைக்கோல் குழாய் (Straw) வழியாய் அவன் தண்ணீர் குடிக்க வேண்டுமென்றும் பெற்றோருக்கு உத்தரவிட் டிருந்தனர். அவனுடைய நிலைமை அவ்வளவு மோசமாயிருந்தது. அவன் பெற்றோர் நம் கூடாரத்திற்கு வரும் விசுவாசிகள். 5சில நாட்களுக்கு முன்னர், ஞாயிறன்று சுகமளிக்கும் ஆராதனை ஒன்று நடத்தப்போவதாக உங்களுக்கு அறிவிக்கப்பட்டது. ஆனால் உங்கள் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டுமெனக் கருதி சுகமளிக் கும் ஆராதனை நடத்த வேண்டாமென்று நாங்கள் முடிவு செய்தோம். ஆனால் ஒரு சிறு விஷயத்தை மாத்திரம் என் இருதயத்துக்குள் நான் வைத்துக் கொண்டிருந்தேன். 6அந்தப் பையனின் பெற்றோர் என்னிடம் வந்து, அவனை கூடார அறைக்குள் கொண்டு வரலாமா என்று கேட்டனர். அவன் அங்கு கொண்டு வரப்பட்ட போது, அவன் சுகமடைந்துவிட்டதாக பரிசுத்த ஆவியானவர் அறிவித்தார். ஆகவே, பரிசுத்த ஆவியானவர் கூறியதை பெற்றோர் விசு வாசித்து, சிறுவனை பள்ளிக்கூடத்திற்கு அனுப்பினார்கள். வைத்தியர் அதை அறிந்தார். அது அவருக்கு அதிருப்தியை உண் டாக்கியது. அவர் தாயாரிடம், சிறுவன் படுக்கையிலிருக்க வேண்டு மென்று மறுபடியும் கூறினார். அந்த அம்மாள் வைத்தியரிடம் நடந்ததை விவரமாகக் கூறினாள். அந்த வைத்தியர் ஏழாம் நாள் ஆசரிப்பு ஸ்தாப னத்தைச் சேர்ந்தவர் என்று நினைக்கிறேன். அவர் தாயாரிடம், 'சிறுவனை நான் பரிசோதித்தாவது பார்க்கட்டும்' என்றார். அவளும் 'மிக நல்லது' என்று கூறினாள். அந்த இருதய கீல்வாத ஜுரம் எங்குள்ளது என்று பரிசோதிக்க அவனை இரத்த பரிசோதனைக்காகக் கொண்டு சென்றனர். வைத்தியர் மிகவும் அதிசயமுற்றார் என்று நான் அறிகிறேன். என்ன செய்வதென்றே அவருக்குத் தெரியவில்லை. அந்தச் சிறு பையன் முற்றிலும் குண மடைந்து விட்டான். ஒன்றும்...?... காணப்படவில்லை. 7இப்பொழுது சகோதரன் காலின்ஸ், சகோதரி காலின்ஸ் இங்கு உள்ளனரா? நான் ஒருவேளை அதை தவறாகக் கூறியிருக்கலாம். நான் விரும்புவது... சகோதரி காலின்ஸ், அது சரியா? ஆம். சரி, ஆம். அதோ, அந்த ஏழு வயது சிறுவனான மிக்கி காலின்ஸ், மூன்று நாட்களுக்கு முன்பு அது இந்த அறையில் சம்பவித்தது. ஓ! அவர்கள்.... அந்த அறையில் மனிதரைத் தவிர வேறு யாராவது இருக்கவேண்டும். அவர்தான் தம் வார்த்தையை கெளரவிக்க அங்கு வரும் மகத்தான வல்லமையுள்ள யெகோவா. அது சரி. இந்த சாட்சி யைக் கேட்டதற்காக நான் நன்றியுள்ளவனாயிருக்கிறேன். பாருங்கள்? நான் மாத்திரமல்ல, நீங்கள் எல்லோருமே நன்றியுள்ளவர்களாயிருக்கி றீர்கள். ஏனெனில், அது உங்கள் சிறுவனாயிருந்தால் என்ன, அல்லது என்னுடைய சிறுவனாய் இருந்தால் என்ன? 8ஆகவே , நடந்த சம்பவங்களில் இங்கொன்றும் அங்கொன்று மாக தேர்ந்தெடுத்து, நான் சாட்சி கூறுகிறேன் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அது எல்லா இடங்களிலும் சம்பவித்தாலும் எனக்களிக் கப்பட்ட ஊழியம் தெய்வீக சுகமளிக்கும் ஊழியம் என்பதை வலியுறுத் தவே அவைகளைக் கூறுகிறேன். ஆனால் இப்பொழுது நான் முத்திரை களின் இரகசியங்களை உங்களுக்கு அறிவித்துக்கொண்டிருக்கிறேன்சற்று பின்னர் நான் ஏன் இதைச் செய்கிறேன் என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள். நான் ஒரு போதகனுமல்ல; நான் ஒரு வேதசாஸ்தர நிபு ணனும் அல்ல. நான் வியாதியஸ்தர்களுக்காக ஜெபிப்பவன், நான் கர்த்தரை நேசிக்கிறேன். இப்பொழுது, இப்பொழுது இதில், இருந்த போதிலும், அந்த சென்ற இரவு இரத்தப் புற்று நோயால் அவதியுற்ற சிறு பெண் குணமடைந்ததை நாம் சாட்சியாகக் கூறினோம். அவளுடைய பெய ரையும் அவளுடைய பெற்றோர், அவர்கள் யார் என்பதையும் பில்லி (Billy) எழுதிவைத்துள்ளான். அவள் மரிக்கும் தருவாயிலிருந்தாள். வாயின் வழியாக அவளுக்கு ஆகாரம் கொடுக்கமுடியாமல், இரத்தக் குழாய்களின் வழியாக செலுத்தப்பட்டது. அவள் மிகவும் அழகுள்ளவள். அவளுடைய வயதுக்கு அவள் இங்குள்ள இந்தச் சிறிய பெண்ணைப் போல சிறியவளாகக் காணப்பட்டாள் என்றே நான் எண்ணுகிறேன். அவள் இவ்வளவு உயரமானவளாக..... நம்மில் அநேகரைப் போல இருந்தனர். அவளும் அவள் பெற்றோரும் உடுத்தியிருந்த ஆடைகளின் மூலம் அவர்கள் ஏழ்மையானவர்கள் என்று அறிந்துகொள்ளலாம். ஆனால் அவர்கள் மிகவும் பயபக்தியுள்ளவர்கள். பரிசுத்த ஆவியானவர் அவள் சுகமடைந்துவிட்டதாக அறிவித்தார். 9இப்பொழுது. அந்த சிறியவள் இரத்தப் புற்று நோயுடன் இருந்தாள் என்று சற்று சிந்தியுங்கள். அவளுடைய இரத்தம் மிகவும் மோசமாக இருந்ததால், அவளுக்கு வாயின் வழியாக ஆகாரம் கொடுக்கப்பட முடியாமலிருந்தது. ஆகவே அவள் மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டு இரத்தம் அல்லது இரத்தக் குழாய்கள் மூலம் அவளுக்கு ஆகாரம் அளித்தனர்; அது குளுகோஸ் அல்லது வேறொன்று என்று நான் நினைக்கிறேன். அதற்கான மருத்துவ பதம் (Medical Term) என்ன என்று நான் அறியேன். ஆனால் அது எதுவாயிருந்தபோதிலும், அவளுக்கு அவ்விதமே ஆகாரம் செலுத்தப்பட்டது. அவள் அவ்விடம் விட்டுச் செல்லுமுன், ஹாம்பர்கர் (ஒருவித மேற்கத்திய உணவு) வேண்டுமென்று அழுதாள். பரிசுத்த ஆவியானவரின், 'கர்த்தர் சொல்லுகிறதாவது' என்னும் தேவ வாக்கை அவள் பெற்றோர் கேட்டனர். அவர்கள் அன்னி யர்கள். இதற்கு முன் அவர்கள் இங்கு வந்ததில்லை. வயதுசென்ற ஒரு கணவன்-மனைவி, இவர்கள் திரும்பி செல்வதற்கு வேண்டிய பிரயா ணச் செலவை ஏற்றனர். சகோ. கிட்டும் (Kidd) அவரது மனைவியும், அவர்கள் என்ன செய்யவேண்டுமென்றும், அவர்கள் எதைக் கவனமாய் கேட்கவேண்டுமென்றும் அவர்களுக்குப் போதித்தனர். அந்தச் சிறு பெண் திரும்பிப் போகும் வழியில் உணவு அருந்தினாள். 10இரண்டு மூன்று நாட்கள் கழித்து அவள் பள்ளிக்கூடம் சென் றாள், வைத்தியர் மிகவும் வியப்புற்றார். அவர், ''அந்த பெண்ணின் உடலில் இரத்தப்புற்று நோயின் அடையாளம் சிறிதேனும் இல்லை'' என்றார். பாருங்கள்? இப்பொழுது, சர்வ வல்லமையுள்ள தேவனின் வல்லமை உடனடியாக சரியாக இரத்தத்தை அறவே சுத்திகரித்து, புது இரத்த அணுக்களை சிருஷ்டித்து, அதற்குப் புது ஜீவனை அளித்தது. உங் கள் இரத்தத்தில்தான் உங்கள் ஜீவன் உள்ளது. அவர் பழைய இரத்த அணுக்களைப் போக்கி, புது அணுக்களைச் சிருஷ்டிக்க வல்லவர். அது என்ன? அது முற்றிலுமாக... சர்வ வல்லமையுள்ள தேவனின் சிருஷ் டிப்பின் செயல்தான், என்றே நான் கூறுவேன். புற்று நோயால் அசுசிப் பட்டு அந்த பெண்ணுக்கு மஞ்சள் நிறமளித்த அந்த இரத்தத்தை சுத்தி கரித்து, நொடிப்பொழுதில் ஒரு புதிய இரத்த ஓட்டத்தைக் கொடுத்தது. 11நான் நம்புகிறேன்... நான் இப்பொழுது உரைப்பது அவருடைய நாமத்திலல்ல, என்ன நேரிடுமென்று என்னுடைய விசுவாசத்தின் வெளிப்பாட்டைக் கொண்டு அன்று சபின்யோ கான்யானில் (Sabino Canyon) நடந்ததை ஆதாரமாகக் கொண்டு நான் இதைச் சொல்லுகிறேன். சிருஷ்டி கர்த்தருடைய வல்லமையுள்ள மகத்துவத்தால் இழந்து போன அவயவங்கள் திரும்ப அளிக்கப்படும் தருணம் அண்மையில் உள்ளது. அவர் ஒரு அணிலை- ஒரு முழு மிருகத்தைத் தோன்றச் செய்யக் கூடுமானால் மனிதன் அல்லது ஸ்திரீ இழந்துபோன ஒரு சில அவயவங்களை அவர் திரும்பவும் அளிக்க அவரால் நிச்சயம் முடியும், அவர் தேவன்! நான் அவரை நேசிக்கிறேன். 12நல்லது. இப்பொழுது, இப்படி நாம் வெவ்வேறு பொருளின் பேரில் பேசிக்கொண்டே செல்கிறோம். ஜனங்கள் சுவர்களில் சாய்ந்த வண்ணமாயும், அறைகளிலும், கூடங்களிலும் நின்று கொண்டிருக் கின்றனர். ஆகவே, நாம் பேச வேண்டிய பொருளுக்கு நேரடியாகச் செல்வோம். இதை நான் கூற விரும்புகிறேன். எங்கும் பிரசன்னராயிருக்கும் அவருக்கு நான் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன். ஐந்தாம் முத்தி ரையைக் குறித்து ஒன்றும் அறிந்திராத எனக்கு காலை விடிவதற்கு அரை மணிநேர முன்பு, நான் ஜெபம் செய்துக் கொண்டிருக்கையில் அதே அதிசயவிதமாக அது வெளிப்படுத்தப்பட்டது... நான் கடந்த ஐந்து, ஆறு நாட்களாக ஒரு சிறு அறையில், யாரை யும் காணாமல் உட்கார்ந்து கொண்டு, ஒவ்வொரு முறையும் வெளிப் பாடு வருவதற்காகக் காத்திருக்கிறேன். சாப்பிடும் நேரம் மாத்திரம் நான் ஒரு சில நண்பர்களுடன் சென்றுவிட்டு வருகிறேன். அந்த நண்பர்கள் யாரென்பதை நீங்கள் அறிவீர்கள்- அவர்கள்தான் சகோதரன் உட்டும் (Bro. Wood) அவர் மனைவியும். ஆம். நான் அவர்களிடம் தங்கியிருக் கிறேன் என்று நீங்கள் அறிவீர்கள். அவர்களெல்லாரும் என்னை மிகவும் நன்றாக உபசரிக்கின்றனர். எனக்கு எவ்வித குறைவுமில்லை... 13நான் இப்பொழுது முத்திரைகளைக் குறித்த செய்தியை அளிக்க முயல்கிறேன். அது மிகவும் முக்கியமானதொன்றாகும். அதனுடைய வெளிப்படுத்தல் வெளிப்படவேண்டிய தருணம் இதுவே என்பதை நான் முற்றிலும் நம்புகிறேன். ஆகவே, இந்த ஏழு முத்திரைகளில் நீங்கள் புரிந்துகொள்ள முடி யாத ஏதாவதொன்று இருப்பின், அதை எழுதி இந்த மேசையின் மேல் வைத்துவிடுங்கள். அதற்கென்று சகோ. நெவில் அல்லது வேறொருவர் ஒரு பெட்டியை இங்கு வைப்பார் என்று நினைக்கிறேன். ('அந்த பெட்டி இங்கே உள்ளது'' என்று ஒருவர் கூறுகிறார்-ஆசி) ஓ, இங்கே, இங்கே. அது இங்கு இருப்பதை நான் காண்கிறேன். அது நல்லது. இன் றிரவே உங்கள் சந்தேகங்களை எழுதி சமர்ப்பித்துவிட்டால், அவைகளைப் படித்து ஞாயிறன்று பதிலளிக்க எனக்குப் போதிய அவகாசம் உண் டாகும். இப்பொழுது, பரிசுத்த ஆவியைப் பெறுவதன் அடையாளம் இதுவா?' போன்ற நம் பொருளுக்குப் புறம்பான கேள்விகளை இப்பொழுது, இந்த நேரத்தில் கேட்கவேண்டாம். பாருங்கள்? சபை காலங்களை நான் உங்களுக்குப் போதித்தது போல, முத்திரைகளை யொட்டி நான் உங்களுக்குப் போதித்தவைகளில் மாத்திரம் நீங்கள் கேள்வி கேட்டால் நலமாயிருக்கும். 14இப்பொழுது, பிணியாளிகளுக்கு நாம் ஜெபிக்கும்போது நான் வேறுவிதமான ஜெபத்தை ஏறெடுப்பதுண்டு. அப்பொழுது நான் அபி ஷேகம் பெறுவேன். அதன் நோக்கமே வேறேயாகும். நான் கர்த்தரைத் தேடி, 'சொஸ்தமாவதற்கு யாராவது இன்றிரவு இருக்கிறார்களா?' என்று கேட்பேன். அப்பொழுது அவர், 'ஆம். வலது பாகத்தின் மூலையில் உட்கார்ந்துகொண்டு, மஞ்சள் நிறமுள்ள ஆடை அணிந்திருக்கும் அந்த பெண்மணி, அவளை அழைத்து, அவளிடம் அவள் இன்னின்னதைச் செய்தாள் என்றும் அவளுக்கு இன்னின்ன வியாதி உண்டு என்றும் சொல்' என்பார். அங்கு நான் சென்று காணும்போது, அந்தப் பெண் அங்கு உட்கார்ந்திருப்பாள். அதைப் பாருங்கள். அது வித்தியாசமானது. பாருங்கள்? ஆனால் முத்திரைகள் வெளிப்படுவதற்கென நான் ஏறெடுக்கும் ஜெபம் அதனின்று வித்தியாசப்பட்டது. நான், 'கர்த்தராகிய இயேசுவே, இந்த முத்திரைகளின் அர்த்தம் என்ன? அதை எனக்கு வெளிப்படுத்தும்' என்று இப்பொழுது ஜெபித்துக் கொண்டு வருகிறேன். ஆமென். 15இப்பொழுது நாம் ஆவிக்குரிய பட்டயமாகிய தேவனுடைய வார்த்தையை மறுபடியும் எடுத்துக் கொள்வோம். எனக்குப் பின்னால் இருந்து ஜெபம் ஏறெடுத்து என்னை ஆவிக் குரிய விதத்தில் தாங்கி வரும் சகோ. நெவிலின் சகோதர அன்பை நான் வெகுவாகப் பாராட்டுகிறேன். அவ்வாறே ஜெபத்தில் என்னைத் தாங்கும் உங்களுக்கு என் நன்றி. இன்றிரவு - வெள்ளியிரவு - நாம் சுருக்கமாக முடிக்க முயல்வோம். ஐந்தாம் முத்திரையில் அடங்கியுள்ள எல்லாவற்றையும் கூறு வது இயலாது. ஏனெனில் ஒரே முத்திரையை நாம் அநேக மாதங்கள் மாதங்கள், மாதங்கள், வியாக்கியானம் செய்தாலும், இன்னுமாக அதில் அடங்கியுள்ள எல்லாவற்றையும் பேசி முடிக்க இயலாது. ஏனெனில் ஒவ்வொரு முத்திரையும் ஆதியாகமம் தொடங்கி வெளிப்படுத்தின விசேஷம் முடியவுள்ள வேதவாக்கியங்கள் அனைத்தோடும் பொருந்து வதாயிருக்கிறது. 16ஆகவே, இப்பொழுது நாம் தியானிக்கவிருக்கும் பொருளை விட்டு விட்டு அதிகம் அகன்று போகாதவாறு, நான் சில வேதவாக்கியங்களைக் குறித்து வைத்துக் கொண்டு அதில் நிலைக்கொள்வேன். அதுதான் சரி யான விதம் என்று நான் நினைக்கிறேன். நான் பொருளை விட்டு அகன்று போவதைக் கண்டால், நான் அதைவிட்டு மறுபடியும் பொருளுக்கு வர எண்ணி, வேறொரு வேதவாக்கியத்தை உங்களிடம் கூறி பொருளுக்கு வரமுற்படுவேன். 17ஆகையால் இப்பொழுது, இன்றிரவு தேவ ஒத்தாசையையும் கிருபையையும் கொண்டு நாம் ஐந்தாம் முத்திரையைப் படிக்கப் போகி றோம். அது சிறியது. ஆனால் மற்றவைகளைக் காட்டிலும் இது சற்று நீள முள்ளது. நான்கு குதிரைகளின் மேல் சவாரி செய்யும் ஒவ்வொருவருக் கும் இரண்டிரண்டு வசனங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த முத்திரை மூன்று வசனங்களைக் கொண்டதாயிருக்கிறது. இப்பொழுது ஐந்தாம் முத்திரை வெளிப்படுத்தல் 6-ம் அதிகாரம் 9-ம் வசனம் முதல் தொடங்குகிறது. ஆகவே, இப்பொழுது நான்கு குதிரைகளின் மேல் சவாரி செய் பவர்களைக் குறித்து வியாக்கியானத்தைக் கேட்காதவர் இங்கிருந்தால்... சில சமயங்களில் நாம் இதற்கு முன் சிந்தித்தவைகளை மறுபடியும் கூற வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. அவ்விதம் செய்யும்போது, அதை சரிவர புரிந்து கொள்ளாதவர்கள் அதைப் புரிந்து கொள்ள ஏதுவாயிருக் கிறது. இதைப் புரிந்துகொள்ள முடியாதவர்கள் யாராகிலும் இருந்தால் சற்று பொறுத்துக்கொண்டு இவை பதிவு செய்யப்பட்டுள்ள ஒலிநா டாக்களை வாங்கிக் கேளுங்கள். அதனால் உங்களுக்கு ஆசீர்வாதம் கிடைக்கும் என்பது நிச்சயம். ஏனெனில் எனக்கு இவை ஆசீர்வாதமாக அமைந்துள்ளன. 18இப்பொழுது 9ஆம் வசனம் முதல் 11-ம் வசனம் முடிய வாசிப் போம். எல்லாரும் ஆயத்தமா? அவர் ஐந்தாம் முத்திரையை உடைத்தபோது, தேவ வசனத்தினிமித்தமும் தாங்கள் கொடுத்த சாட்சியினிமித்தமும் கொல்லப்பட்டவர்களுடைய ஆத்துமாக்களைப் பலி பீடத்தின் கீழே கண்டேன். அவர்கள்: பரிசுத்தமும் சத்தியமுள்ள ஆண்டவரே, தேவரீர் பூமியின் மேல் குடியிருக்கிறவர்களிடத்தில் எங்கள் இரத்தத்தைக் குறித்து எதுவரைக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமலும், பழிவாங்காமலும் இருப்பீர் என்று மகா சத்தமிட்டுக் கூப்பிட்டார்கள். அப்பொழுது அவர்கள் ஒவ்வொருவருக்கும் வெள்ளை அங்கிகள் கொடுக்கப்பட்டது: அன்றியும், அவர்கள் தங்களைப் போலக் கொலை செய்யப்படப் போகிறவர்களாகிய தங்கள் உடன்பணிவிடைக்காரரும் தங்கள் சகோதரருமானவர்களின் தொகை நிறைவாகுமளவும் இன்னுங்கொஞ்சக்காலம் இளைப்பாறவேண்டும் என்று அவர்களுக்குச் சொல்லப்பட்டது. 19இப்பொழுது, இது ஒரு பரம இரகசியமாயிருக்கிறது. ஒலிநாடா வில் பதிவு செய்ய வேண்டுமென்று இதைக் கூறுகிறேன். இங்கு வீற் றிருக்கும் குருமார்களே, போதகர்களே, இப்பொழுது நாம் பிரசங்கிக்கப் போவதைக் காட்டிலும் வேறுபட்ட கருத்தை நீங்கள் கொண்டிருப்பீர்க ளானால், நானும் அத்தகைய கருத்தையுடையவனாயிருந்தேன். ஆனால் இதைக் குறித்து எனக்குக் கிடைத்த தேவ வெளிப்பாடு நான் கொண் டிருந்த கருத்தை முற்றிலும் மாற்றினது. பாருங்கள்? ஆகையால் இது வெளிப்படும்போது, சபையின் காலங்களைப் பற்றிய வேத வாக்கியங்களின் வியாக்கியானம் இதனுடன் பொருந்து வதை நாம் காணலாம். பாருங்கள்? ஆகவே நான் இவ்வெளிப்பாடு தேவனிடமிருந்து வந்துள்ளது என்பதை அறிவேன். இப்பொழுது நாம் அதைத் தெளிவாக அறிந்து கொள்ளுகிறோம். 20சில சமயங்களில், சில பிரக்கியாதி வாய்ந்த போதகர்கள் அளிக் கும் செய்திகள் உண்மையென நம்பி அவைகளின் பேரில் நாம் சார்ந் திருக்கிறோம் என்றே நான் நினைக்கிறேன். பாருங்கள்? அது - அது சரி. அந்த போதகர்களை நான் எவ்வகையிலும் குற்றப்படுத்துகிறேன் என்று நினைக்கவேண்டாம். நான் பாவத்தையும் அவிசுவாசத்தையும் தவிர வேறு யாரையும் குற்றப்படுத்துவது கிடையாது. சிலர் என்னிடம், “நீங்கள் ஸ்தாபனங்களைக் குற்றப்படுத்துகிறீர்” என்று கூறுகின்றனர். இல்லை. நான் ஸ்தாபனங்கள் அனுசரிக்கும் முறை மைகளைக் குற்றப்படுத்துகிறேனேயல்லாமல் அதிலுள்ள மக்களைக் குற்றப்படுத்துவதில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள். இந்த விஷயத் தில் கத்தோலிக்க ஸ்தாபனங்களும் பிராடெஸ்டெண்டு ஸ்தாபனங்களும் அவர்களை ஆளும் முறைகளையே நான் ஒரே மாதிரியே குற்றப்படுத்து கிறேன். என்னே ! நான்... 21நான் அறிந்துள்ள என் மிகச் சிறந்த நண்பர்களில் சிலர் கத்தோ லிக்கர்களாயிருக்கின்றனர். .?... நீங்கள் அறிவீர்களா... ஒரு ரோமன் கத்தோலிக்கர் எனக்காக நியாய ஸ்தலத்தில் வேறு யாரும் செய்யக் கூடாத விதத்தில் வாதாடியதன் காரணத்தால்தான் இந்த கூடாரத்தை நாம் கட்டி முடிக்க முடிந்தது, அவர் ஒருக்கால் இன்றிரவு இங்கு அமர்ந் திருக்கலாம். அது உண்மை . அவர் நீதிமன்றத்தில் கூறியதை யாருமே மறுக்கமுடியவில்லை. அது உண்மை . 'அந்த கூடாரத்தில் அதிகம் பேர் உட்காருவார்கள்' என்று வாதிக் கப்பட்டது. அவரோ, “இன்னும் எண்பது பேர் அதிகமாயிருந்தால் அதினா லொன்றும் பாதகமில்லை” என்றார், மேலும் அவர், “அந்த கூடாரம் அங்கு கட்டப்பட்டிருக்கிறது, அதன் போதகரை நானறிவேன். நீங்களெல்லாரும் உங்கள் சபையாரின் எண்ணிக்கையைக் கூட்டிக் கொண்டே போகலாம். அவர் மாத்திரம் செய்யக் கூடாதா?' என்று வாதா டினார். பாருங்கள். அவர் ஒரு ரோமன் கத்தோலிக்கர்; எனக்கு அவர் மிகவும் நல்ல ஒரு நண்பன். ஆம், ஐயா. 22ஒரு கத்தோலிக்க வாலிபன், எனது ஆப்த நண்பன், ஒரு நாள் என்னிடம் பேசிக்கொண்டிருந்தார். அவர் இரும்பு சாமான்கள் விற்கும் கடை ஒன்றை வைத்திருந்தார். அவர் என்னிடம், ''பில்லி எங்கள் மார்க்க முறையில் உமக்கு விசுவாசமில்லையென்பதை நானறிவேன். ஆனால் ஒரு விஷயத்தை உம்மிடம் கூற விரும்புகிறேன். நீர் எங்களுக்காக ஏறெடுத்த ஜெபத்தை தேவன் அங்கீகரித்திருக்கிறார். ஆகவே, இத்தேசத் தில் உமக்கு எங்காகிலும் தொந்தரவு நேர்ந்தால், தேசத்திலுள்ள எல்லா கத்தோலிக்கர்களும் உம்மைப் பாதுகாக்க வருவார்கள்“ என்றார். ஆகவே, நீங்கள் பாருங்கள். அது... 23அவர் கூறிய வண்ணமாகவே கூறினால், ''சிலுவையை முதுகில் சுமந்த ஒவ்வொருவனும்'' (Cross back) என்று அவர் கத்தோலிக்கர் களைக் குறிப்பிட்டார். ஆதி கிறிஸ்தவர்கள் சிலுவையை முதுகில் சுமந்து சென்றனர் என்பதை நாம் சரித்திரத்தின் வாயிலாக அறியலாம். இன்றைய கத்தோலிக்கர், அவர்கள்தாம் ஆதி கிறிஸ்தவர்கள் என்று உரிமை கோருகின்றனர். ஒரு வகையில் அது உண்மைதான். ஆனால் ஸ்தாபன முறைமைகள் அவர்களை வழி விலகச் செய்தது. நீங்கள் பாருங்கள்? கத்தோலிக்கர், யூதர்கள் இவர்களெல்லாரும் நாம் பிறந்த மானிடவர்க்கத்திலேயே பிறந்தவர்கள். பாருங்கள்? அது சரி. அவர்களும் நம்மைப் போலவே புசிக்கின்றனர், குடிக்கின்றனர், உறங்குகின்றனர், மற்றவர்களை நேசிக்கின்றனர். ஆகவே தனிப்பட்ட நபர்களை நாம் குறை கூறக்கூடாது. இல்லை. இல்லை. பாருங்கள்? நாம் தனிப்பட்டவர்களை குறை கூறக்கூடாது. 24அவ்வாறு தனிப்பட்ட நபர்களை குறை கூறக்கூடாது என்றாலும், போதகன் என்ற முறையில், அவர்களை விழுங்கும் சர்ப்பத்தை நான் தாக்க வேண்டியதாயிருக்கிறது. நீங்கள் பாருங்கள், அது நான் தேவனி டத்திலிருந்து பெற்றுள்ள ஊழியமாயிருப்பதால், (Commission) அப்படிச் செய்ய நான் கடமைப்பட்டுள்ளேன், பாருங்கள். அதில் நான் உண் மையாயும் விசுவாசமுள்ளவனாயும் நிலைத்திருக்க வேண்டும். ஆனால் கத்தோலிக்கர், யூதர், முகம்மதியர், கிரேக்கர், கிரேக்க வைதீக சபையைச் சேர்ந்தவர் இவர்களில் யாராவது ஜெபம் செய்துக் கொள்ள இங்கு வந்தால், என்னுடையவர்களுக்கு உத்தமமாய் நான் ஜெபம் செய்வது போன்றே அவர்களுக்கும் ஜெபம் செய்வேன் என்பது நிச்சயம். அது சரி. ஏனெனில் அவர்களெல்லாரும் மனிதப் பிறவிகள். நான் புத்த மதத்தைச் சார்ந்தவர்களுக்கும், ஷியாக்களுக்கும், ஜைன ருக்கும், முகம்மதியர்களுக்கும் இன்னும் அநேகருக்கும் ஜெபம் செய் திருக்கிறேன். அவர்கள் ஜெபம் செய்து கொள்ளவரும்போது, நான் அவர்களை எவ்வித கேள்வியும் கேட்பது கிடையாது. நான் அவர் களுக்கு ஜெபம் மாத்திரம் செய்வேன். ஏனெனில் சுகமடைந்து ஜீவி யத்தை சற்று இலகுவாக்கிக் கொள்ள எத்தனிக்கும் மனிதப் பிறவிகள் அவர்கள். 25இங்கு குறைந்த பட்சம், வேதத்தை நன்கு கற்றறிந்த இரண்டு மூன்று வேதசாஸ்திரிகள் இருக்கிறார்கள் என்று நானறிவேன். அவர்கள் மிகவும் புத்திசாலிகள். இப்பொருளின் பேரில் மற்றவர்கள் போதித்த வைகளை அவர்கள் நன்கு கற்றறிந்துள்ளனர். இத்தகைய போதகர்களை நான் குறை கூறுகிறேன் என்று நீங்கள் எண்ணவேண்டாம். கர்த்தர் எனக்கு வெளிப்படுத்துவதை மாத்திரம் நான் உங்களிடம் கூறுகிறேன். நான் பெற்றிருப்பதும் அவ்வளவுதான். இப்பொழுது, ஒரு வண்ணாத்தியோ அல்லது உழவன் ஒருவனோ தேவனுடைய வெளிப்பாட்டைப் பெற முடியாது என்று நாம் நினைக்கக் கூடாது. ஏனெனில் நீங்கள் பாருங்கள். தேவன் உண்மையாகவே தம்மை எளிமையில் வெளிப்படுத்துகிறார். அவர் எவ்விதம் தம்மை தம்முடைய எளிமையில் வெளிப்படுத்துகிறார் என்பதை நாம் ஞாயி றன்று நிகழ்ந்த தொடக்க ஆராதனையில் பார்த்தோம். அதுதான் தேவனை மகத்துவமுள்ளவராக ஆக்குகின்றது. 26இப்பொழுது, நாம்... அதை நாம் சற்று விமர்சனம் செய்வோம். தேவன் எளிமையில் தம்மை வெளிப்படுத்துவதுதான் அவரை மகத்துவமுள்ளவராகச் செய்கின்றது, அதுதான் அவரை மகத்துவமுள்ள வராக்குகின்றது. தேவன் மகத்துவமுள்ளவர். உலகத்தின் ஞானிகள் அவரைக் கண்டுகொள்ளக் கூடாத அளவுக்கு அவர் தம்மை எளிய விதத்தில் வெளிப்படுத்த முடியும். அவர் தம்மைத்தாமே மிக எளிய வராக்கிக் கொள்வதால், உலகத்தால் அவரைக் கண்டுகொள்ள முடிய வில்லை. இப்பொழுது, கவனியுங்கள், இதுதான் இயேசுகிறிஸ்துவின் வெளிப்பாட்டில் அடங்கியுள்ள பரம இரகசியம். பாருங்கள் இதுவே... அதனிலே... அங்கே... தேவனைக் காட்டிலும் மகத்துவமுள்ளவர் யாரு மில்லை. ஆனால் அவர் தம்மை எளியவராக்கும் நிலைக்கு யாரும் அவர்களை எளியவர்களாக்கிக்கொள்ள முடியாது. பாருங்கள், அதுதான் அவரை மகத்துவம் உள்ளவராகச் செய்கின்றது. பாருங்கள்? 27இப்பொழுது, ஒரு பெரிய மனிதன் ஒருக்கால் சற்று தன்னைத் தாழ்த்திக் கொண்டு ''நீ எவ்வாறிருக்கிறாய்?'' என்று கேட்கலாம் அல்லது இவ்வாறு ஏதோ ஒன்றைச் செய்யலாம். ஆனால் அவர் தம்மை மிகவும் தாழ்ந்த நிலைக்குத் தாழ்த்திக்கொள்ள முடியாது. அவரைக் குறித்து ஏதோ ஒன்று உண்டு. அவர் ஒரு மனிதன். ஆகவே தாழ்ந்த நிலைக்குத் தாழ்த்திக்கொள்ள அவர் முயன்றாலும், நீங்கள் அறிந்து கொள்ளும் முதற்காரியம் என்னவென்றால், “மற்றவர்கள் இவ்விதம் கூறியுள்ளார் கள்'' என்று அவர் சொல்வதன் மூலம் அவர் தம்மை உயர்த்திக்கொள் கிறார். நீங்கள் பாருங்கள்? ஆனால் நமது உயர்ந்த நிலைமை தேவனுடைய பார்வையில் தாழ் மையுள்ளதாய் காணப்படுகிறது, ஆம். 28இவ்வுலகிலுள்ள கல்விமான்கள் தங்கள் ஞானத்தால் அவரைக் கண்டுகொள்ள முயல்கின்றனர். அவர்கள் அவ்விதம் செய்கையில், அவரை விட்டு விலகிச் செல்கின்றனர். பாருங்கள்? அவரைக் கணிதத் தின் மூலமாகவோ அல்லது வேறெதன் மூலமாகவோ விளங்கிக் கொள்ள விரும்பினால், ஞாபகங்கொள்ளுங்கள், வேதத்தில் அவர் வெளிப்படுத்... இல்லை, என்னை மன்னிக்கவும். ஒரு குற்றவாளியுங்கூட கண்டு கொள்ளக்கூடிய அளவில், அவர் தம்மை மிகவும் சுலபமான விதத்தில் வெளிப்படுத்துகிறார் என்பது நினைவிருக்கட்டும். “பேதையர் திசைகெட்டுப் போவதில்லை'' என்று ஏசாயா 35-ம் அதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஞானவான்கள் தங்கள் ஞானத்தினால் அவரைக் கண்டு கொள்ள விரும்பி அதன் விளைவாக அவரை விட்டு அகன்று செல்கின்றனர். இப்பொழுது, இதை மறந்துபோக வேண்டாம். நான் கூறுவது ஒலி நாடாவில் பதிவு செய்யப்படுகிறது. பாருங்கள்? ஞானவான்கள் ஞானத் தினால் அவரைக் கண்டுகொள்ள முயன்று, அவரைக் காணத் தவறுகின் றனர். பாருங்கள், எளியவர்கள் ஆவதற்குத் தகுதியுள்ள பெருந்தன்மை அவர்களிடமிருந்தால், அவர்கள் அவரைக் கண்டுகொள்வார்கள். எளிய வர்கள் ஆவதற்குத் தகுதியுள்ள பெருந்தன்மை உங்களிடமிருந்தால்! நான் கூறுவது உண்மை என்பதை அறிவீர்களா? 29நான் பெரியவர்களையும், பெரிய அரசர்களையும், சக்கரவர்த்தி களையும் சந்தித்திருக்கிறேன். அவர்களெல்லாரும் பெரிய மனிதர்கள். அதே சமயத்தில் தங்களைப் பெரியவர்களென்று எண்ணிக்கொண்டு, என்னுடன் விவாதிக்க விரும்பிய ஊழியக்காரர், அவர்களாலன்றி உல கமே இயங்காது என்று கருதும் பெருமைக்காரர்களையும் நான் சந்தித் திருக்கிறேன். ஆனால் உண்மையில் ஒரு பெரிய மனிதன் உங்களை உப சரித்து, நீங்கள் பெரியவர்கள் என்று நினைக்கும்படி செய்வான். பாருங்கள்? பாருங்கள், அவன் அவ்வளவாக அவனைத் தாழ்த்திக் கொள் கிறான். 30பாருங்கள், தேவன் மிகவும் மகத்துவமுள்ளவரானபடியால், மனி தன் இறங்கக் கூடாத நிலைக்கு அவர் தம்மை தாழ்த்துகிறார். அவ்வளவே. ஆகவே அவர்கள்... அவர்கள் அவரைக் கண்டுகொள்ள விழைகின்றனர். இப்பொழுது கவனியுங்கள். இப்பொழுது அவர்கள் வாலிபரை வேதாகமப் பள்ளி களுக்கு அனுப்பி ஒரு கலையியல் (Bachelor of Art) பட்டம் பெறச் செய்து, அதன் மூலம் அவரைக் கண்டுகொள்ள விழைகின்றனர். வேத சாஸ்திர போதகங்கள் மூலமாகவும், கல்வித் திட்டங்களின் மூலமாகவும், ஸ்தாபன திட்டங்களின் மூலமாகவும், ஆலயத்தை அழகுபடுத்து வதன் மூலமாகவும் அவரைக் கண்டுகொள்ள அவர்கள் விரும்புகின்ற னர். ஆனால் அவர் அங்கெல்லாம் இல்லை. நீங்கள் வல்லமையுடன் போரிடுகிறீர்கள். அவ்வளவே. இப்படி செய்வதனால் நீங்கள் அவரை விட்டு அகன்று சென்று விடுகிறீர்கள். 31எளியவர்களாவதற்குத் தக்க உயர்வு அவர்களிடமிருந்தால், அவரை அந்நிலையில் கண்டுகொள்வார்கள். ஆனால் எவ்வளவாக நீங்கள் ஞானத்தை நோக்கிச் செல்கின்றீர்களோ அவ்வளவாக அவரை விட்டு அகன்று செல்கிறீர்கள். நீங்கள் இதைக் காணாமல் இழந்து போகக் கூடாதென்று கருதி நான் மறுபடியும் வலியுறுத்துகிறேன். ஏதேன் தோட்டத்தின் காலம் தொடங்கி, மோசேயின் காலத்திலும் நோவாவின் காலத்திலும். கிறிஸ்துவின் காலத்திலும், யோவானின் காலத்திலும், அப்போஸ் தலரின் காலத்திலும், இந்நாள்வரைக்கும் நீ அதை கற்பனைச் செய்து ஞானத்தினால் தேவனை காண முயல்வாயானால், அவரை விட்டு இன்னு மாய் அகன்று செல்கின்றாய். அதைப் புரிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டாம், அதைச் செய்வதற்கு வேறுவழி என்பதே இல்லை. அதை விசுவாசித்து அப்படியே ஏற்றுக் கொள்ளுங்கள். பாருங்கள்? அதை புரிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டாம். 32அநேக காரியங்கள் எனக்குப் புரியாமலேயே இருக்கின்றன. இங்கு உட்கார்ந்திருக்கும் வாலிபர் நான் உண்ணும் ஆகாரத்தையே உண்ணுகிறார். ஆனால் அவருக்கு மாத்திரம் தலை மயிர் வளர்ந்திருப்பது எப்படியென்று எனக்குப் புரிவதில்லை. ஆனால் நானோ வழுக்கையாயி ருக்கிறேன். சுண்ணாம்புச் சத்து மயிர் வளரச் செய்கிறது என்கின்றனர். ஆனால் என் நகங்களை நான் அடிக்கடி வெட்டவேண்டியதாயிருக் கிறது. ஆனால் வெட்டுவதற்கு மயிரில்லை. இதை என்னால் புரிந்து கொள்ள இயலவில்லை. அந்தப் பழமொழியைப் போல... நான். 33இதன் முக்கியத் தன்மையின் நிலையினின்று மாற்றிப் பேசுவதாக நீங்கள் எண்ண வேண்டாம். நான் இன்னும் இந்த முத்திரைக்கு (ஐந் தாவது - தமிழாக்கியோன்) வரவில்லை. ஆனாலும், இதுவும் முக்கிய மானதுதான். கறுப்பு நிறமுள்ள பசு, பச்சைப் புல்லைத் தின்று, வெள்ளைப் பாலை ஈந்து, அதனின்று மஞ்சள் வெண்ணெய் கிடைப்பது எப்படி? என்னும் ஒரு பழமொழி உண்டு. இதை என்னால் நிச்சயமாக விவரிக்க முடியாது. பாருங்கள்? ஒன்று மற்றொன்றிலிருந்து உண்டாகிறது. இதன் காரணம் என்னவென்று யார் சொல்ல முடியும்? ஒரே இனத்தைச் சேர்ந்த லீலிச் செடிகளில் ஒன்றில் சிவப்பு நிற முள்ள பூக்களும், மற்றொன்றில் மஞ்சள் நிறம் கொண்ட பூக்களும், வேறொன்றில் நீல நிறமுள்ள பூக்களும் உண்டாகும் காரணத்தை யார் விவரிக்க முடியும்? அது என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஒரே சூரிய வெளிச்சம்தான் அவைகளின் மேல் படுகின்றது. ஆனால் வெவ் வேறு நிறங்கள் எங்கிருந்து வந்தன? பாருங்கள்? - அதை என்னால் விவரிக்க முடியாது. ஆனால் அந்த உண்மையை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். 34இவ்வுலகம் எப்படி கோளப்பாதையில், கிரகத்தின் சுற்றுப் பாதை யில் எப்படி நின்று கொண்டிருக்கின்றது என்பதை ஏதாவதொரு கீர்த்தி பெற்ற வேத சாஸ்திரி விவரிக்க விரும்புகிறேன். ஒரு பந்தை நீங்கள் ஆகாயத்தில் எறிந்து, அது ஆகாயத்திலேயே இன்னொரு முறை அந்த பாதையிலேயே சுற்றச் செய்ய உங்களால் கூடுமா? அது உங்களால் முடியாத காரியம். ஆயினும் பூமி சுற்றுதல் பிழையின்றி சரியான விதத்தில் அமைந்திருப்பதால், இருபது வருடங்கள் கழித்து சூரிய கிர கணம் எந்த நிமிடத்தில் உண்டாகுமென்று சரியாக நாம் கூறலாம். அவைகளுக்கு கடிகாரமோ வேறெந்த இயந்திரமோ இல்லை. எவ்வித பிழையுமின்றி சரியாக சுற்றிக்கொண்டே இருக்கின்றன. 'வட்ட அமைப் பில் சுற்றுவதை சற்று நேராக ஆக்கினால் என்ன? என்று நீங்கள் நினைக்கலாம். ஆம், அவ்விதம் செய்ய முயன்றால், நீங்கள் மூடர்களா வீர்கள். பாருங்கள்? 35ஆகவே, ஞானத்தினால் எதையும் புரிந்துகொள்ள முயலவேண் டாம். அவர் கூறுவதை அப்படியே விசுவாசியுங்கள். நீங்கள் எளிமை யுள்ளவர்களாகும்போது அதைக் கண்டு கொள்வீர்கள். அவர் எளிமை யுள்ளவராய் இருப்பதற்காக, அவர் தம்மை எளிமையுள்ளவராக செய்து கொண்டதற்காக அவருக்கு நன்றி கூறுகிறேன். இப்பொழுது வெளிப் படுத்தல் 6-ம் அதிகாரம் 9-ம் வசனத்திற்கு வருவோம். அவர் ஐந்தாம் முத்திரையை உடைத்தபோது, தேவ வசனத் தினிமித்தமும் தாங்கள் கொடுத்த சாட்சியினிமித்தமும் கொல்லப்பட்டவர்களுடைய ஆத்துமாக்களை பலிபீடத் தின் கீழே கண்டேன். 36கவனியுங்கள், ஐந்தாம் முத்திரை திறக்கப்படுவதை அறிவிக்க ஒரு ஜீவன் இங்கு இல்லை. ஆனால் நான்காம் முத்திரையை அறிவிக்க ஒரு ஜீவன் இருந்தது என்பதை இப்பொழுது நினைவில் கொள்ளுங்கள். அவ்வாறே முதலாவது, இரண்டாவது, மூன்றாவது, நான்காவது முத்திரை களை அறிவிக்க ஒவ்வொரு ஜீவன் இருந்தது. ஆனால் இங்கு எந்த ஜீவ னும் இல்லை. பாருங்கள். இப்பொழுது நீங்கள் கவனிப்பீர்களானால், நாம் முத்திரைகளில் ஒன்றைப் பார்ப்போம். நாம் நான்காவது முத்திரைக்குச் செல்வோம், பாருங்கள். அது ஏழாவது வசனம். அவர் நாலாம் முத்திரையை உடைத்தபோது, நாலாம் ஜீவனானது; நீ வந்து பார் என்று சொல்லுஞ் சத்தத்தைக் கேட்டேன். அவர் ... மூன்றாம் முத்திரையை உடைத்தபோது, மூன்றாம் ஜீவனானது நீ வந்து பார் என்று சொல்லுஞ் சத்தத்தைக் கேட்டேன். அவர் இரண்டாம் முத்திரையை உடைத்தபோது, இரண்டாம் ஜீவனானது ... நீ வந்து பார் என்று சொல்லுஞ் சத்தத்தைக் கேட்டேன். அவர் முதலாம் முத்திரையை உடைத்தபோது, முதலாம் ஜீவனானது ... நீ வந்து பார் என்று சொல்லுஞ் சத்தத்தைக் கேட்டேன். 37ஆனால் ஐந்தாம் முத்திரை உடைக்கப்பட்டபோது எந்த ஜீவனும் அங்கில்லை. இப்பொழுது சற்று கவனியுங்கள். அவர் ஐந்தாம் முத்திரையை உடைத்தபோது, பலிபீடத் தின் கீழே... உடனடியாகவே! பாருங்கள் - எந்த மிருகமும் (ஜீவனும்) அங்கே இல்லை. மிருகம் என்பது வல்லமையை குறிக்கிறது என்று நாமறி வோம். பாருங்கள்? அங்கே எந்த ஜீவனும் இல்லை. இப்பொழுது, சபையின் காலங்களை நாம் படித்தபோது, முதலாம் ஜீவன் சிங்கத்திற்கொப்பாகவும், இரண்டாம் ஜீவன் காளைக்கொப்பாக வும், மூன்றாம் ஜீவன் மனித முகம் கொண்டாதாகவும், நான்காம் ஜீவன் கழுகுக்கொப்பாகவும் இருந்ததென்றும், நான்கு வல்லமைகளைக் குறிக்கும் இந்த நான்கு ஜீவன்கள் வனாந்தரத்திலிருந்த ஆசரிப்பு கூடா ரத்தின் மாதிரியையொட்டி அப்போஸ்தலர்களுடைய நடபடிகளின் புஸ்தகத்தைச் சூழ்ந்து இருந்தன என்று நாம் பார்த்தோம். நீங்கள் அதை நன்றாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள். ஆகவே அதை மறுபடியும் போதிக்க சமயம் எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. அதை நாம் வரைந்து சரியாகக் காண்பித்தோம். வனாந்தரத்தில் மகா பரிசுத்த ஸ்தலத்திலிருந்த உடன்படிக்கைப் பெட்டி எவ்வாறு காவல் காக்கப் பட்டதோ, அதேவிதமாக ஜீவன்களும் சூழ நின்று ஆட்டுக்குட்டியும் வார்த்தையுமானவர் தேவனுடைய வார்த்தையை நிறைவேற்றுவதைக் கவனித்து கொண்டிருந்தன. 38இப்பொழுது இஸ்ரவேல் கோத்திரத்தாருக்கு கொடுக்கப்பட்டிருந்த அடையாளத்தையும் நாம் அதனதன் ஸ்தானத்தில் பொருத்தினோம். எத்தனை பேர் ஏழு சபையின் காலங்களின் பிரசங்கங்களைக் கேட்டிருக் கிறீர்கள்? உங்களில் பெருபான்மையோர்-மூன்றில் இரண்டு பாகம்கேட்டிருக்கிறீர்கள். அந்த ஜீவன்களின் தோற்றமும் இஸ்ரவேல் கோத் திரத்தாரின் அடையாளங்களும் ஒன்றே என்பதை கவனிக்கவும். பன் னிரண்டு கோத்திரத்தார்-ஒவ்வொரு பக்கத்திலும் மூன்று கோத்திரமாகநான்கு பக்கங்களிலும் இருந்தனர். இந்த நான்கு ஜீவன்களும் நான்கு திசைகளிலிருந்து இஸ்ரவேல் கோத்திரத்தாரைக் காவல் காத்துக்கொண் டிருந்தன. அதன் பின்பு நாம் சுவிசேஷ புத்தங்களுக்குச் சென்று அந்தப் புத் தங்கள் உடன்படிக்கைப் பெட்டியைப் பாதுகாக்கின்றன என்று பார்த் தோம். புது சபைக்கு அளிக்கப்பட்ட உடன்படிக்கையின் அடையாள மாக பரிசுத்த ஆவியானவர் பூமியில் இருக்கிறார் என்று நாம் கவனித்தோம். இயேசுவின் இரத்தம் பரிசுத்த ஆவியானவரை நமக்கு அனுப்பி னது. நான்கு ஜீவன்களும் இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்க ளுக்கு அடையாளமாயிருக்கின்றன. அவைகளின் தன்மை நான்கு சுவி சேஷ புத்தகங்கள். இந்த நான்கு சுவிசேஷ புத்தகங்களும் பரிசுத்த ஆவியானவருக்குப் பாதுகாப்பாயிருக்கின்றன. ஆமென்! 39நான் இப்பொழுது வியப்புறுவது... ஆறு வருடங்களுக்கு முன் னால், ஒரு பெரிய மனிதன் அப்போஸ்தலருடைய நடபடிகளின் புத்த கம் சபையின் சாரமாக (Scaffold) அமைந்துள்ளது என்று கூறினதை நான் கேட்டிருக்கிறேன். இவ்வாறு அநேக முறை கூறப்படுவதை நான் கேட்டதுண்டு. ஆனால் ஒரு உயர்ந்த பதவியிலுள்ள அந்த போதகர்அநேகர் படிக்கும் பிரபலமான புத்தகங்களை எழுதிய அவர் அப்போஸ் தலருடைய நடபடிகள் சபையில் உபதேசிக்கப்படுவதற்கு உகந்த தல்ல என்று கூறும்போது.... அப்போஸ்தலருடைய நடபடிகள் சபைக்கு அஸ்திபாராமாய் அமைந்துள்ளது - அதன் சாரமாய் அல்ல. அஸ்திபாரம்! ஏனெனில் தேவ னுடைய சபை அப்போஸ்தலருடைய உபதேசங்களை அஸ்திபாரமாகக் கொண்டு கட்டப்பட்டுள்ளதென்று வேதம் கூறுகிறது. சரி. தலையாகிய கிறிஸ்து அதன் மூலைக்கல்லாயிருக்கிறார். 40இந்த மனிதன் இவ்விதம் குறிப்பிட்டபோது, என்-என்- என் சற்றே... என் இருதயம் வெடித்து விடும் போலிருந்தது. அவ்விதம் அவர் கூறுவதில் யாதொரு வியப்புமில்லை என்று முத்திரைகளைக் குறித்து ஆராயும்போது நானறிகிறேன். ஏனெனில் அது அவருக்கு வெளிப்பட வில்லை. அவ்வளவுதான். பாருங்கள்? ஆகையால், அந்த நான்கு சுவிசேஷங்களும் அங்கு நின்றுகொண் டிருக்கின்றன. ஆனால் அதைக் கூறுவதற்கு ஏதோ ஒன்றிருக்கிறது. இப்பொழுது கவனியுங்கள், அவைகள் காவல் புரிகின்றன. 41இப்பொழுது, நாம் மத்தேயு அதிகாரத்தில் (மத்தேயு சிங்கத்திற்கு அடையாளமாயிருக்கிறது) மத்.28:19 ஐப் படித்து, அவர்கள் ஏன் கர்த் தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுத்தனர் என்று பார்த்தோம். ஆம், அந்த மத்தேயு சுவிசேஷம் அங்கு நின்று கொண்டு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்திலுள்ள ஞானஸ் நானம் என்னும் புனித விசுவாசத்தைக் காவல் புரிகின்றது. சரி, நல்லது. நான் முத்திரைகளை விட்டு விட்டு சபையின் காலங்களைக் குறித்து பேசிக் கொண்டிருக்கிறேன். 42கவனியுங்கள், இப்பொழுது, நாம் இந்த ஐந்தாம் முத்திரைக்கு வருகையில், ஐந்தாம் முத்திரையில், குதிரை மேல் சவாரி செய்பவன் இல்லை. அதை அறிவிக்க ஒரு ஜீவனும் அங்கில்லை. ஆட்டுக்குட்டி யானவர் அந்த முத்திரையை உடைத்தவுடன், யோவான்... யோவான் அதைக் காண்கிறான். அங்கே, “இப்பொழுது வா, நோக்கிப் பார். வந்து பார்,'' என்று சொல்லும்படியாக ஒன்றும் இல்லை. கவனியுங்கள், ஜீவ னின் வல்லமை என்பதே அங்கே இல்லை. அல்லது அங்கே... அவ்வாறே ஆறாம் முத்திரை உடைக்கப்பட்டபோது அதை அறி விக்க அங்கு எந்த ஜீவனும் இல்லை. ஏழாம் முத்திரை உடைக்கப் பட்ட போதும் அதை அறிவிக்க எந்த ஜீவனும் இல்லை. அதை அறிவிக்க எந்த வல்லமையும் அங்கே இல்லை. பாருங்கள், எந்த ஜீவனும் அதைச் செய்யவில்லை. அதன்மேல்... பாருங்கள். நாலாவது முத்திரைக்குப் பிறகு, ஐந்து முதல் ஏழாவது முத்திரைகள் வரை எந்த ஜீவனின் வல்ல மையும் (Beast Power) அங்கே அதை அறிவிக்கவேயில்லை. 43இப்பொழுது கவனியுங்கள். இது எனக்குப் பிரியம். ஒரே ஆள் (ஒருமை) நான்கு வேவ்வேறு குதிரைகளின் மேல் சவாரி செய்தபோது ஒரு ஜீவன் அந்த வல்லமையை அறிவித்தது. அவன் குதிரைமாறும் ஒவ்வொரு முறையும் ஒரு ஜீவன் வந்து அந்த பரம இரகசியத்தை அறி விக்கிறது. பாருங்கள்? “அதுதான் இந்த இரகசியம்”. ஏன்? அவை ஒவ்வொன்றும் இரகசியமாகவே அமைந்திருந்தன. ஆனால் ஐந்தாம் முத்திரை உடைக்கப்பட்டபோது அதை அறி விக்க ஏன் எந்த ஜீவனும் அங்கே இல்லை? கர்த்தராகிய இயேசு இன்று விடியற்காலை எனக்களித்த வெளிப்பாட்டின்படி, அது உடைக்கப்பட்ட போது சபையின் காலங்கள் ஏற்கனவே முடிவடைந்து விட்டன. சபை யின் காலங்களில் அந்திக்கிறிஸ்துவைப் பற்றிய இரகசியம் வெளிப் படுகிறது. அவன் கடைசி முறையாக எல்லா நிறங்களும் கலந்த மங்கின நிறமுள்ள குதிரையின் மேல் சவாரி செய்து கேட்டிற்குச் செல்கிறான்.. நாம் எக்காளங்களைக் குறித்துப் போதிக்கும்போது இவைகளைப் பார்க்கலாம். இப்பொழுது அதைப்பற்றி பேசத்தொடங்கினால், நாம் பேச வேண்டிய பொருளை விட்டு அகன்று விடுவோம். அவன் சவாரி செய்கிறான். 44ஆகவே தான் அதை அறிவிக்க அங்கு யாருமில்லை. இப்பொழுது, ஒவ்வொன்றுக்கும் ஒரு காரணமுண்டு என்று எழுதப்பட்டிருக்கவில்லை. ஆனால், ஆரம்பத்திலேயே நான் எல்லாவற்றிற்கும் ஒரு காரணமுண்டு என்று உங்களிடம் கூறினேன் என்பதை ஞாபகங்கொள்ளுங்கள். அந்த துளி மையைப் பற்றி நான் சொன்னது நினைவிருக்கிறதா? இது அறிவிக்கப்படாததற்கு நாம் காரணம் கண்டு பிடிக்கவேண்டும். இந்த முத்திரை உடைக்கப்பட்டபோது அதை அறிவிக்க ஒரு ஜீவனோ அல்லது ஒரு வல்லமையோ அங்கே இராமற்போனதற்கு ஒரு காரணமுண்டு. அதை தேவனால் மாத்திரமே வெளிப்படுத்தித் தரமுடியும். ஏனெனில் எல்லாமே அவர் கரங்களில் உள்ளது. அவ்வளவுதான். 45அவர் இதை வெளிப்படுத்தும் காரணம் என்னவெனில்.... நான் புரிந்து கொண்டதின்படி மீட்பின் புஸ்தகத்திலிருந்து அந்திக்கிறிஸ்துவின் தன்மை என்னவென்பதை வெளிப்படுத்த வேண்டும் என்பதாம்... அதே சமயத்தில் சபை மேலே எடுக்கப்பட்டிருக்கும். இவை சபையின் காலங்களில் நிகழுவதில்லை. அது சரி. சபை அந்தச் சமயத்தில் எடுக்கப் பட்டிருக்கும். இது சபைகள் காலத்திற்கு அப்பாற்பட்டதாகும். அது வெளிப்படுத்தல் 4-ம் அதிகாரத்தில் எடுக்கப்பட்டு அதன் ராஜாவுடன் 19-ம் அதிகாரத்தில் திரும்ப வரும். ஆனால் இந்த முத்திரைகள் முன்பு நடந்தவைகளையும், இப்பொழுது நடைபெறுபவைகளையும், இனி நடக்க விருப்பவைகளையும் அறிவிக்கின்றன. பாருங்கள்? எனவே சபையின் காலங்களில் நடந்தவைகளையும் இம்முத்திரைகள் வெளிப்படுத்துகின் றன. சம்பவிப்பது என்ன என்பதை நீங்கள் இப்பொழுது கவனியுங்கள். 46குதிரைகளில் மேல் சவாரி செய்பவனின் நான்கு கட்டங்களும் வெளியரங்கமாயின. குதிரைகளின் மேல் சவாரி செய்யும் அந்திக் கிறிஸ்துவின் நான்கு கட்டங்களும் இப்பொழுது வெளியரங்கமாயின. ஆகவே, அவைகளைக் குறித்த வேறு இரகசியம் ஒன்றுமில்லை. குதிரைகளின் மேல் சவாரி செய்தவனின் நான்கு கட்டங்களையும் தேவனுடைய நான்கு ஜீவன்கள் அறிவித்தன. இந்த நான்கு மிருகங்கள் நான்கு வல்லமைகளைக் குறிக்கின்றன. வேத அடையாளத்தின்படி மிருகம் “வல்லமைக்கு எடுத்துக்காட்டாயிருக்கின்றது. அதை நாம் நன்கு அறிந்து கொள்ள வேண்டும். வேதத்தில் கூறப்பட்ட இந்நான்கு மிருகங்களும் மனிதரின் மேல் செலுத்தப்பட்ட நான்கு வல்லமைகளை காண்பிக்கின்றன. தானியேல், ஒரு தேசம் ஆதிக்கத்திற்கு வருவதை ஒரு அடையா ளமாகக் கண்டான். உதாரணமாக ஒரு கரடி அதன் பக்கத்திலுள்ள ஒரு விலா எலும்பைப் பிடித்துக்கொண்டிருப்பதாக அவன் கண்டான். வேறொரு தேசம் எழும்பும்போது அவன் வேறொரு அடையாளத்தைக் கண்டான்- ஒரு ஆட்டுக்கடா. வேறொரு ராஜயம் ஆதிக்கத்திற்கு வரும் போது அவன் அநேக தலைகள் கொண்ட ஒரு சிறுத்தையை அதற்கு அடையாளமாகக் கண்டான். பின்னர் பயங்கர பற்கள் கொண்ட ஒரு பெரிய சிங்கம் எல்லாவற்றையும் பட்சித்துப்போட்டது. அது வேறொரு ஆதிக்கத்தைக் குறித்தது. இந்த ஆதிக்கங்களில் ஒன்று நெபுகாத்நேச் சாரின் ராஜ்யபாரமாயிருந்தது. தானியேல் இத்தகைய ராஜ்யபாரங்கள் எழும்புவதை தரிசனத்தில் கண்டான். ஆனால் இதையே நெபுகாத்நேச்சார் சொப்பனமாகக் கண்டான். தானியேல் சொப்பனத்தை விளக்கி அர்த்தம் கூறினான். அது அவன் கண்ட தரிசனத்துடன் சரியாய் ஒத்துப் போனது. 47ஆமென்! வ்யூ! ஓ, (சகோதரன் பிரான்ஹாம் தன் கரங்களை ஒன்று சேர்த்து ஒருமுறை கொட்டுகிறார் -ஆசி). நாங்கள் இங்கிருந்து புறப் பட்டுச் செல்லுமுன்பு என்ன நேர்ந்தது தெரியுமா? நீங்கள் புரிந்து கொள்கிறீர்களா? ஆறு சொப்பனங்கள் உண்டாயின். அவை தரிசனத் துடன் சரியாய் ஒத்துப்போயின. ஆமென்! பாருங்கள்? ஒரு சொப்பனத் தின் அர்த்தத்தை விவரிப்பதுதான் தரிசனம். ஒருவனுக்குத் தரிசனத் தைக் காணும் தன்மை இல்லாவிடில், தேவன் அவன் உறக்க நினைவில் (Subconscious) அவனுடன் பேசி அதை சொப்பனமாக வெளிப்படுத் துகிறார். கடைசி நாட்களில் அவர் மக்களுக்கு சொப்பனங்களையும் தரி சனங்களையும் அளித்து, அவர்களை சந்திப்பதாக தேவன் வாக்குறுதி செய்துள்ளார். பாருங்கள்? இப்பொழுது, நீங்கள் விழித்துக்கொண்டிருக்கும்போது, சில காரி யங்கள் உங்களுக்கு வெளிப்படுமாயின், அதுவே தரிசனமாகும். அப் பொழுது நீங்கள் நின்றுகொண்டு, என்ன நேர்ந்ததென்றும் என்ன நேரிடப் போகிறதென்றும் நீங்கள் தரிசனத்தில் காண்பவைகளை மற்றவர் களுக்கு எடுத்துரைக்கின்றீர்கள். ஆனால் சொப்பனம் என்பது நீங்கள் உறங்கும் நிலையில் உங்கள் ஐம்புலன்களும் வேலை செய்யாமல், உறக்க, நினைவில் (Subconsious) இருக்கும் பொழுது சம்பவிக்கும் ஒன்றாகும். சொப்பனம் நேரிடும்போது, நீங்கள் வேறெங்கோ செல்கின்றீர்கள். உங்கள் சுயநினைவுக்கு நீங்கள் வரும்போது, எங்கே சென்றிருந்தீர்கள் என்பதை நீங்கள் நினைவு கூரு கிறீர்கள். அதை வாழ்நாள் முழுவதும் நினைவில் வைத்துக்கொண்டிருக் கிறீர்கள். பாருங்கள்? அது உங்கள் உறக்க நினைவில் சம்பவிக்கும் ஒன் றாகும். ஆகவே, அது உங்கள் உறக்கநிலையில் நிகழ்வதாகும். அதன் பின் வரிசையாக, பாருங்கள்... 48''நீங்கள் இல்லாத ஒன்றாக இருக்கமுடியாது'' என்று உப்ஷா (Upshaw) என்னும் காங்கிரஸ்காரர் அடிக்கடி கூறுவார். அது முற்றிலும் உண்மையாகும். பாருங்கள். ஆகவே நீங்கள் ஞானதிருஷ்டிகாரராகப் (Seer) பிறந்தால், இரு நினைவுகளும் ஒருங்கே உங்களுக்கு இருக்க வேண்டும். தரிசனம் காண் பதற்கு மாத்திரம் ஐம்புலன்கள் கிரியை செய்யுமென்றும், சொப்பனம் காண்பதற்கும் உறக்க நினைவுகிரியை செய்யாதென்றும். நீங்கள் சொல்ல முடியாது. இவ்விரண்டும் ஒருங்கே இருப்பதால் நீங்கள் உறங்கினால் தான் அவையுண்டாகும் என்று அவசியமில்லை. நீங்கள் ஒன்றிலிருந்து வேறொன்றுக்கு மாறிக்கொள்ளலாம். இங்கே உறங்குவதற்கு போதுமான அறைகளும் கிடையாது. நீங்கள் அவ்வழியாகவும் அதை உங்களுக்குச் செய்து கொள்ள முடியாது. ஆகவே, “தேவனுடைய கிருபை வரங்களும் அவர் அழைத்த அழைப்பும் தேவனால் முன்குறிக்கப்பட்டவை.'' தேவனுடைய வரங் களும், அழைப்பும் 'மனந்திரும்புதல் இன்றியே” உள்ளன என்று வேதம் கூறுகின்றது. பாருங்கள்? அவை உலகத்தோற்றத்துக்கு முன்பே நியமிக்கப்பட்டவை. பாருங்கள்? 49இப்பொழுது, இப்பொழுது, நாம் காண்பது தானியேல் புத்தகத் தில் கூறப்பட்ட மிருகம் ஒவ்வொன்றும் ஜனங்களுக்கிடையே எழும் பின ஒரு ஆதிக்கத்தைக் குறிக்கின்றது. அது சரி. அவ்வாறே யோவான் தரிசனத்தில் கண்ட மிருகங்களும் அவ்வப்போது எழுந்த தேசங்களின் ஆதிக்கத்திற்கு அடையாளமாயிருக்கின்றன. அமெரிக்காவும் வெளிப் படுத்தல் 13-ம் அதிகாரத்தில் ஒரு ஆட்டுக்குட்டியாக வர்ணிக்கப்பட் டுள்ளது. நீங்கள் வித்தியாசமான இன்னொன்றையும் அறிந்து கொள்ள விரும்பினால்... அப்படியானால் மிருகம் அரசியல் சம்பந்தமான வல்லமையை மாத்திரம் குறிப்பதாக நீங்கள் எண்ணலாம். அப்படியானால் அது பரிசுத்த வல்லமையையும் குறிக்கின்றது, நீங்கள் இதை அறிவீர்களா? ரெபேக்காளை கவனியுங்கள். ஆபிரகாமின் வேலைக்காரனான எலி யேசர் ரெபேக்காளிடத்தில் வந்தபோது, அவன் சவாரி செய்து வந்த ஒட்டகத்திற்கு அவள் தண்ணீர் வார்த்தாள். அவள் தண்ணீர் காட்டின அதே மிருகம் அவளை தான் கண்டிராத தன் மணவாளனிடத்திற்கும், தன் எதிர்கால வீட்டிற்கும், கணவனிடத்திற்கும் அழைத்துச் செல் கின்றது. 50இன்றைக்கும் அதுவே சம்பவிக்கிறது, பாருங்கள் சபை தண்ணீர் பாய்ச்சும் அதே வித்து, தேவனுடைய வார்த்தை என்னும் வித்து, உயிர் பெற்று அவளை அவள் கண்டிராத மணவாளனிடம் கொண்டு செல்கிறது. பாருங்கள்? பாருங்கள்? என்ன அழகான பொருத்தம் பாருங்கள். ரெபேக்காள் ஈசாக்கைக் காணும்போது, அவன் தன் வீட்டை விட்டுப்புறப்பட்டு வயல்வெளி யில் இருந்தான். அவ்வாறே சபையும் கிறிஸ்துவை ஆகாயத்தில் சந்தித்த பிறகு, அவர் அவளை மாளிகைக்குள், அவளுக்கென்று ஆயத்தம் செய்யப்பட் டுள்ள தம் பிதாவின் வீட்டிற்கு அழைத்துச்செல்கிறார். ரெபேக்காளையும் ஈசாக்கு அவ்விதமே அழைத்துச் சென்றான். கவனியுங்கள். முதன் முறையாகக் காணும்போதே அன்பு உண் டாகிறது. ஓ! என்னே! ஈசாக்கைச் சந்திக்க ரெபேக்காள் ஓடோடிச் செல் கிறாள். அவ்வாறே சபையும் கிறிஸ்துவை ஆகாயத்தில் சந்தித்து அவருடன் சதாகாலமும் இருப்பாள். இப்பொழுது இந்த மிருகங்கள் வல்லமையைக் குறிக்கின்றன என்பதே வேதத்தின் கூற்றாகும். கவனியுங்கள். நீங்கள் இதை கவனிக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன். 51வெவ்வேறு நிறங்கொண்ட நான்கு மிருகங்கள் பிசாசுக்கு இருந் தன. அவைகளில் மங்கின நிறமுள்ள குதிரை முதன் மூன்று குதிரை களின் நிறங்கள் ஒருங்கே கொண்டாதாயிருந்தது-வெள்ளைக் குதிரை, சிவப்பு குதிரை, கறுப்புக் குதிரை. அவை ஒவ்வொன்றும் அவனுடைய ஊழியத்தின் ஒரு கட்டத்தைக் குறிக்கின்றது என்று நாம் கண்டோம். முதலாவது கட்டத்தில், பரிசுத்த ஆவியானவர் ஊற்றப்பட்டிருந்த மூல பெந்தெகொஸ்தே சபை அந்திக்கிறிஸ்துவின் ஆவியை ஏற்று நிசாயா வில் ஒரு ஸ்தாபனத்தை உண்டாக்கிக்கொண்டது. பின்னர் அது ஸ்தா பன குமாரத்திகளைப் பிறப்பித்தது. அவன் மூன்று முறை தன் வல்லமையை மாற்றிக் கொண்டு, நான்காம் முறையாக இந்த வல்லமை அனைத்தும் ஒருங்கே கொண்டு, மங்கின நிறமுள்ள குதிரையின் மேல் சவாரி செய்து, மரணம் என்று பெயரிடப்பட்டு, கேட்டுக்குச் செல்கிறான். அது மிகவும் வெளிப்படையாய் இருக்கிறதல்லவா? இப்பொழுது, இப் பொழுது கவனியுங்கள், அவனுக்கு இந்தக் குதிரை கொடுக்கப்பட்டு, அவன் இதின்மேல் சவாரி செய்கிறான். ஒவ்வொரு முறையும், தேவன், தேவனும்கூட... இப்பொழுது கவனியுங்கள். அந்திக்கிறிஸ்து முதலில் எவ்வாறு தோன்றினான்? வெள்ளைக் குதிரை. பாருங்கள், என்ன, அப்பாவியாய் களங்கமற்றவனாய் காணப்பட்டு வெள்ளைக் குதிரையின் மேல் சவாரி செய்கிறான் - சபையில் ஒரு சிறுபோதகம். அவர்கள் ஐக்கியத்தை விரும்பினர். உங்கள் ஐக்கியம் கிறிஸ்துவுடன் இருக்க வேண்டும். ஆனால் அவர்களோ தங்களுக்குள்ளே ஐக்கியங் கொள்ள விரும்பினர். அதில் அவர்களால் நிற்கமுடியாமல் அவர்கள் விரும்பினது... 52நல்லது, சபையிலே சிறிய உட்பூசல்கள் எழுவதை நீங்கள் அறிவீர்கள். போதகர்களாகிய நீங்கள் அதை அறிந்திருக்கிறீர்கள். பாருங்கள்? இக்காலத்து போதகர்கள் “இனம் இனத்தோடு சேரும்'' என்று கூறுவது போன்று அவர்கள் உட்பிரிவுகளை உண்டாக்கிக் கொண் டனர். ஆனால் நீங்கள் மறுபடியும் பிறந்த சகோதரராயிருந்தால், இத்த கைய மனப்பாங்கைப் பெற்றிருக்கமாட்டீர்கள். இல்லை. இப்பொழுது, நாம் - நாம் - நாம்... நம் சகோதரரில் தவறு ஏதேனும் காணப்பட்டால், நாம் அதை தேவ சமூகத்தில் வைத்து அவருக்காக ஜெபித்து, அவர் மறுபடியும் தேவனுடைய பிரசன்னத்தில் வரும்வரை அவரை நேசிப்போமாக. பாருங்கள்? உண்மையாகவே அவ்விதமாகத்தான் நாம் செய்ய வேண்டும். களைகள் காணப்படுமென்று இயேசு கூறியுள்ளார். அவைகளை பிடுங்கும்போது, நாம் கோதுமையையும் பிடுங்கிவிடாதபடி அவை களை வளரவிடவேண்டும். அதற்கேற்ற தருணம் வரும்போது அவரே இவ்விரண்டையும் வெவ்வேறாகப் பிரிக்கட்டும். பாருங்கள்? அதுவரை இவ்விரண்டையும் ஒன்றாகவே வளரவிடுங்கள். 53கவனியுங்கள். அந்தக் கிறிஸ்து மிருகத்தின் மீதேறி புறப்பட்டுச் சென்றபோது- அவன் ஒரு வல்லமை. ஓ! இது எனக்கதிக பிரியம்! நான் இப்பொழுது பக்திவசப்படத் தொடங்குகிறேன். அது ஊக்க உணர்ச்சியினால் ஏற்படுகின்றது என்று நினைக்கிறேன். கவனியுங்கள், அந்திக்கிறிஸ்து... ஓ! அந்த வெளிப்பாடு அந்த அறையில் தொங்கும் அக்கினிப் பந்து முன்னால் கிடைக்கப் பெறும்போது! ஓ சகோதரனே! அதை நான் சிறிய வயது முதல் கண்டு கொண்டேயிருந்தாலும், ஒவ்வொரு முறையும் அது என் அண்மை யில் வரும்போது, எனக்குத் திகில் உண்டாகிறது. அவர் என்னை மயக்கத் துக்குள்ளாகச் செய்கிறார். அதைக் கண்டு பழக்கம் கொள்ள முடியாது. அது மிகவும் புனிதமானது. 54கவனியுங்கள், அந்திக் கிறிஸ்து அவன் ஊழியமாகிய மிருகத் தின் (நான்கு) மீதேறி சென்றபோது, அதனுடன் போரிட தேவன் ஒரு மிருகத்தை அனுப்புகிறார். பாருங்கள்? இப்பொழுது கவனியுங்கள். ஒவ்வொரு முறையும் அந்திக்கிறிஸ்து, மிருகமாகிய குதிரையின் மேலேறிச் சென்று அவனது ஊழியத்தை அறிவிக்கும்போது, அதனுடன் போரிட தேவனும் அவருடைய மிருகத்தை அனுப்புகிறார். அவர் தம்முடைய யுத்தத்தை அதற்கு (அந்திக்கிறிஸ்து-மிருகத்திற்கு - தமிழாக்கியோன்) அறிவிக்க, அவர் அதன்மேல் (அந்த ஜீவன்மேல் (Beast) இருந்தார். இப்பொழுது வெள்ளம்போல் சத்துரு வரும்போது, கர்த்தருடைய ஆவியானவர் அவனுக்கு விரோதமாய்க் கொடியேற்றுவார்'' என்று வேதம் கூறுகின்றது. 55எனவே சத்துரு அந்திக் கிறிஸ்துவாகப் புறப்பட்டுச் சென்ற போது, அவனைச் சந்திக்க தேவன் ஒருவிதமான வல்லமையை அனுப் பினார். ஆகவே அப்பொழுது அவர்கள்... அவன் சிவப்பு நிற குதிரையின் மேல் சவாரி செய்பவனாக மறுபடியும் சென்றான். வேறொரு நிறம், வல்லமை, ஊழியத்தின் மேலேறிச் சென்றபோது, அவனுடன் போரிட்டு தம்முடைய சபையைக் காத்துக் கொள்ள தேவன் வேறொரு ஜீவனை அனுப்பினார். அவ்வாறே அவன் மூன்றாம் முறை புறப்பட்டுச் சென்றபோது, தேவன் அதை அறிவிக்க அவருடைய மூன்றாம் ஜீவனை அனுப்பினார். அவன் நான்காம் முறை சென்றபோது, தேவன் அவருடைய நான்காம் ஜீவனை அனுப்பினார். அந்திக்கிறிஸ்துவின் காலம் முடிவடை யும் போது, சபையின் காலமும் முடிவடைகிறது. கவனியுங்கள். இப்பொழுது, ஓ! இது மிகவும் நன்றாயிருக்கிறது. 56பிசாசு நான்கு மிருகங்களின்மேல் ஒன்றன்பின் ஒன்றாக மாறி அவன் பெற்றிருந்த வல்லமையை உலகத்துக்கு வெளிப்படுத்துகிறான். அது மங்கின நிறமுள்ள குதிரையுடன் “மரணத்துடன் முடிவடைகிறது. இப்பொழுது நாம் அவைகளை எதிர்த்த மிருகங்கள் கொண்டிருந்த தேவ வல்லமையைச் சற்று பார்ப்போம். அந்திக்கிறிஸ்துவை, அவனுடைய போதகத்தை, அந்திக் கிறிஸ்து வின் ஆவியை எதிர்த்துச் சென்ற தேவனுடைய முதல் மிருகம்... அந்திக் கிறிஸ்து போதக ஊழியத்தை ஏற்று முதலில் புறப்பட்டுச் செல்கிறான் என்று கவனியுங்கள். அந்திக்கிறிஸ்து முதலாவதாக போதக ஊழியமாக சவாரி செய்கிறான். அவனைச் சந்திக்கச் சென்ற மிருகத்தைக் கவனி யுங்கள். சிங்கம் யூதா கோத்திரத்து சிங்கமாகிய தேவனுடைய வார்த்தை. அந்தக் கிறிஸ்துவின் கள்ளப் போதகம் புறப்பட்டுச் சென்றபோது, அதைச் சந்திக்க உண்மையான வார்த்தை சென்றது. 57ஆகவேதான் அக்காலத்தில் ஐரினேயஸ், பாலிகார்ப் பரி. மார்டின் போன்றவர் இருந்தனர். அந்திக் கிறிஸ்து அவனுடைய கள்ளப் போதகங்களைக் கொண் டவனாய் சவாரி செய்து கொண்டு சென்றபோது, பரிசுத்த ஆவியினால் வார்த்தையாக வெளிப்பட்ட யூதா கோத்திரத்து சிங்கமாகிய தேவன், அவருடைய வார்த்தையாகிய போதகங்களை அதற்கு எதிராக அனுப்பினார். பாருங்கள், அதன் காரணமாகவே ஆதி சபை சுகமாக்கும் வரங் களையும், அற்புதங்களையும், தரிசனங்களையும், வல்லமையையும் கொண் டதாய் இருந்தது. ஏனெனில் ஜீவனுள்ள வார்த்தை யூதா கோத்திரத்து சிங்கமென்னும் வடிவில் சவாரி செய்து அந்திக்கிறிஸ்துவோடு போரிட்டார். ஆமென்! இப்பொழுது நீங்கள் அதைப் புரிந்து கொண் டீர்களா? பாருங்கள்? தேவன் தம் வார்த்தையை அனுப்புகிறார். அந்திக் கிறிஸ்து கள்ள போதகத்தை அனுப்புகிறான். உண்மையான போதகம் கள்ளப் போதகத்துடன் போரிடுகிறது. இப்பொழுது அதுதான் முத லாவது ஆகும். இப்பொழுது, அவனை எதிர்கொள்ளத் தக்கதாக சென் றது முதல் அப்போஸ்தல சபை ஆகும். இப்பொழுது, அந்திக்கிறிஸ்து அனுப்பின இரண்டாம் மிருகம் அவன் சவாரி செய்த சிவப்புக் குதிரையாகும். பூமியிலிருந்து சமா தானத்தை எடுத்துப்போடவும் யுத்தம் செய்யவும் அது அனுப்பப்பட் டது. 58இப்பொழுது, அதை எதிர்க்க இரண்டாவதாகச் சென்ற மிருகம் காளையாகும். அது பாரம் சுமக்கும் ஒரு மிருகம். எனவே, அது உழைப் புக்கு அறிகுறியாயுள்ளது. இதை நீங்கள் புரிந்துகொண்டீர்கள் என்பதை நான் அறிந்து கொள்ளட்டும். இது சற்று குழப்பமுறச் செய்யும். தியத்தீரா சபையைக் குறித்து நாம் இப்பொழுது வேதத்தில் வாசித்து அது உழைக்கும் சபை யாக இருந்ததாவென்று அறிந்து கொள்ளலாம். தியத்தீரா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்ன வெனில்; அக்கினி ஜூவாலை போன்ற கண்களும், பிரகாச மான வெண்கலம் போன்ற பாதங்களுமுள்ள தேவகுமாரன் சொல்லுகிறதாவது; உன் கிரியைகளையும்... பாருங்கள், இச்சபை கிரியைகளைச் செய்கின்றது. ஏனெனில் அத னுடன் சவாரி செய்தது உழைக்கும் மிருகம். ...உன் அன்பையும், உன் ஊழியத்தையும், உன் விசுவாச த்தையும், உன் பொறுமையையும், நீ முன்பு செய்த கிரி யைகளிலும் பின்பு செய்த கிரியைகள் (இரண்டாம் முறை ''கிரியைகள்“ என்று சொல்லப்பட்டிருக்கிறது) அதிகமாயிருக் கிறதையும் அறிந்திருக்கிறேன். வெளி 2:18-19 59பாருங்கள்? அதுதான் தியத்தீரா சபையின் காலம். அந்திக்கிறிஸ்து முதலாவதாக போதக ஊழியமாக சவாரி செய்கிறான். அதுதான் தியத் தீரா சபையின் காலத்தையடைந்தபோது, அந்த சிறு சபை உழைப்பைத் தவிர வேறொன்றையும் செய்யமுடியவில்லை. வேறொரு காரியம், காளை பலியிடப்படும் ஒரு மிருகமாகும். பாருங்கள்? அக்காலத்து சபையோரும் தங்கள் ஜீவனைத் தாராளமாகப் பலியாகக் கொடுத்தனர். இருளின் காலங்களில் கத்தோலிக்க மார்க்கம் உலகில் ஆதிக்கம் செய்த அந்த ஆயிரம் வருட காலத்தில்- விசுவாசிகள் அவர்கள் கொள்கைகளை ஏற்றுக்கொள்ள மறுத்து, அதன் விளைவால் கொல்லப்பட்டனர். அது மரணமாயினும், மரிப்பதைக் குறித்து அவர்கள் சிறிதேனும் கவலை கொள்ளவில்லை. அவர்கள் எப்படியாயினும் மரித் தனர். ஏன்? அதுதான் அக்காலத்து ஜனங்கள் கொண்டிருந்த ஆவியா யிருந்தது. 60ஆகவேதான் ஐரினேயஸ், பாலிகார்ப், யோவான், பவுல் போன்ற மகத்தானவர்கள் அதனை எதிர்த்தனர். பவுல், அதைக் கண்டு, 'நான் போன பின்பு, கொடிதான ஓநாய் கள் உங்களுக்குள்ளே வந்து, தன்னிடத்தில் இழுத்துக் கொள்ளும் மாறுபாடானவைகளைப் போதிப்பார்கள்' என்றான். மிகவும் கண்டிப்பான அந்த வயது சென்ற அப்போஸ்தலன் வாரினால் அடிக்கப்பட்டதால் முதுகெல்லாம் வரித்தழும்புகள் கொண்டவனாய் கண்ணீர்விட்டுக் கொண்டு நிற்பதைப் பாருங்கள். அவன் கோடிக்கணக்கான மைல் தூரம் ஆகாய பரப்பின் வழியாக நித்தியத்தைக் காண முடிந்தது. கொடி தான ஓநாய்கள் வருமென்பதை அவன் முன்னறிவித்தான். வரப்போகும் காலங்களிலும் அது நிலைத்திருக்குமென்று அவன் சொன்னான். கவனி யுங்கள்! 61பரி.யோவான் எல்லோரைக் காட்டிலும் அநேக வருடங்கள் உயிர் வாழ்ந்தான். அவன் பரிசுத்த ஆவியினால் அபிஷேகம் செய்யப்பட்டு நிருபங்கள் அனைத்தையும் ஒன்று சேர்த்து ஒரு வேதாகமமாக்க முயன்ற போது, ரோம அரசாங்கம் அவனைப் பிடித்து, பத்மூ தீவுக்கு நாடு கடத் தினது. தேவனுடைய வார்த்தையினிமித்தம் அவன் பத்மூ தீவில் இருந் தான். நிருபங்களை மொழிபெயர்க்க பாலிகார்ப் அவனுக்கு உதவி செய்தார். அன்றொரு நாள், மரியாள் பாலிகார்ப்பின் தீரச் செயலையும், அவள் மூலமாக தேவன் உலகிற்களித்த இயேசு கிறிஸ்துவின் போதகங்களை அவர் ஏற்றக்கொண்டதையும் பாராட்டி எழுதின கடிதத்தை நான் வாசித்துக் காண்பித்தேன். அது பார்லிகார்ப்புக்கு மரியாள் அவள் சொந்த கைப்பட எழுதின குறிப்பாகும். பாலிகார்ப் சிங்கங்களுக்கு இரையாகக் கொடுக்கப்பட்டார் என் பதை நீங்கள் அறிவீர்கள். இல்லை, அவர் சுட்டெரிக்கப்பட்டார். சிங்கத்தை கூண்டிலிருந்து அரங்கத்தில் விட காலதாமதமாகி விட்டப் படியால், அவர்கள் ஒரு பழைய குளியல் அறையை இடித்துப் போட்டு, அந்த இடத்தில் அவரைச் சுட்டெரித்தனர். 62அவர் வீதியில் தலை - குனிந்தவண்ணமாய் நடந்து கொண்டு வரும்போது, ரோம் நூற்றுக்கதிபதி அவரிடம், 'உங்களுக்கு வயது சென்று விட்டது. எல்லோரும் உங்களுக்கு மதிப்பு கொடுக்கின்றனர். இதை நீங்கள் ஏன் மறுதலிக்கக் கூடாது?'' என்று கேட்டான். அவர் வானத்தை அண்ணாந்து பார்த்தார். அப்பொழுது எங்கி ருந்தோ ஒரு சத்தம் கேட்டது. அது எங்கிருந்து வந்தது என்று யாருமே அறிந்து கொள்ள முடியவில்லை. அது, 'பாலிகார்ப், பயப்படாதே. நான் உன்னுடன் இருக்கிறேன்'' என்றது. ஊஊம். ஏன்? அவர் வார்த்தை யில் நிலை நின்றார். அவரைச் சுட்டெரிப்பதற்கென்று கட்டைகளை அடுக்கும்போது, சங்கீதம் பரலோகத்திலிருந்து தொனித்துக் கொண்டே இறங்கி வந்தது. தேவதூதர்கள் அப்பாட்டுகளைப் பாடினர். அவர் ஒரு முறைகூட பரிகசித் தவனைப் பார்த்து கண் இமைக்கவில்லை. அந்த தைரியமிக்க, தீரமிக்க மனிதர். நிலையாய் நிற்கக்கூடிய மனிதர். காலங்கள்தோறும் இரத்த சாட்சிகள் துன்புறுத்தப்பட்டு மர ணம் எய்தினர். அவர்கள் யார்? அவர்கள் தேவ ஆவியின் வல்லமை யினால் நிரப்பப்பட்டு ஊக்குவிக்கப்பட்டிருந்தனர். நான்... நான்... 63சபையே, ஒலிநாடாக்களில் இதைக் கேட்கும் சகோதரர்களே, இதை மறந்து போக வேண்டாம். நீங்கள் இதை சோதித்துப் பார்க்க வேண்டுமென்றே நான் விரும்புகிறேன். தேவனுடைய வல்லமை ஒரு வனுக்கு அளிக்கப்பட்டாலொழிய, அவன் என்னத்தைச் செய்யமுடியும்? அதற்கு அடையாளமாக, நான் இந்தப் பெட்டியை இங்கு வைத்திட விரும்புகிறேன். தேவன் அவர்களுக்கு அனுப்பும் ஆவியின் மூலமா கவே அவர்கள் கிரியை செய்ய முடியும், அந்த ஆவி அவர்கள் மத்தி யில் கிரியை செய்கின்றது. இதை நாம் சபை சரித்திரத்தின் வாயிலா கவும், கட்டவிழ்க்கப்பட்ட அந்த வல்லமைகளை முத்திரைகள் திறக்கப் படுவதன் மூலமாகவும் நிரூபிக்கலாம். சபை, தான் பெற்றிருந்த அபி ஷேகத்தின் விளைவாக கிரியை செய்தது. அது இல்லாமல் அவர்களால் ஒன்றும் செய்ய முடிந்திராது. 64இப்பொழுது, முதலாவதாக கெர்ச்சிக்கும் சிங்கம் -கலப்படமற்ற தேவனுடைய வார்த்தை. இரண்டாவதாக, தியத்தீரா காலத்தின் காளை. அது உழைக்கும் மிருகம் அல்லாமல் என்னை மன்னிக்கவும் அது பலியிடப்படும் மிருகம். அந்தச் சிறு சபை; ஆயிரம் வருடங்களாக இருளின் காலங்களின் துன்பம் அனுபவிக்கவில்லையா? ரோம சபையைச் சேராத யாவரும் உடனே கொல்லப்பட்டனர். அவர்கள் ஓரிடத்திலிருந்து மற்றொரிடத் திற்குச் சென்று துன்பம் அனுபவிக்கவேண்டியதாயிருந்தது. 65மேசன்களே (Masons) உங்கள் கவனத்தைக் கோருகிறேன். சிலுவையின் அடையாளம் உங்களுக்கு நினைவிருக்கிறதா? நான் எதைக் குறித்து பேசுகிறேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். இப்பொழுது கவனியுங்கள். நீங்கள் கவனிப்பீர்களானால், அந்த மந்தை, அதுதான் வேதாகமத்தைப் பாதுகாத்தது. பாருங்கள்? அவர்கள் துன்பப்பட வேண்டியதாயிருக்கிறது- காளை. அவர்களுக்கு நேரம் வந்தபோது... நாம் நேற்று இரவு அதைப் படித்தோம். பாருங்கள்? அது புறப்பட்டுச் சென்று ஜனங்களை இரத்த சாட்சிகளாக கொன்றபோது, அவர், 'எண்ணெயையும் திராட்சரசத்தையும் சேதப்படுத்தாதே என்றார். 66அவர்கள் என்ன செய்தனர்? அவர்கள் மனப்பூர்வமாய் அங்கு சென்று மரித்தனர். அதைக் குறித்து அவர்கள் சிறிதேனும் கவலை கொள்ள வில்லை. ஏனெனில் அந்த சபைக்கு அருளப்பட்ட ஆவி பலியும் உழைப் பும்தான். அவர்கள் தேவனுடைய ஆவியால் அபிஷேகம் செய்யப்பட்டு சுயாதீனமாக அங்கு நடந்து சென்று, தியாகம் செய்யும் வீரர்களாக மரித்தனர். ஆயிரமாயிரமாக மரித்தனர். அங்ஙனம் மரித்தவர்களில் ஆறு கோடியே எண்பது இலட்சம் பதிவு செய்யப்பட்டுள்ளது. காளை-பலி. ஓ, என்னே! இதை நீங்கள் புரிந்துகொண்டீர்களா?, (சபையார் “ஆமென்” என்று கூறுகின்றனர் -ஆசி) சரி. அது ஆயிரம் வருட காலத்தில் நேர்ந்த எதிர்ப்பை பலியின் மூலமாகத்தான் சமாளிக்க முடியும். 67பிசாசினின்று புறப்பட்ட மூன்றாம் மிருகம் கறுப்புக் குதிரை. பாருங்கள்? இப்பொழுது அந்த வல்லமையை எதிர்க்கச் சென்ற தேவனுடைய மூன்றாம் மிருகம் மனித முகம் கொண்டதாயிருந்தது - தேவனுடைய ஞானத்தைப் பெற்ற சாமார்த்தியமும் புத்திசாலிகளான மனிதர். மனி தன் மிருகத்தைக் காட்டிலும் புத்திசாலி என்று நீங்கள் அறிவீர்கள். பாருங்கள்? அவன் மிருகத்தை சமார்த்தியமாய்த் தோற்கடிக்க முடியும். மனிதன் என்பவன் தந்திரமுள்ளவன், புத்திசாலி. பாருங்கள்? அன்றியும் அவன்... அந்த - அந்த காலம், அது இருண்ட காலத்திலிருந்து வெளி வந்து கொண்டிருந்த காலமாயிருந்தது. இருளின் காலங்களில் அந்திக் கிறிஸ்து கறுப்பு குதிரையின் மேலேறி சவாரி செய்து கொண்டிருந்த போது, அவர்கள் தங்கள் - தங்கள்- தங்கள் பலிகளுக்காகவும் மற்றும் தாங்கள் செய்த எல்லாவற்றிற்காகவும் காசு வசூலித்தனர். ஆகவே காசானது வெறும்... ஓ, அது எப்படி வசூலிக்கப்பட்டது என்பது உங்க ளுக்குத் தெரியும். 68இப்பொழுது, அந்த மிருகத்தை எதிர்க்கச் சென்ற மிருகம் மனித முகம் கொண்டாதாயிருந்தது- கல்வி கற்று, விவேகமும், புத்திசாலித் தனமுமான, சிறந்த அக்காலத்துக்குரிய தேவ ஆவியினால் அபிஷேகம் பெற்ற ஞானமுள்ள மனிதர். நீங்கள் அதை கவனிக்கிறீர்களா? அவர்கள் தேவனுடைய புத்தி நுட்பமான ஞானத்துடன் அவனை எதிர்த்தனர். அதுதான் சீர்திருத்தக் காலம் - மார்ட்டின் லூதர், ஜான் வெஸ்லி, ஸ்விங்கிலி, நாக்ஸ், கால்வின் போன்றவர் வாழ்ந்த காலம். பாருங்கள்? அவர்கள் மதி நுட்ப (cunningness)முள்ளவர்களாய் இருந்தனர். இப்பொழுது சீர்த்திருத்தக் காலத்தின் இப்பக்கத்திலிருந்து நீங்கள் கவனிக்கும்போது, மனிதனின் சாமர்த்தியமே, (சபையை) இருண்ட காலத்திலிருந்து வெளியே கொண்டு வந்தது. 69அங்குள்ள ஜன்னல்களை சற்று கீழ் இறக்குவீர்களானால், அங்குள் ளோருக்குச் சற்று உஷ்ணமாக இருக்கலாம். இங்கு பிரசங்க பீடத்தில் உஷ்ணமாயுள்ளது என்பதை நான் அறிவேன். அங்கேயும் உங்களுக்கு அவ்விதமே இருக்கும் என்று எனக்குத் தெரியும். ஆகவே, அந்த ஜன்னல் களை சிறிது கீழே இறக்குங்கள். நல்லது, கவனியுங்கள். அது மனிதனுடைய புத்திசாலித்தன மாய் இருந்தது. இப்பொழுது, நீங்கள் புரிந்து கொண்டீர்களா? சாத்தானின் மூன்றாம் மிருகம் புறப்பட்டுச் சென்றபோது, அவர் களும் சாமர்த்தியமுள்ளவர்களாயினர். கவனியுங்கள். ''ஒரு பணத்துக்கு ஒரு படி கோதுமை; ஒரு பணத்துக்கு மூன்று படி வாற்கோதுமை'' பாருங்கள்? ஓ! என்னே! பாருங்கள்? பணம் சம்பாதிக்கும் திட்டம். உல கத்தின் தங்கம் அனைத்தையும் பெற்றுக்கொள்ள கையாளப்பட்ட சாமர்த் தியம். அதன் மூலம் செல்வம் உள்ளே கொண்டு வரப்பட்டது. வேதம் கூறியது அவ்வாறே நிகழ்ந்தது. அவர்கள் ஏறெடுத்த ஜெபங்களுக்கும் கூட காசு வசூலித்து, பாவ விமோசன ஸ்தலம் ஒன்றை ஏற்படுத்தி, அதிலிருந்து மரித்தோரை விடுவிப்பதற்கென்றே ஜெபம் செய்து காசு வசூலித்தனர். உங்கள் சொத்துக்களையெல்லாம் சபைக்கு உயிலாக எழுதி வைத்துவிட வேண்டும். சபையும் அரசாங்கமும் ஒன்றாய் இணைந் திருந்ததால், சபை உங்கள் சொத்துக்களை எடுத்துக்கொள்ளும். 70இன்றைக்கும் சில சுவிசேஷர்கள் இத்தகைய ஆவியைக் கொண் டிருப்பதை நாம் காண்பதில்லையா? அவர்கள் வயோதிபரின் உபகாரச் சம்பளங்களை எடுத்துக்கொண்டு அவர்களுடைய வீடுகளையும் சொத் துக்களையும் மான்யமாகப் பெற்றுக் கொள்ளுகின்றனர். என்ன சகோதரனே, நான் - நான் அதைக் குறித்து நான் பேச விரும்பவில்லை. இப்பொழுது பேசிக் கொண்டிருக்கும் பொருளின் பேரில் நிலைத்திருக்க விரும்புகிறேன். நான் பொருளினின்று அகன்று செல்வதைக் காண் கிறேன். அவர்கள் அங்ஙனம் செய்தால், அவர்களைப் பொறுத்தது. அதற் கும் எனக்கும் யாதொரு சம்பந்தமில்லை. நான் இப்பொழுது பேசிக் கொண்டிருப்பதற்கு மாத்திரம் பொறுப்புள்ளவனாயிருக்கிறேன். 71இப்பொழுது கவனியுங்கள், அந்த மிருகத்தை எதிர்க்கச் சென் றது மனித முகம் கொண்டதாயிருந்தது. அவன் மிகவும் புத்திசாலியா யிருந்தான். அவர்கள் ரொட்டித் துண்டை (Kosher) எடுத்து “இதுவே இயேசு கிறிஸ்துவின் சரீரம்'' என்றனர். நாமெல்லோரும் அறிந்துள்ளபடி, படியின் மேல் ஏறிக்கொண்டு சென்ற இந்த ஜீவன், அந்த வல்லமை யாகிய லூதர் அதைக் கேட்டு... “இதுவே இயேசுகிறிஸ்துவின் இரத்தம், இது இயேசு கிறிஸ்து வின் சரீரம்'' என்ற னர். லூதர் அதைக் கீழே எறிந்து, 'அது வெறும் ரொட்டியும் திராட்ச ரசமுமாம். அது கிறிஸ்துவின் சரீரமன்று. கிறிஸ்துவின் சரீரம் உயர்த் தப்பட்டு இப்பொழுது தேவனுடைய வலது பாரிசத்தில் உட்கார்ந்துக் கொண்டு நமக்காக பரிந்து பேசிக் கொண்டிருக்கிறது' என்றார். மனித னுடைய ஞானத்தைப் பார்த்தீர்களா? 72ஆகவே ஸ்விங்லிக்கும் கால்வினுக்கும் பிறகு வெஸ்லி தோன் றினார். லூதரின் ஸ்தாபனத்தினர் அச்சமயத்தில் சபையானது பாதுகாப்பு (Security) என்னும் கொள்கையைக் கையாண்டு, எழுப்புதல் கூட்டங் கள் இனிமேல் அவசியமில்லையென்று சொல்லிக் கொண்டிருந்தனர். ''நடக்க வேண்டியது என்றாவது நடந்தே தீரும்'' என்று அவர்கள் எண்ணினர். அவ்வளவேதான். அவர்கள் விருப்பம்போல் வாழத் தலைப்பட்டனர். அக்காலத்திலிருந்த லூத்தரன் சபையும், ஆங்கிலிகன் சபையும் சத்தியத்தை புரட்டி, ஓ, என்னே! நாடு முழுவதும் இப்பொழு துள்ளது போன்று ஊழல் மயமாக இருந்தது. இரத்தம் சிந்தின மேரிக் குப் பிறகு (Bloody Mary) எட்டாம் ஹென்றி இங்கிலாந்தில் அரசாண் டான். சபை அப்பொழுது வன்முறையைக் கடைபிடித்து ஊழல் கொண் டதாய் இருந்தது. கிறிஸ்தவ மார்க்கத்தைப் பின்பற்றுவதாகக் கூறிக் கொண்டவர்கள் ஐந்து அல்லது ஆறு மனைவிகளுடன் வாழ்க்கை நடத்தி, அவர்கள் விருப்பத்திற்கேற்ப செய்து, இவ்விதம் அசுத்தமான வாழ்க்கை நடத்தி வந்தனர். இவை யாவும் கண்ணுற்ற ஜான் வெஸ்லிக்கு, இயேசுகிறிஸ்து வின் இரத்தம் ஒருவனைப் பரிசுத்தமாக்குகிறது என்னும் சத்தியம் வேதத் தின் வாயிலாக வெளிப்பட்டது. அவர் என்ன செய்தார்? அவர் வேறே ஒரு சீர்திருத்தத்தை உண்டாக்கினார்; லூதர் செய்தது போன்று வெஸ்லி தம் நாட்களில் உலகத்தை இரட்சிப்புக்குள் கொண்டு வந்தார், பாருங்கள். அது என்ன? மனித முகம் கொண்ட ஜீவன் புறப்பட்டுச் செல்வது. 73தவறு எது என்பதைப் புரிந்து கொள்ளும் ஞானத்தை தேவன் அக்காலத்தில் அவர்களுக்கு அளித்திருந்தார். அதன் விளைவாக அவர் கள், ''அது இயேசுவின் இரத்தமல்ல. அது இயேசுவின் சரீரமல்ல, அவை இயேசுவின் சரீரத்துக்கும் இரத்தத்துக்கும் அடையாளமாய் உள்ளன'' என்று கூறினர், பாருங்கள்? இன்றைக்கும் அதன் பேரில் கத்தோலிக்கர்களும் பிராடெஸ் டெண்டுகளும் தர்க்கிக்கின்றனர். மற்ற எல்லாவற்றின் பேரிலும் அவர் களிடையே ஒரு ஒப்பந்தம் உண்டு. ஆனால் அவர்கள் கூட்டும் ஆலோசனை சங்கங்களில் இந்த விஷயத்தைக் குறித்து மாத்திரம் அவர் களிடையே வேறுபாடு காணப்படுகின்றது. அந்த ஒரு விஷயத்தில் அவர்களுக்கு ஒருமைப்பாடு இல்லை. இப்பொழுது, கவனியுங்கள். (சகோதரன் பிரசங்க பீடத்தை மூன்று முறை தட்டுகிறார்-ஆசி) பாருங் கள்? திராட்ச ரசத்தையும் ரொட்டித் துண்டையும் கிறிஸ்துவின் இரத்த மாகவும் சரீரமாகவும் மாற்ற ஒரு கத்தோலிக்க குருவானவருக்கு வல்லமை யுண்டு என்று அவர்கள் கூறுகின்றனர். ஆகவேதான் அவர்கள் ஆல யங்களில் ஒரு சிறு பீடம் காணப்படுகின்றது. அவர்கள் அடையாளத் தைப் போட்டுக்கொண்டு, அஞ்ஞான வழக்கங்களைக் கடைப்பிடித்து முழங்கால் படியிட்டு, தொப்பிகளை கழற்றி இவையனைத்தையும் செய் கின்றனர். அவர்கள் ஆலயத்துக்கு மரியாதை செலுத்தவில்லை, பீடத் தின் மேல் வைக்கப்பட்டிருக்கும் அப்பத்துக்கு (Kosher) அவர்கள் மரியாதை செய்கின்றனர். அதை சாத்தான் எவ்வளவு சாமர்த்தியமாக சபை யில் நுழைத்தான் என்று பாருங்கள். 74ஆனால், பாருங்கள். அது தவறென்று புரிந்துகொள்ள தேவன் ஒரு மனிதனுக்கு ஞானத்தின் ஆவியை அருளினார். இப்பொழுது அது சாத்தான் சவாரி செய்த மூன்றாம் மிருகத்தை எதிர்ப்பதற்கென்று அளிக்கப்பட்டது- சீர்திருத்தக்காரர். சாத்தான் சபையை மிகவும் அசுசிப் படுத்தினான். சீர்திருத்தக்காரர்கள் அவர்கள் காலத்தில் என்ன செய் தனர்? அவர்கள் சபையை விக்கிரகாராதனையான அஞ்ஞான வழிபாட்டி னின்று மீட்டு, தேவனிடத்தில் அதை மீண்டும் கொண்டு வந்தனர். பாருங்கள். இதற்காகவே, அதைச் செய்யவே, அந்த மனித மதி நுட்பம், மனித முகங்கொண்ட ஜீவன், அந்த குதிரையின்மேல் சவாரி செய் தவனை எதிர்க்கச் சென்றது. 75இப்பொழுது வெளிப்படுத்தல் 3:2ஐ சற்று வாசிப்போம். ஏதோ ஒரு காரணத்திற்காக அதை நான் குறித்து வைத்திருக்கிறேன். அது லூத் தரன் காலத்தில், சீர்திருத்தக்காரர்களின் காலத்தில் நிகழுகின்றது. லூதர் சபையைத் தொடங்கின மாத்திரத்தில் அவர்கள் ஸ்தாபனம் உண்டாக்கிக்கொண்டனர். சரி. வெஸ்லியின் காலத்திலும் அதுவே நிகழ்ந்தது. பெந்தெகொஸ்தரும் அவ்விதமாகவே ஸ்தாபனம் உண் டாக்கிக் கொண்டனர். அவர்கள் என்ன செய்தனர்? எந்த ஸ்தாபனத்தி லிருந்து அவர்கள் வெளிவந்தனரோ, அது கையாண்ட முறைகளையே அவர்கள் மறுபடியும் அனுசரித்தனர். பாருங்கள்? சர்தை சபையைக் குறித்து வெளிப்படுத்தின விசேஷத்தில் பேசப்படுகிறதை இப்பொழுது கவனியுங்கள். முதலாவது வசனம். ''சர்தை சபையின் தூதனிடம்“ என்ன கூறப்படுகின்றது என்று பார்க்க லாம். நீ விழித்துக்கொண்டு சாகிறதற்கேதுவாயிருக்கிறவை களை ஸ்திரப்படுத்து. அதாவது, ''உனக்கு போதிக்கப்பட்ட வார்த்தை '', பாருங்கள், ''உன்னிடத்தில் எஞ்சி இருக்கிற காரியங்களை.'' ...சாகிறதற்கேதுவாயிருக்கிறவைகளை... 76மறுபடியும் அவள் வெளிவந்த கத்தோலிக்க சபையைப் போன்ற ஒரு ஸ்தாபனத்துக்குள் செல்ல ஆயத்தமாயிருக்கிறாள். பாருங்கள்? உன் கிரியைகள் தேவனுக்கு முன் நிறைவுள்ளவைகளாக நான் காணவில்லை. அங்கேதான். பாருங்கள்? மறுபடியுமாக அது ஸ்தாபனத்திற்குள் செல்கின்றது. ஸ்தாபன முறைமைகள் ஏன் தவறு என்பதை நீங்கள் அறிந்து கொண்டீர்கள் அல்லவா? யார் அதைத் தொடங்கினது? கர்த் தரா? அல்லது அப்போஸ்தலரா? ரோமன் கத்தோலிக்க சபைதான் அதைத் தொடங்கினது. நான் சொல்வது தவறென்று எந்த சரித்திரக்காரனாவது நிரூபிக்கட்டும் பார்க்கலாம். அவர்கள் தங்களைத் தாய்சபை என்று அழைத்துக் கொள்கின்றனர். அவர்கள் தாய் சபைதான். ஆனால் அவர்கள் ஸ்தாபனம் ஒன்றை உண்டாக்கிக்கொண்டு, மனிதனைத் தலைவனாக்கும் ஒரு முறைமையை அதில் புகுத்தினர். நாம் அவர்களைப் போன்று ஒரு மனிதனைத் தலைவனாகக் கொள்வதில்லை. அதற்குப் பதிலாக அநேகரைக் கொண்ட ஒரு ஆலோசனை சங்கத்தையே நிறுவியுள்ளோம். அதன் விளை வாக சபையில் குழப்பமுண்டாகிறது. அது சரி. ஒரு ஆலோசனை சங்கம் எப்படி........? இது ஜனநாயகம் (Democracy) சரியென்று நாம் நினைப்பது போன்றதாகும். அது சரி என்றுதான் நானுங்கூட நம்புகிறேன். ஆனால் அது ஒருக்காலும் சரிவர இயங்காது. அதனால் இயலாது. அரசாங்கத்தை நடத்த இத்தகைய ரிக்கிகள் (Rickys) உள்ள போது அது எங்ஙனம் சரி வர இயங்கும். அது ஒருக்காலும் முடியாது. கவனியுங்கள், தேவ பக்தி கொண்ட ஒரு அரசன் ஆட்சி புரிதலே சரியான முறையாகும். 77கவனியுங்கள். மூன்றாம் ஜீவன் மனிதனுடைய தந்திரத்துக்கு அடையாளமாயிருந்தது. அக்காலத்தில் எதிர்க்கச் சென்ற சீர்திருத்தக் காரர்களுக்கு பிரதிநிதித்துவமாயிருக்கின்றது. அக்காலத்தில் சீர்திருத்தக்காரர்கள் அஞ்ஞான விக்கிரங்களை விட்டு விலகி, 'இது அப்பம், இது திராட்சரசம்' என்றனர். (சகோ. பிரான் ஹாம் தன் கரங்களை நான்கு முறைகள் கொட்டுகிறார்-ஆசி). கிறிஸ்தவ மார்க்கத்துக்கு அடையாளமாயிருப்பவைகளை அந்திக்கிறிஸ்து இப் பொழுதும் தன் மார்க்கத்தில் கடைபிடிக்கிறான் என்பதைப் பாருங்கள். அவன் அப்படித்தான் இருக்க வேண்டும். ஏனெனில், “அவன் அதற்கு விரோதமாயுள்ளவன்'', நீங்கள் பாருங்கள். அவன் ஏதாவது ஒன்றிற்கு விரோதமாக இருப்பானானால்... அவன், “நான் புத்தன்'' என்று சொன்னால் அவன் கிறிஸ்தவ மார்க்கத்துக்கு விரோதமாயுள்ளவன் என்று நாம் அறிந்து கொள்ளலாமே! ஏனெனில் அது அஞ்ஞான வழிபாடு என்று நாம் அறிவோம். ஆனால் அவன் அப்படியல்ல. அந்திக்கிறிஸ்து மிகவும் தந்திர முள்ளவன். கிறிஸ்தவ மார்க்கத்தைக் குறிக்கும் எல்லா அடையாளங் களையும் அவன் கொண்டுள்ளான். ஆனால் மூல போதகங்களிலிருந்து அவன் சற்று விலகியுள்ளான் என்பது மாத்திரமே. பாருங்கள்? அதுதான் அவனை அந்திக்கிறிஸ்துவாகச் செய்கின்றது. பாருங்கள்? ஆகவே, சீர்திருத்தக்காரன், ஜீவன் மனித ரூபங்கொண்டதாய் புறப்பட்டு எதிர்க்கிறது..... இப்பொழுது, இதை நீங்கள் மறந்து போக வேண்டாம். இதை மறந்து போக வேண்டாம் (சகோதரன் பிரான்ஹாம் பிரசங்க பீடத்தை நான்கு முறைகள் தட்டுகிறார் -ஆசி) பாருங்கள், உங்கள் வாழ்நாள் முழுவதும் அதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். பாருங்கள்? இந்த நான்கு ஜீவன்களைக் குறித்த வெளிப்பாடு உண்மையே. இது கர்த்தர் உரைக்கிறதாவது. கவனியுங்கள், விக்கிரகாராதனையைக் கொண்டு வந்தது... 78மனித முகம் கொண்ட ஜீவன் தேவனுடைய வல்லமையைக் கொண்டதாய், தேவன் அதற்கு அளித்த ஞானத்துடன் சென்று சபையை விக்கிரக வழிபாட்டினின்று விலக்கி, மறுபடியும் தேவனிடத்தில் திரும்பச் செய்தது. ஆனால்..... ஆனால் அதே சபையின் காலத்தில், ஆதியிலே ரோமாபுரி செய்த வண்ணமாய் அவர்கள் ஸ்தாபனம் உண்டாக்க தலைபட்டனர் என்பதை நாம் காண்கிறோம். இவ்விதம் ரோமாபுரி ஸ்தாபனத்திற்குக் குமாரத்தி கள் தோன்றினர். அவள் கூறுவது என்ன? ''உன்னை நான் நிறைவுள்ளவனாகக் காணவில்லை. எனவே உன் னிடத்தில் விடப்பட்டிருக்கும் சிறிது பலனை நீ ஸ்திரப்படுத்த வேண் டும்'' என்கிறார். அவர் மறுபடியுமாக விடுக்கும் எச்சரிக்கையைக் கவனி யுங்கள். (வெளி 3:3). நான் இதை சில நிமிடங்களுக்கு முன்புதான் பெற்றுக்கொண்டேன். ஆகையால் நீ கேட்டுப் பெற்றுக்கொண்ட வகையை நினைவு கூர்ந்து அதைக் கைக்கொண்டு மனந்திரும்பு... வேறு விதமாகக் கூறினால், ''அந்த சீர்கேட்டினின்று நீ வெளிவர வேண்டும்.'' பாருங்கள்? இதைக் கவனியுங்கள். நீ விழித்திராவிட்டால் திருடனைப்போல் (ஊஊம்) உன் மேல் வருவேன். நான் உன் மேல் வரும் வேளையை அறியாதிருப்பாய். 79வெறோரு இடத்தில், அவர் விளக்குத் தண்டை எடுத்துப் போடு வதாக எச்சரித்துள்ளார். பாருங்கள்? அது என்ன? சபையின் வெளிச்சம். அவள் வெளிவந்த அதே அஞ்ஞான இருளாகிய ஸ்தாபன முறை மைகளுக்குள் செல்கின்றாள். இப்பொழுதும் அவள் அதில் நிலைத்திருக் கிறாள். உத்தம் இருதயமுள்ளவர்கள்கூட ஸ்தாபனமுறை கத்தோலிக் கர்களைப் போலவே சரியென்று எண்ணியுள்ளனர். பிராடெஸ்டெண்டு கள் கத்தோலிக்கரைப் பார்த்து நகைக்கின்றனர். ஆனால் வார்த்தையின் படியே இவ்விருவரும் இந்த விஷயத்தில் சரிசமம்தான். மனித ஞானம்! 80இப்பொழுது கவனியுங்கள். ஓ! இது எனக்கு மிகவும் பிரியம். அவர்களை அவர் எச்சரிப்பதைப் பாருங்கள். இப்பொழுது, இப்பொழுது நாம்... அந்த ஜீவன்களை வேதம் இங்கே அடையாளம் காண்பிப்பது போல, ஒவ்வொரு ஜீவனும் அதனதன் காலத்துக்குச் சரியாய் பொருந்து கின்றது என்பதை நீங்கள் ஆமோதிக்கிறீர்களா? இல்லையேல், உங்கள் சந்தேகங்களை எனக்கு எழுதியனுப்புங்கள். அவைகள் சரியாக என்ன செய்தன என்பதை நாம் சபையின் சரித்திரத்தின் மூலம் அறிந்து கொள் கிறோம். நாம் இங்கே கவனித்து, அவைகள் என்ன செய்தன என்று காண்கிறோம். ஆகவே இங்கே, அந்த மிருகங்கள், நான் - நான் - நான் இதை முன்பு அறிந்திருக்கவில்லை. நான் உட்கார்ந்து கொண்டிருக்கும்போது அந்தக் காட்சி எனக்கு முன்னால் வந்தது. நீங்கள் என்னை இப்பொழுது எங்ஙனம் தத்ரூபமாய் காண்கிறீர்களோ, அவ்விதமாகவே அக்காட்சி யை நான் கண்டேன். பாருங்கள்? அது வேதத்துடன் பொருந்துவதால், அதன் விளக்கம் மிகவும் சரியாகும். ஆகவே, அது உண்மையென்று கூறுவதைத் தவிர உங்களால் வேறொன்றும் கூறமுடியாது. கவனி யுங்க ள். 81இப்பொழுது, அந்திக்கிறிஸ்துவின் நான்காவது மிருகத்துடன் போரிட அனுப்பப்பட்ட தேவனுடைய நான்காவது ஜீவன்...... நீங்கள் ஆயத்தமா? (சபையார் “ஆமென் என்கின்றனர் - ஆசி) அந்திக்கிறிஸ்து வின் நான்காவது மிருகத்துடன் போரிட இந்த கடைசி மிருகத்துடன் அனுப்பட்ட ஜீவன் அல்லது தேவனுடைய போதகத்திற்கு விரோதியான அந்திக்கிறிஸ்துவிற்கு எதிராக போரிட அனுப்பட்ட வல்லமை, ஒரு கழுகாகும். பாருங்கள்? நான்காவது ஜீவன் பறக்கும் கழுகாகும். சபை யின் காலங்களையும் வேதவாக்கியங்களையும் படித்திருக்கிறவர்களே, கடைசி காலம் கழுகின் காலம் என்பதை நீங்கள் அறிவீர்கள். தேவன் தம் தீர்க்கதரிசிகளை கழுகுக்கு ஒப்பிடுகிறார். பாருங்கள்? அது... இப் பொழுது கவனியுங்கள். கடைசிக் காலமாகிய கழுகின் காலத்தில் ஒரு தீர்க்கதரிசி தோன்றி உண்மையான வார்த்தையை வெளிப்படுத்துகிறார். தேவன் நியாயந்தீர்க்கும் முன்பாக ஒரு கழுகை (தீர்க்கதரிசியை) அனுப்புகிறார். நோவாவின் காலத்தில் அவர் ஒரு கழுகை அனுப்பினார், இஸ்ரவேல் ஜனங்களை எகிப்தினின்று வெளியே கொண்டுவரும் முன்பு, அவர் ஒரு கழுகை அனுப்பினார். ஒவ்வொரு முறையும் அவர் கடைசி கட்டத்தில் ஒரு கழுகை அனுப்புகிறார். 82ஆகவே இங்கே அவர் மறுபடியும் இக்காலத்தில் ஒரு கழுகை அனுப்புகிறார். அது வேதத்துடன் சரிவர இணைகிறது, ஆகவே வேறு விதமாக நீங்கள் எவ்வாறு கூறமுடியும்? அவர் ஏன் தீர்க்கதரிசியை அனுப்புகிறார்? கால முழுவதும் விழுந்து கொண்டிருந்த சத்தியத்தை வெளிப்படுத்துகிறவன் அவன்தான். ஆகவே, அந்த - அந்த காளை, அல்லது அந்த - அல்லது அந்த மனிதன், அல்லது சவாரி செய்து கொண்டிருந்த எந்த மிருகமாயினும் சரி, கழுகின் காலம் வரும்வரை சத்தியம் எவ்வாறு வெளிப்படக் கூடும்? காளையின் காலத்திலும், மனிதனின் காலத்திலும் அவரவர்க்கு அளிக்கப்பட்ட ஊழியத்தை அவர்கள் நிறைவேற்றினார்கள். ஏனெனில் அவை தேவனால் அனுப்பப்பட்ட ஜீவன்கள். முதலில் தோன்றியது சிங்கம். அது அக்காலத்தில் எழும்பிய அந் திக் கிறிஸ்துவை எதிர்த்தது. சாத்தான் வேறொரு வல்லமையை எழுப்பினான். அதைச் சந்திக்க தேவன் வேறொரு வல்லமையை அனுப்பினார். அதன்பின் அவர் வேறொரு வல்லமையை அனுப்பினார்; அதைச் சந்திக்கும்படியாக அவர் வேறொரு வல்லமையை எழுப்பினார். 83சாத்தானின் கடைசி ஆதிக்கம் தோன்றும்போது, பிள்ளைகளைப் பிதாக்களின் மூலவிசுவாசத்திற்குக் கொண்டு செல்வதற்கென, அவர் கழுகை அனுப்புகிறார்-கழுகின் காலம், அதன் பின்பு வேறு மிருகங்கள் இருவர் சார்பிலும் தோன்றவில்லை என்பதைக் கவனித்தீர்களா? அதனு டன் அவை முடிவு பெறுகின்றன. இப்பொழுது, நீங்கள் வெளி. 10:1-7யை எடுக்க விரும்பினால், நான் அதை உங்களுக்கு குறிப்பிட்டுக் கொண்டே வருகிறேன். கடைசி செய்தியாளன் காலத்தில் சம்பவிக்க வேண்டியது என்ன என்பதை ஞாபகங் கொள்ளுங்கள், பாருங்கள். “தேவ ரகசியம் யாவும் நிறைவேறுமென்று கூறப்பட்டுள்ளது - கழுகு. ஆமென். இப்பொழுது, சவாரி செய்த நான்கு மிருகங்களைக் கவனியுங்கள். அது பரிபூரணமாக சரியாக உள்ளது. நீங்கள் அதை விசுவாசிக் கிறீர்களா? (சபையார் “ஆமென்'' என்கின்றனர் -ஆசி) இப்பொழுது, இங்கே ஒவ்வொரு காலமும், அல்லது சவாரி செய்த வல்லமையும் உள்ளது? சத்துருவின் சவாரியாளன் செய்தது என்னவென்று காண்பிக்க வேத வசனங்கள் உள்ளன. இந்த முத்திரைகளிலே அவைகள் வெளிப் படுத்தப்பட்டுவிட்டன. சாத்தானின் குதிரைமேல் சவாரி செய்தவனை எதிர்க்க கழுகின் காலம்வரை, தேவன் அனுப்பிய ஒவ்வொரு வல்லமை யும் சரியாகப் பொருத்துகிறதை இந்த முத்திரைகள் இப்பொழுது வெளிப் படுத்தின. இப்பொழுது, இது கடைசி காலமாயிருப்பின், இந்த காலத் திற்கு, ஒரு கழுகு தோன்றவேண்டும். இப்பொழுது நினைவில் கொள் ளுங்கள். 84இப்பொழுது சிங்கத்தின் நாட்களிலே, மூல வார்த்தை வந்தது, சுமாராக நூற்றில் ஒருவர் மாத்திரமே, சிங்கத்திற்கு செவிகொடுத்தனர். காளையின் காலம் தோன்றினபோது, அப்பொழுதும் ஒரு சிலர் மாத்திரமே காளையின் காலத்தின் செய்தியை ஏற்றுக்கொண்டனர். மனிதனின் காலத்தின்போது, சீர்திருத்தக்காரர் சாமர்த்தியம் கொண்டவர்களாய், ஒரு சிறு குழுவை அக்காலத்து ஸ்தாபனத்தினின்று வெளி நடத்தினர். ஆகவே அவர்கள் என்ன செய்தனர்? சாத்தான் அதைப் பார்த்தான். ஆகவே, சாத்தான் அவர்களை மறுபடியும் அதே ஸ்தாபன முறைகளுக்கு கொண்டு சென்று அவர்களை அதற்குள் விவாகம் செய்தான். (Marries them into it). 85ஆகவே, நினைவில் கொள்ளுங்கள். கடைசியாக கழுகு தோன் றும்போது, பத்தாயிரத்தில் ஒருவரே அக்காலத்துச் செய்தியைக் கேட்டு அதை ஏற்றுக் கொள்வார்கள். இது கழுகின் காலமாகும். ஞாபகங் கொள்ளுங்கள், சவாரி செய்த அனைவரும்... இயேசுவும் கூட, ''அவர் தமது வருகையைத் துரிதப்படுத்தாவிடில், எடுக்கப்படுதலுக்கென்று யாருமே இரட்சிக்கப்படமுடியாது'' என்று கூறியுள்ளார்...?... வேதம் அவ்வாறு கூறுகின்றதா? (சபையார் “ஆமென்'' என்கின்றனர்-ஆசி) அப்படியானால் நாம் வாழும் காலம் எது? சகோதரரே, சகோதரிகளே, நாம் எக்காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை அறிகிறீர் களா? (”ஆமென்''). தேவனே, நான் மிகவும் மகிழ்ச்சிக் கொள்கிறேன். என்ன செய் வதென்றே எனக்குத் தோன்றவில்லை. இப்பொழுது இதை நானாக கூறு கிறேன் என்று நினைக்கவேண்டாம். நானும்கூட இங்கே உங்கள் மத்தி யில் இருக்கிறேன். பாருங்கள்? நான், அது நான். எனக்கு ஒரு குடும்பம் உண்டு. எனக்கு சகோதரரும் சகோதரிகளும் உண்டு? அவர்களை நான் நேசிக்கிறேன். பரலோகத்தின் தேவன் தாமே கிருபையாய் இறங்கி வந்து தரிசனங்களின் மூலமாக அவரையும் அவருடைய சத்தியத்தை யும் வெளிப்படுத்திக் கொண்டு வருகிறார். முப்பது வருடகாலமாக இவையாவும் உண்மையென்று நிரூபிக்கப்பட்டுள்ளது. நாம் இங்குள் ளோம். நாம்... ஆம், நாம் கடைசி காலத்தில் வந்துவிட்டோம். அவ்வளவு தான். இது உண்மையென்று விஞ்ஞான ஆராய்ச்சி நிரூபித்துள்ளது. தேவனுடைய வார்த்தையும் அது உண்மையென்று நிரூபித்துள்ளது. அப்படியானால் நாம் கடைசி காலத்தில் இருக்கிறோம். இந்த வெளிப் பாடு தேவனிடமிருந்து வருகிறது. இது சத்தியம். 86நீங்கள் ஏதாவதொன்றைக் கண்டுபிடித்தீர்களா? (Have you caught anything?) (சபையார் 'ஆமென்'' என்கின்றனர்-ஆசி) நீங்கள் அதை கண்டீர்களா என்று நான் சற்று அதிசயித்தேன். பாருங்கள்? ஆம், ஐயா. அப்படியானால், நான் ஞாயிறன்று அதைக் கூற வேண்டி யதில்லை. கவனியுங்கள். கவனியுங்கள். அதிசயம்! இப்பொழுது, இப் பொழுது. இப்பொழுது கவனியுங்கள். வெள்ளத்துக்கு முன்பாக இருந்த உலகத்தைக் காப்பதற்குத் தரு ணம் வந்தபோது, அவர் ஒரு கழுகை (நோவாவை) அனுப்பினார். இஸ்ரவேலரை விடுவிக்க சமயம் வந்தபோது, அவர் மறுபடியும் ஒரு கழுகை அனுப்பினார். யோவான் பத்மூ தீவிலிருந்தபோதும், இந்த செய்தி அவ்வளவு பரிபூரணமாய் இருந்ததால், அவர் அதை (It) ஒரு தூதனிடத்தில் (Angel) ஒப்படைக்க முடியாதவராய் இருந்தார். ஒரு தூதன் (angel) என்பவன் ஒரு செய்தியாளன் (messenger) என்று நீங்கள் அறிவீர்கள். ஆனால் அந்தச் செய்தியாளன் ஒரு தீர்க்கதரிசியும்கூட என்பது உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? (சபையார் “ஆமென்'' என்கின்றனர் -ஆசி) அதை நாம் நிரூபிப்போம். வெளிப்படுத்தல் 22-ம் அதிகாரம்- அவன் ஒரு கழுகா என்பதை நாம் பார்ப்போம். ஆம். பாருங்கள். அவன் ஒரு... நிச்சயமாக, அவன் ஒரு தூதன், அவன் அந்த செய்தியாளன், ஆனால் வெளிப்படுத்தின விசேஷம் முழுவதையும் அவனுக்கு (யோவான் - தமிழாக்கியோன்) வெளிப்படுத்தியது ஒரு தீர்க்கதரிசியாவான். வெளிப்படுத்தின விசேஷம் 22ஆம் அதிகாரம் 19வது வசனம்நான் இங்கு எழுதி வைத்துள்ளது அதுவே என்று நம்புகிறேன்... 22:19, ஒருவேளை நான் தவறாக இருக்கக்கூடும். இல்லை. (யாரோ ஒருவர் ''ஒருவேளை அது 22:9-ஆக இருக்கலாம் என்கிறார் - ஆசி) 22:9-ஆம் அதுதான். நான் 22:9-வது வசனத்தைத்தான் பார்த்துக் கொண்டிருந் தேன். அதுசரி. ஓ, ஆம், இங்கே உள்ளது. அதற்கு அவன்: நீ இப்படிச் செய்யாதபடிக்குப்பார்; உன் னோடும் உன் சகோதரரோடும், தீர்க்கதரிசிகளோடும்.... நானும் ஒரு ஊழியக்காரன். யோவான் எதைக் காண்கிறான் என்று பாருங்கள். யோவானாகிய நானே இவைகளைக் கண்டும் கேட்டும் இருந்தேன். இப்பொழுது யோவான் இப்புத்தகத்தை முடிக்கும் தருணம் இது. இதுதான் அப்புத்தகத்தின் கடைசி அதிகாரம். நான் கேட்டுக் கண்டபோது, இவைகளை எனக்குக் காண் பித்த தூதனை வணங்கும்படி அவன் பாதத்தில் விழுந்தேன். ஆகவே, “அவன்” அதன்பின், “அந்த தூதன்'', பாருங்கள். அதற்கு அவன்: (என்னிடம்) நீ இப்படிச் செய்யாதபடிக்குப் பார்; எந்த ஒரு உண்மையான தீர்க்கதரிசியையும், எந்த ஒரு செய்தி யாளனையும் யாரும் வணங்கக்கூடாது. பாருங்கள், தொழுகை என்பது தேவன் ஒருவருக்கு மட்டுமே. நீ இப்படி செய்யாதபடிக்குப் பார்; உன்னோடும் உன் சகோதரரோடும் தீர்க்கதரிசிகளோடும், இந்தப் புஸ்தகத்தின் வசனங்களைக் கைக்கொள்கிறவர்களோடும்கூட நானும் ஒரு ஊழியக்காரன்; தேவனைத் தொழுதுகொள் என்றான். 87பாருங்கள்? இப்பொழுது, இந்தப் புஸ்தகம் மிகவும் முக்கியமா னது; இது தேவனுடைய வார்த்தையாயிருக்கிறது. இப்பொழுது கவனி யுங்கள். தேவனுடைய வார்த்தையை கொண்டு வரப்பட வேண்டு மெனில், அது ஒரு தீர்க்கதரிசியால் கொண்டு வரப்பட வேண்டும். ஏனெனில் அவனிடத்தில்தான் தேவனுடைய வார்த்தை வரும். அதைக் குறித்த ஒரு கேள்வியை நீங்கள் இந்தப் பெட்டியில் போடுவீர்கள் என்று நான் எதிர்பார்க்கிறேன். அவ்விதம் கேள்வி கேட்க இருப்பவர்களை நான் சிறிது முந்திக் கொள்ளலாம் என்று நினைத்தேன் என்று நீங்கள் அறிவீர்கள். அதைப் போன்ற ஒன்று அங்கே உள்ளே இருக்கிறது என்று நான் உணருகிறேன். இவ்விதமாக நான் அவை களைப் (கேள்விகளை) பெற்றுக் கொள்வேன் என்று நினைத்தேன், நீங்கள் பாருங்கள். பாருங்கள்? தேவனுடைய வார்த்தை ஒவ்வொரு வார்த்தையும் கொண்டு வரப் படுகின்றது. பாருங்கள்? வேதம் ஒருபோதும் அதன் முறைகளை மாற்று வது கிடையாது. அது அவ்விதமே உள்ளது. ஆகவே நாம் எதிர்பார்த் துக் கொண்டிருக்கும் அந்த தீர்க்கதரிசியிடமே தேவனுடைய வார்த்தை உண்டாகும். இப்பொழுது, வெளி. 10:1,7 கவனியுங்கள். 88இப்பொழுது, மறுபடியுமாக 9-ம் வசனம் படிப்போம். இங்கு நாம் பெறுவது... நாம்... அதைப் படிப்பதற்கு முன்பாக, உங்களை ஒன்று கேட்க விரும்புகிறேன். இந்த முத்திரைகளை நாம் கடந்து செல்வதற்கு முன்பாக (நான்கு முத்திரைகள் - தமிழாக்கியோன்). இதை நீங்கள் நன்றாக புரிந்து கொண் டீர்களா? கழுகுக்குப் பின்பு வேறொரு வல்லமை புறப்பட்டுச் செல்வது கிடையாது. பாருங்கள். அந்திக்கிறிஸ்து ஒவ்வொரு முறையும் ஒரு வல் லமையை அனுப்பும்போது, அதை எதிர்க்க தேவன் ஒரு வல்லமையை அனுப்பினார். அந்திக்கிறிஸ்து வேறொரு வல்லமையை அனுப்பும் பொழுது அதை எதிர்க்க தேவன் வேறொன்றை அனுப்பினார். அதன்பின் அவன் மற்றொன்றை அனுப்பினான்; அதை எதிர்க்க தேவன் வேறொன்றை அனுப்பினார். பாருங்கள்? கடைசியாக கழுகு தோன்றும்போது, ஆரம் பத்தில் இருந்தவாறே அது அவருடைய வார்த்தையாக அமைந்திருக் கும். 89இப்பொழுது, கவனியுங்கள். நாம் எதிர்பார்க்கும் அந்த மனிதன் எலியாவின் ஆவியைப் பெற்றிருப்பான். அவன் எலியாவல்ல; ஆனால் அவனைப் போன்ற ஒருவனாக இருப்பான். ஸ்தாபனங்களின் தவறான போதகங்களில் விழுந்து கிடக்கும் மக்களை, பிதாக்களின் மூல விசுவா சத்திற்குக் கொண்டு செல்வதே அவன் ஊழியமாயிருக்கும். இது வேதத் துடன் ஒத்ததாயிருக்கிறது. அதைக் குறித்து நான் வேறொன்றையும் கூற விரும்பவில்லை. ஏனெனில்... அது அவ்விதமாகவே இருக்கின்றது. நீங்கள் அங்கேதான் வரவேண்டும். நான் கூறினது உண்மையாகும். நீங்கள் அதை எவ்விதம் புரட்டி அதற்கு வித்தியாசமான வியாக்கி யானங்கள் கொடுத்தாலும் எனக்குக் கவலையில்லை. பாருங்கள்? நான் கூறினவிதமாகவே அது அமைந்திருக்கும். இப்பொழுது கவனியுங்கள். வெளிப்படுத்தல் 6:9ல் காணப்படும் பலி பீடத்தின் கீழுள்ள ஆத்துமாக்களைக் குறித்து சிந்திப்போம். இப்பொழுது இந்த விஷயத்தில் உண்மையாகவே நம்மிடையே கருத்து வேறுபாடு தோன்றப்போகிறது. ஆனால் சற்று கவனியுங்கள், சற்று... பாருங்கள்? நானுங்கூட உங்களைப்போன்றே வித்தியாசமான கருத்தைக் கொண்டிருந்தேன். ஆனால் அது சரியாக அமையவில்லை. பலிபீடத்தின் கீழ் காணப்படும் ஆத்துமாக்கள் ஆதி சபையில் இரத்த சாட்சியாக மரித் தவர்கள் என்று நானும் எண்ணியிருந்தேன். டாக்டர் யூரியா ஸ்மித் (Dr. Uriah Smith) என்பவரும் மற்றவரும் அவ்விதமே கூறியுள்ளனர். பாருங்கள். ஆனால் நானும் அவ்விதமே நினைத்தேன். ஆனால் பரிசுத்த ஆவியானவர் அதைக் குறித்த தரிசனத்தை எனக்குக் காண்பித்தபோது, அது நான் நினைத்தபடியல்ல நீங்கள் ஒருக்கால், நல்லது, எனக்கு அதைக் குறித்து தெரியாது' என்று சொல்லலாம். 90நல்லது, இப்பொழுது, ஒரு நிமிடம் பொறுங்கள்; நாம் அதை கண்டுபிடிக்கலாம். கவனியுங்கள். இவர்கள் மணவாட்டி சபையின் ஆத்துமாக்களல்ல. இல்லவே இல்லை, பலிபீடத்தின் கீழுள்ள ஆத்துமாக் கள், அங்கு காத்துக் கொண்டிருக்கும் மணவாட்டி சபையென்றும், அவர்கள் 'எதுவரைக்கும் ஆண்டவரே? எதுவரைக்கும் ஆண்டவரே?' என்று சத்தமிடுவதாகவும் எண்ணியிருந்தோம். அதை நான் மறுபடி யும் படிக்கிறேன். அப்பொழுது அதை நன்றாகப் புரிந்துகொள்வோம்; அவர் ஐந்தாம் முத்திரையை உடைத்தபோது, தேவவசனத் தினிமித்தமும் தாங்கள் கொடுத்த சாட்சியினிமித்தமும் கொல்லப்பட்டவர்களுடைய ஆத்துமாக்களைப் பலிபீடத் தின் கீழே கண்டேன். 91பாருங்கள்: “தேவவசனத்தினிமித்தமும் தாங்கள் கொடுத்த சாட் சியினிமித்தமும்..!..'' அதை மனதில் பதித்துக் கொள்ளுங்கள். ஒரு நிமிடம் பொறுங்கள், பாருங்கள்? அவர்கள்: பரிசுத்தமும் சத்தியமுமுள்ள ஆண்டவரே, (பாருங்கள்?) தேவரீர் பூமியின் மேல் - குடியிருக்கிறவர்களிடத்தில் எங்கள் இரத்தத்தைக் குறித்து எதுவரைக்கும் (பாருங்கள்?) நியாயத்தீர்ப்புச் செய்யாமலும் பழிவாங்காமலும் இருப்பீர் என்று மகா சத்தமிட்டுக் கூப்பிட்டார்கள். அப்பொழுது அவர்கள் ஒவ்வொருவருக்கும் வெள்ளை அங்கிகள் கொடுக்கப்பட்டது; அன்றியும், அவர்கள் தங்களைப் போலக் கொலை செய்யப்படப் போகிறவர்களாகிய தங்கள் உடன் பணிவிடைக்காரரும் தங்கள் சகோதரருமானவர்களின் தொகை நிறைவாகுமளவும் இன்னும் கொஞ்ச காலம் இளைப்பாற வேண்டும் என்று அவர்களுக்குச் சொல்லப் பட்டது. 92இப்பொழுது, ஐந்தாம் முத்திரை உடைக்கப்பட்டபோது, சபை ஏற்கனவே எடுக்கப்பட்டுவிட்டது என்பதைக் கவனியுங்கள். அப்படி யானால் இவர்கள் ஆதிசபையின் காலத்தில் கொல்லப்பட்டவர்கள் அல்ல. இப்பொழுது, இப்பொழுது, தயவு செய்து உங்கள் கவனத்தைச் செலுத்துங்கள். ஏனெனில் இது வாக்குவாதமுள்ள ஒரு பிரச்சினை. ஆகவே நீங்கள் நன்றாய் கவனிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். குறித்துக் கொள்ள உங்களிடம் காகிதமும் எழுதுகோலும் இருக்கின் றன. இப்பொழுது, இதை நீங்கள் கவனிக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன். இப்பொழுது, ஆதிகாலத்தில் இரத்தசாட்சிகளாய் மரித்த நீதிமான் களும், சபை காலங்களிலிருந்த மற்ற நீதிமான்களும் - மணவாட்டி சபை- இது நிகழும்போது ஏற்கனவே எடுக்கப்பட்டுவிட்டபடியால், அவர்கள் பலிபீடத்தின் கீழ் இருக்கமுடியாது. அவர்கள் மகிமையில், மணவாட்டியுடன் இருப்பார்கள். இப்பொழுது கவனியுங்கள், வெளிப் படுத்தல் 4-ம் அதிகாரத்தில் அவர்கள் எடுக்கப்பட்டனர். 93அங்ஙனமாயின், பலிபீடத்தின் கீழுள்ள ஆத்துமாக்கள் யார்? அதுதான் அடுத்த காரியமாகும். அவர்கள் ஆதி சபை காலத்து சபை யல்ல என்றால் பின் அவர்கள் யார்? அவர்கள்தாம் ஒரு தேசமாக இரட்சிக்கப்படவிருக்கும் இஸ்ரவேலர், அவர்கள் முன்குறிக்கப்பட்ட வர்கள். அவர்கள் இஸ்ரவேலர். அவர்கள் இஸ்ரவேலரே. நீங்கள், 'ஒரு நிமிடம் பொறுங்கள், அது ஒருக்காலும் இல்லை' என்று சொல்லலாம். நான் கூறுவது உண்மை . ஓ, ஆம், அவர்கள் இரட்சிக்கப்பட வேண்டும். இந்த சச்சரவை இப்பொழுது ஒரு நிமிடத்தில் நாம் தீர்த்துக் கொள் ளலாம். அதைக் குறித்த ஐந்து அல்லது ஆறு வேதவாக்கியங்கள் உண்டு. அவைகளிலிருந்து ஒரு வேத வாக்கியத்தை மாத்திரம் இப்பொழுது தெரிந்து கொள்ளலாம். ரோமருக்கு எழுதிய புத்தகத்தில் 11-ஆம் அதிகாரத்தில் நாம் அதைக் காணலாம். முதலில் நாம் சற்று படிப்போம். அப்பொழுது, நாமே அதை பெற்றுக் கொள்வோம். ரோமர் 11ம் அதி காரம், 25, 26 வசனங்களைப் பார்ப்போம். இப்பொழுது, பவுல் கூறிவதைக் கவனிப்போம். 94பவுல், “அவன் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல் வேறொரு சுவிசேஷத்தை” (என்ன) வானத்திலிருந்து வந்த தூதன் பிரசங்கித் தாலும் அவன் சபிக்கப்பட்டவனாயிரக்கடவன் என்று கூறியுள்ளான். கவனியுங்கள். மேலும், சகோதரரே, நீங்கள் உங்களையே புத்திமான் களென்று (அங்கே பாருங்கள்) எண்ணாதபடிக்கு ஒரு இரக சியத்தை (ஊம்) நீங்கள் அறியவேண்டுமென்றிருக்கிறேன்: அதென்னவெனில், புறஜாதியாருடைய நிறைவு உண்டாகும் வரைக்கும் இஸ்ரவேலரில் ஒரு பங்குக்குக் கடினமான மனதுண்டாயிருக்கும். (ஆங்கிலத்தில், இஸ்ரவேலருக்குச் சிறிது குருடான நிலை ஏற்பட்டுள்ளது என்னும் அர்த்தத்தில் எழுதப்பட்டுள்ளது- தமிழாக்கியோன்). 95கடைசி புறஜாதி மணவாட்டி உட்பிரவேசிக்கும்வரை இஸ்ர வேலர் குருடாயிருப்பார்கள். இந்த பிரகாரம் இஸ்ரவேலரெல்லாரும் இரட்சிக்கப்படு வார்கள்: எழுதப்பட்டுள்ளபடி மீட்கிறவர் சீயோனிலிருந்து வந்து அவபக்தியை யாக்கோபை விட்டு விலக்குவார். நான் கூறினது சரியா? இப்பொழுது பலிபீடத்தின் கீழுள்ளவர் கள் இஸ்ரவேல் ஜனங்கள். கவனியுங்கள். நாம் இரட்சிக்கப்படுவதற் கென இஸ்ரவேலர் குருடாக்கப்பட்டனர். அதை நீங்கள் நம்புகின் றீர்களா? (சபையார் 'ஆமென்'' என்கின்றனர்-ஆசி) யார் அவர்களை குருடாக்கினது? தேவன். தேவன் தம் சொந்த பிள்ளைகளைக் குரு டாக்கினார். 96இயேசுவின் இரத்தம் சிலுவையில் சிந்தப்படவேண்டுமென்று அவர்கள் கூக்குரலிட்டுக் கெக்கலித்ததில் (howling) அதிசய மொன்றுல்லை. அவர்கள் அவருடைய பிள்ளைகள். அவர் வேத வார்த்தை. அவர் தாமே வார்த்தையாயிருந்தார். அவர்கள் அவரைச் சந்தோஷமாக ஏற்றுக் கொள்வார்கள் என்று அவர் அறிந்திருந்தார். ஆனால் அவர்கள் அவரை அறிந்துகொள்ளாதபடிக்கு அவர்கள் கண்களைக் குருடாக்கினார். அவர் எளிமையான விதத்தில் தோன்றி அவரை ஏற்றுக்கொள்ளாதவாறு அவர்களைக் குருடாக்கினார். பாருங்கள்? அவர்கள் அவ்விதம் செய் வார்கள் என்று வேதம் கூறுகிறது. அவர் அவர்களை குருடாக்கினார். அவர்கள் குருடாக்கப்பட்டனர். இயேசுவும் அவர்கள் மேல் பரிதாபம் கொண்டு, ''பிதாவே இவர்களுக்கு மன்னியும். தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே'' என்று ஜெபித்தார். பாருங்கள்? அவர்கள் குருடாயிருந்தனர். அவர்கள் ஒரு நோக்கத்துக்காக குருடாக் கப்பட்டதாக பவுல் அறிவிக்கிறான் - நமக்காக. 97கவனியுங்கள். இதை நீங்கள் நன்கு கவனிக்க விரும்புகிறேன். “அவர்களுக்கு அங்கிகள் கொடுக்கப்பட்டன.'' அவர்களிடம் அங்கிகள் இல்லாமலிருந்தன. அவர்கள் ஒவ்வொருவரும் வெள்ளை அங்கிகள் கொடுக்கப்பட்டன. ஆனால் பரிசுத்தவான்களுக்கு ஏற்கனவே அங்கிகள் இருந்தன; அவர்கள் அதை இங்கே பெறுகின்றனர். ஆனால், அங்கே ''அவர்களுக்கு அங்கிகள் கொடுக்கப்பட்டன''. பரிசுத்தவான் களுக்கு ஏற்கனவே அங்கிகள் இருந்தன. அவர்கள் சென்றுவிட்டனர். பாருங்கள்? பாருங்கள்? அவர்கள்... 98ஆனால் இஸ்ரவேலருக்கோ தருணம் அளிக்கப்படவில்லை. ஏனெ னில் தேவனுடைய கிருபையானது நிறைவேறத்தக்கதாக புறஜாதி களிடத்திலிருந்து மணவாட்டியானவள் தெரிந்தெடுக்கப்படுகிறாள். அதுசரியா? (சபையார் “ஆமென்” என்கின்றனர் -ஆசி). யோசேப்பின் வரலாற்றிலிருந்து ஒரு அழகான உதாரணத்தை எடுத்துரைக்க விரும்புகிறேன். தேவ ஆவியைப் பெற்றிருந்த யோசேப்பு கழுகு - அவன் சகோதரர்கள் மத்தியில் பிறந்தான், அவ்வாறே உண்மை யான சபையும் பிற சபைகளின் மத்தியில் தோன்றினது, அவன் சொப் பனங்களின் அர்த்தத்தை விவரித்தான். அவன் தரிசனங்களைக் கண் டான். இதனால் அவனுடைய சகோதரர் அவனை வெறுத்தனர். அவன் பிதாவோ அவனை நேசித்தார். கவனியுங்கள். அவன் தன் சகோதரரால் புறக்கணிக்கப்பட்டான் என்பதைக் கவனியுங்கள்-அவன் தகப்பனால் அல்ல. அவர்கள் அவனை ஏறக்குறைய முப்பது வெள்ளிக்காசுக்கு விற்றுப்போட்டனர். அவனைக் குழியில் தள்ளி அவன் மரித்துப் போனான் என்று எண்ணினர். ஆனால் குழியிலிருந்து அவன் எடுக்கப்பட்டு, பார்வோனின் வலது பாரிசத்திலே உட்கார்ந்தான். ஆகவே அவனுடைய சகோதரர் அவனைத் தள்ளிவிட்டதன் விளைவாய் அவனுக்கு ஒரு புறஜாதி மணவாட்டி கொடுக்கப்பட்டாள். தன்னுடைய சொந்த ஜனங்களிலிருந்தல்ல. அதனால், அவன் எப்பிராயீமையும், மனாசேயையும் பெற்றான். அவர்கள் இஸ்ரவேல் கோத்திரத்தில் சேர்க்கப்பட்டனர். அவன் கைகளைக் குறுக்கே வைத்ததனால் ஆசீர்வாதம் மூத்தவனி டத்திலிருந்து இளையவனுக்குச் சென்றது- யூதரிலிருந்து புறஜாதிகளுக்கு, பாருங்கள்? அதாவது, இளைய சபைக்கு ஆசீர்வாதம் அளிக்கப்பட்டது. அவன் தன் கைகளை குறுக்காக வைத்தான். தாய்சபை சூரியனில் வீற் றிருந்து இக்குழந்தையை ஈன்றாள். அவனைப் பெறும்படியாக இஸ்ரவேல் தன் கைகளை குறுக்கே வைத்தான். இது ஒரு முன்னடையாளமாக இருக் கிறது என்பதைக் கவனியுங்கள். ஆகவே, யோசேப்பு... யோசேப்பின் இருகுமாரரும் புறஜாதி தாயிலிருந்து தோன்றிய வர்கள். ஆகவே இஸ்ரவேல் மணவாட்டியும், யாக்கோபின் கரங்களைக் குறுக்கிடச் செய்த அதே பரிசுத்த ஆவியின் மூலமாய், அவர்கள் கொண் டிருந்த வைதீக முறைகளைக் கைவிட்டு, கிறிஸ்தவ முறைகளை அனு சரிப்பார். யாக்கோபு, “தேவன் என் கைகளைக் குறுக்கிடும்படி செய் தார்'' என்றான். அவனாகவே அதைச் செய்யவில்லை. 99கவனியுங்கள், யோசேப்பு அவன் சகோதரரால், அவன் ஜனங் களால் புறக்கணிக்கப்பட்டு புறஜாதி மணவாட்டியைப் பெற்றுக் கொண்டான். இயேசுவும் தம் சொந்த ஜனங்களாகிய யூதரால் புறக் கணிக்கப்பட்டு புறஜாதி மணவாட்டியைப் பெற்றுக்கொண்டார். இப்பொழுது நாம் சிலவற்றைப் படிப்போம். அப்போஸ்தலர் 15:22ஐ நான் இங்கு குறித்து வைத்திருக்கிறேன். ஓ, நாம் எப்படி யாயினும் இதைப் போன்றதையே போதிக்க வேண்டியுள்ளோம். இப்பொழுது, நான் இதை சரியாகக் குறித்து வைத்துள்ளேன் என்று நம்புகிறேன். அப்போஸ்தலர் 15:14 சரி. இது இப்பொழுது சரியாகவே உள்ளது என்று நான் நம்புகிறேன். சரி. ''சிமியோன் விவரித்துச் சொன்னாரே...'' இல்லை. நாம் 13-ம் வசனத்திலிருந்து ஆரம்பிப்போம். அவர்கள் பேசி முடித்த பின்பு, யாக்கோபு அவர்களை நோக்கி... 100இப்பொழுது, என்ன நேர்ந்ததென்று பாருங்கள். அவர்கள் யூதரா யிருந்தும் புறஜாதிகளிடம் சென்றதால், பாருங்கள்? அவர்களிடையே முறுமுறுப்பு உண்டானது. பாருங்கள்? அவர்கள் பேசி முடிந்தபின்பு, யாக்கோபு அவர்களை நோக்கி, ....சகோதரரே, எனக்குச் செவிகொடுங்கள். தேவன் புறஜாதிகளினின்று தமது நாமத்திற்காக ஒரு ஜனத்தைத் தெரிந்துகொள்ளும்படி, முதன்முதல் அவர்களுக்குக் கடாட்சித்தருளின விதத்தைச் சிமியோன் (அதாவது, சீமோன் பேதுரு) விவரித்துச் சொன்னாரே. ஊம். பாருங்கள். என் மனைவியின் பெயர் ப்ராய் (Broy) என்ப தாகும். ஆனால் நான் அவளை விவாகம் செய்து கொண்ட பிறகு அவள் பிரான்ஹாம் என்னும் பெயரை ஏற்றுக்கொண்டாள். பாருங்கள்? இயேசுவும் புறஜாதிகளிலிருந்து தம்முடைய சபையை அல்லது தம் மணவாட்டியைத் தெரிந்துகொண்டார் என்று வேதவாக்கி யம் கூறுகிறது. யோசேப்பு அதற்கு உதாரணமாயிருக்கிறான். 101இப்பொழுது கவனியுங்கள். பலிபீடத்தின் கீழ் காணப்படும் ஆத்துமாக்கள் எய்க்மன் (Eichman) போன்ற பாவம் நிறைந்தவர்களால் கொல்லப்பட்டு, உயிர்த் தியாகம் செய்து மரித்தனர். பாருங்கள்? கோடிக்கணக்கில் மரித்த அவர்கள், தங்கள் கொண்டிருந்த சாட்சியில் நிலைநின்றனர். ஆனால் அவர்களெல்லாரும் யூதர்கள். இப்பொழுது, ஞாபகங் கொள்ளுங்கள் அது என்ன? ''அவர்கள் தேவ வசனத்தினிமித்தம் கொல்லப்பட்டனர்'' என்பதைக் கவனியுங்கள். கிறிஸ்துவுக்கு சாட்சியாக அல்ல. இது உங்களுக்குப் புரிகின்றதா? ஆனால் நினைவில் கொள்ளுங்கள். சபையின் காலத்தில் இரத்த சாட்சிகளாக மரித்தவர்கள். தேவவசனத்தினிமித்தமும், கிறிஸ்துவைப் பற்றிய சாட்சியினிமித்தமும் மரித்தனர் என்பதை ஞாபகங் கொள் ளுங்கள். அதை உங்களில் எத்தனை பேர் அறிந்திருக்கிறீர்கள்? (சபையார் “ஆமென்'' என்கின்றனர்-ஆசி) ஆம். சரி. இப்பொழுது... ஆனால் பலிபீடத்தின் கீழேயுள்ள ஆத்துமாக்கள் கிறிஸ்துவைப் பற்றிய சாட்சியை உடையவர்களாயிருக்கவில்லை. “.... தேவ வசனத்தினிமித்தமும், தாங்கள் கொடுத்த சாட்சி யினிமித்தமும்” அவர்கள் யூதர்கள், ஹிட்லர் அவர்களை வெறுத்தான். அவ்வாறே எய்க்மனும், ஸ்டாலினும், உலகிலுள்ள ஏனையோரும் அவர்களை வெறுத் தனர். பாருங்கள்? ஆனால் அவர்களோ தாங்கள் விசுவாசத்திற்கு உண்மையுள்ளவர்களாயிருந்தனர். அவர்கள் யூதர்களாயிருந்தபடியால் இவர்களால் (ஹிட்லர், எய்க்மான், ஸ்டாலின் போன்றோரால் - தமிழாக் கியோன்) கொல்லப்பட்டனர். மார்டின் லூதரும் அவர்களைக் குறித்து தப்பெண்ணம் கொண்டி ருந்தார் என்பதை நீங்கள் அறிவீர்களா? அது உண்மை . ''அவர்கள்தான் அந்திக்கிறிஸ்து, ஆகவே, அவர்கள் எல்லாரும் புறம்பாக்கப்பட வேண்டு மென்று அவர் கூறினார். அவர் வேறொரு யுகத்தைச் (Another dispensation)சேர்ந்தவராதலால் தேவனுடைய வார்த்தையை சரிவர அறிந்து கொள்ள முடியவில்லை. 102ஆனால் இப்பொழுதோ, தேவனுடைய சத்திய வார்த்தை வெளிப் படுத்துப்படுகின்றது. இஸ்ரவேலர் எப்பொழுதுமே குருடாயிருக்க முடியுமா? ஒருக்காலும் இல்லை. அன்றொரு நாள் பாளயத்தின் கடைசியிலிருந்தவர்களை தீர்க்கதரி சிக்கு காண்பித்தபோது, அவன் இஸ்ரவேலரிடம் ''நீங்கள் காண்டா மிருகத்தைப் போன்றிருக்கிறீர்கள்'' என்று சொல்லவில்லையா? மேலும் அவர் “உங்களை ஆசீர்வதிக்கிறவன் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பான். உங் களைச் சபிக்கிறவன் சபிக்கப்பட்டிருப்பான்'' எனக் கூறவில்லையா? அது உண்மை . ஓ, சகோதரனே! அப்படியானால் அவர்கள் எங்ஙனம் நிரந் தரமாகக் குருடராயிருக்க முடியும்? தேவன் அவர்களை மறந்துவிடுவாரென்று இஸ்ரவேலர் ஒருமுறை நினைத்திருந்தனர். யூதர்களுக்கு இக்கட்டான சமயம் வருவதை அந்த தீர்க்கதரிசி கண்டான். தேவனுடைய வார்த்தை அங்கே நின்றிருந்த தீர்க்கதரிசியிடம் பொழிந்தபோது, அவன் கர்த்தரிடம், 'ஆண்டவரே, உம் ஜனங்களை நீர் மறந்துவிடுவீரோ?' என்று முறையிட்டான். அப்பொழுது அவர் 'உன் கையிலிருப்பது என்ன என்று கேட்டார். அவன், 'அளவுகோல்' என்று பதிலுரைத்தான். அவர், “வானம் எவ்வளவு உயரமென்றும், சமுத்திரம் எவ்வளவு ஆழமென்றும் உன்னால் அளக்க முடியுமா?'' என்றார். ஊஊம் அவன் முடியாது. என்றான். அவர் 'அப்படியானால் நானும் இஸ்ரவேலை ஒருபோதும் மறப்ப தில்லை' என்றார். இல்லை ஐயா! அவர் இஸ்ரவேலை ஒருபோதும் மறக்க முடியாது. அவர் தமது பிள்ளையை குருடாக்க வேண்டியதாயிருந்தது. சற்று யோசித்துப் பாருங்கள்! நமக்குத் தருணம் அளிப்பதற்கென அவர் தமது பிள்ளையைக் குருடாக்கினார். நாமோ அதை உதறித் தள்ளுகிறோம். நாம் ஒன்று மற்றவர் என்பதை அது அறிவுறுத்தவில்லையா? நாம் எவ்வள வாக நம்மை தாழ்த்தினாலும், அதை நாம் அறிந்துகொள்ளமுடியாது. ஓ. என்னே ! ஆம். 103“அவர்கள் தேவனுடைய வார்த்தையைப் பற்றிக் கொண்டிருந் தனர்.'' அவர்கள் யூதர்கள் ', அவர்களுக்கு நியாயப்பிரமாணம் கொடுக் கப்பட்டிருந்தது. அதில் அவர்கள் நிலைத்திருந்தனர். நேற்று இரவைக் குறித்து உங்களுக்கு ஞாபகம் உள்ளதா? பாருங்கள்? அதில் அவர்கள் நிலைத்திருந்தனர். அவர்கள் யூதர்கள். அவர்களிடம் தேவனுடைய நியாயப்பிரமாணம் இருந்தது. நியாயப்பிரமாணம் தேவனுடைய வார்த் தையாயிருந்தது. அதில் அவர்கள் நிலைக்கொண்டிருந்தனர். அது உண்மை அவர்கள் கடைபிடித்திருந்த சாட்சியினிமித்தம் உயிர்த் தியாகம் செய்து மரித்தனர். அவர்கள்தாம் சபை எடுக்கப்பட்ட பின்னர் பலிபீடத்தின் கீழ் காணப்படும் ஆத்துமாக்கள். 104இப்பொழுது, கவனியுங்கள். அவர்களுடைய குருட்டுத்தனத் தினால் அவர்களுடைய மேசியாவைச் சங்கரித்தனர். அதன் பலனை இப் பொழுது அவர்கள் அனுபவிக்கின்றனர். சபை எடுக்கப்பட்ட பின்னர் அவர்கள் இதை அறிந்து கொள்வார்கள். தேவனுடைய பலிபீடத்தின் முன் அவர்கள் வரும்போது, அதை உணருவார்கள். ஆனால், தேவனு டைய கிருபை அவர்களுக்கு இப்பொழுது வருகிறது. கவனியுங்கள், இப்பொழுது, அவர்கள் பரிசுத்தவான்களில்லை. ஏனெனில் பரிசுத்தவான்கள் ஏற்கனவே அங்கிகள் தரித்திருப்பார்கள். ஆனால் இவர்கள் தேவவசனத்தினிமித்தமும், தேவனுடைய பிள்ளைகள் என்பதால் அவர்கள் கொண்டிருந்த சாட்சியினிமித்தமும் கொல்லப் பட்டு, இப்பொழுது பலிபீடத்தின் கீழ் காணப்படும் ஆத்துமாக்கள், யூதர்கள். ஆனால் இப்பொழுது, கவனியுங்கள். சபை எடுக்கப்பட்ட பின் னர் தேவனுடைய கிருபை அவர்களுக்குண்டாகி, இயேசு அவர்கள் ஒவ் வொருவருக்கும் வெள்ளை அங்கியைக் கொடுக்கிறார். ஏனெனில் அவர் கள் தங்கள் நோக்கத்திற்கு உண்மையாயிருந்தனர். அவர்கள் குருடாக் கப்பட்டனர். ஆனால் அவர்கள் குருடரென்று அறியாமலிருந்தனர். அவர்கள் அதை அறியவில்லை. அவர்கள் செய்யவேண்டுமென்று தேவன் முன் குறித்ததை அவர்கள் சரியாகச் செய்து முடித்தனர். இங்கே யோவான் இந்த ஆத்துமாக்களைத்தான் பலிபீடத்தின் கீழ் காண்கிறான். இப்பொழுது கவனியுங்கள். அவன் அந்த ஆத்துமாக்களைக் காண்கிறான். அவன் அவர்களை என்னவென்று அழைக்கிறான் என்பதைக் கவனி யுங்கள். ''அவர்கள் எதுவரைக்கும் ஆண்டவரே?'' என்று கதறுகின்றனர். 'இன்னும் கொஞ்சக் காலம்' என்று அவர்களுக்குப் பதிலளிக்கப் படுகின்றது. என்பதைக் கவனியுங்கள். பாருங்கள்? 105நாம் இப்பொழுது இதை வேதவாக்கியங்களின் வழியாக அறிந்து கொள்வோமாக. அவர்கள் மேசியாவைக் கொன்றுவிட்டதை உணரு கின்றனர். பாருங்கள்? அவரைச் சிலுவையில் அறைந்தபோது, அவர் கள் மேசியாவென்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை. ஆனால் பின் னர் அவர்கள் தவறை உணருகின்றனர். பாருங்கள், அந்த கொலைக்கு அவர்கள் குற்றவாளிகளாய் இருந்ததனால் அவர்கள் கொல்லப்பட்ட னர். பாருங்கள்? ''அவருடைய இரத்தப் பழி எங்கள்மேல் சுமரட்டும்“ என்று அவர்கள் சத்தமிட்டனர். பாருங்கள்? அது உண்மை . ஆனால் அதைச் செய்யும் போது அவர்கள் குருடாக்கப்பட்டிருந்தனர். இப்பொழுது, அவர்கள் குருடாக்கப்பட்டிராமலிருந்தால் தேவன், “அவர்களை விட்டு விடுங்கள். அவர்கள் தகுதியற்றவர்கள்'' என்று கூறியிருப்பார். ஆனால் தேவனே அவர்களைக் குருடாக்கினதால் அவரு டைய கிருபை அவர்களிடம் பெருகினது. ஆமென். அந்த அதிசயமான கிருபை! இஸ்ரவேலர் எல்லாரும் இரட்சிக்கப்பட வேண்டுமாதலால், அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு அங்கி கொடுக்கப்பட்டது. அவர் கள் ஒவ்வொருவர் பெயரும் எழுதப்பட்டுள்ளது. அது உண்மை . இயேசு அவர்களுக்கு அங்கிகளை அளிக்கிறார். 106யோசேப்பு தன் சகோதரருக்குச் செய்ததுபோல. அது ஒரு முன் னடையாளமாயிருந்தது. கவனியுங்கள், யோசேப்பு அங்கே நின்று, அவன் கடைசியாக... யோசேப்பு அவனை தன் சகோதரருக்கு வெளிப் படுத்தும் போது, அவன் தன் பீடத்திலே, சொந்த பீடத்திலே, சிங்கா சனத்தில் வீற்றிருந்து ஆளுகை செய்பவனாயிருந்தான். அவன் அப் பொழுது, ''எல்லோரும் என்னைவிட்டுப் போங்கள்'' என்று கட்டளை யிட்டான். தன்னை தன் சகோதரருக்கு வெளிப்படுத்தும்போது அவன் மனைவி அரண்மனையில் இருந்தாள். அங்கு தான் மணவாட்டி இருப்பாள். ஆகவே, அவன் அவர்களிடம் “என்னை நீங்கள் அடையாளம் கண்டு கொள்ளவில்லையா? நான்தான் உங்கள் சகோதரன்'' என்று எபிரேய பாஷையில் கூறினான். ஓ, என்னே ! அவர்கள், ”இப்பொழுது, ஓ, நீர் எங்களுக்கு, தீங்கிழைக்கப் போகின்றீர்'' என்றனர். அவனோ, “ஒரு நிமிடம் பொறுங்கள், ஒரு நிமிடம் பொறுங்கள். தேவன் ஒரு நோக்கத்திற்காக அதை நேரிடச் செய்தார். உயிரைக் காப்பதற்காக, என்னை நீங்கள் புறக்கணிக்கும்படி தேவன் செய்தார்.'', மகிமை! அங்கே பாருங்கள் - சரியாக உள்ளதை ''நீங்கள் சஞ்சலப்பட வேண்டாம்'' யோசேப்பு அவ்விதம் கூறினான் என்பது உண்மை . உங்களுக்கு ஞாபகம் உள்ளதா? அவன் ”நீங்கள் சஞ்சலப்பட வேண் டாம். இப்பொழுது எல்லாம் சரியாக உள்ளது. எல்லாம் முடிந்து விட் டது. உங்களை உயிரோடு காக்கும்படிக்கு தேவன் என்னை உங்களுக்கு முன்னமே அனுப்பினார்'' என்றான். யூதர்களும் இயேசு வருவதைக் காணும்போது, ''நீர் மேசியா வென்று அறிவோம். ஆனால் அந்த வடுக்கள் எங்ஙனம் உண்டாயின?'' என்று கேட்பார்கள். பாருங்கள்? அதற்கு அவர், ''என் சிநேகிதரின் வீட்டில் காயப்பட்டதனால் உண்டானவை'' என்று பதிலுரைப்பார். சிநேகிதர்? 107அப்பொழுது மீதியாயுள்ள 1,44,000 பேர் அவர்கள் தவறை உணருவர். ஒவ்வொரு குடும்பமும் நாட்கணக்காக தனித்தனியே புலம்பி இங்குமங்கும் நடந்து, ''ஐயோ! நாம் எங்ஙனம் இதைச் செய் தோம்? நாம் எங்ஙனம் இதைச் செய்தோம்? நமது மேசியாவை நாம் சிலு வையில் அறைந்துவிட்டோமே!'' என்று விசாரிப்பார்களென்றும் வேதம் கூறுகின்றது. அவர்கள் தங்கள் ஒரே பேறானவனுக்குப் புலம்புவது போல் அவருக்காகப் புலம்புவார்கள். ''எப்படி நாங்கள் இதைச் செய் தோம்?'' யூதர்கள் உலகிலேயே மிக பக்தி வைராக்கியம் கொண்டவர்கள். அவர்கள் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களாயினும், நமக்காக அவர்கள் குருடாக்கப்பட்டனர். ஆனால் நாமோ அதை அசட்டை செய் கிறோம். அப்படியானால் புறஜாதி சபைக்கு நேரிடவிருக்கும் நியாயத் தீர்ப்பு எவ்வளவு பயங்கரமாயிருக்கும்? அங்கே பாருங்கள். பாருங்கள்? மணவாட்டியாகிய நம்மை புறஜாதிகளினின்று தெரிந்து கொள்ள வேண்டுமென்ற நோக்கத்திற்காக அவர்கள் குருடாக்கப்பட்டனர். அவர்களை அதனின்று எடுக்கும்படியாக... பாருங்கள்? அவர் அதையும், ஒவ்வொன்றையும் முன்னடையாளமாக்கினார். 108பலிபீடத்தின் கீழுள்ள ஆத்துமாக்கள் யாரென்பதை இப்பொழுது நீங்கள் அறிந்துகொண்டீர்களா? அவர்கள் இரத்தசாட்சிகளாக மரித்த பரிசுத்தவான்கள் அல்ல. அவர்கள் ஏற்கனவே எடுக்கப்பட்டுவிட்டனர். அது சரி. கவனியுங்கள், அவர்கள் எடுக்கப்பட்டுவிட்டனர். பாருங்கள்? ஆகவே, ஒவ்வொருவருக்கும் ஒரு அங்கி அளிக்கப்பட்டது. ஆகவே, நீங்கள் இப்பொழுது கவனிக்க நான் விரும்புகிறேன். ஆனால் தேவனுடைய கிருபை இப்பொழுது அவர்களிடம் தாழ இறங்குகிறது. யோசேப்பின் கிருபை அவன் சகோதரரிடம் உண்டானது போல், யூதர்களாகிய இவர்களிடம் தேவகிருபை உண்டாகி, அவர்கள் ஒவ்வொருவருக்கும் இயேசுவால் ஒரு அங்கி கொடுக்கப்படுகின்றது. இப்பொழுது கவனியுங்கள். யோசேப்பின் சகோதரர் யோசேப்பை எவ்விதமாவது ஒழிக்க எண்ணினர். ஆயினும் அவனுடைய கிருபை அவனுடைய சகோதரர்களுக்குக் கிடைத்தது. பாருங்கள்? “ஓ, பரவா யில்லை. பரவாயில்லை. நீங்களாக அதைச் செய்யவில்லை.'' பாருங்கள்? தேவனே அதை நேரிடச் செய்தார். உங்களை உயிரோடு காப்பதற்கென தேவன் என்னை இப்புறஜாதிகளிடம் அனுப்பினார். அவர்களிடமிருந்து நான் என் மனைவியை மணந்து கொண்டேன். நான் உங்களிடமே தங்கியிருந்திருப்பேனாகில் என் மனைவியை நான் அடைந்திருக்கமுடி யாது. அவளை நான் நேசிக்கிறேன். அவளும் எனக்குக் குமாரரைப் பெற்றாள். இப்பொழுது நான் உங்களையும் அழைத்துக்கொள்ளப்போகி றேன். நீங்களுங்கூட நன்மையைப் பெற்றுக் கொள்கிறீர்கள். நாமெல் லாரும் இனிமேல் ஒரே குடும்பமாக இனிது வாழ்வோம்' என்று யோசேப்பு கூறினான். பாருங்கள்? பாருங்கள்? பாருங்கள்? அவன் அவர்களிடம், ”ஒன்றை மாத்திரம் கேட்க விரும்புகிறேன். என் தகப் பனார் இன்னமும் உயரோடிருக்கிறாரா?“ என்றான். ஓ! 109யோசேப்பு சிறிய பென்யமீனுக்கு என்ன செய்தான் என்பதைக் கவனியுங்கள். பென்யமீன் அந்த 1,44,000 பேர்களுக்கு முன்னடையா மாயிருக்கிறான். நாம் அதை பின்னர் காண்போம். பென்யமீனைக் கண்ட போது யோசேப்பு என்ன செய்தான்? அவன் ஓடிப்போய் அவன் கழுத் தைக் கட்டிக்கொண்டு முத்தம் செய்தான். அவன் குடும்பத்தை விட்டு பிரிந்தபிறகு அவனுடைய தாயார் பெற்றெடுத்தப் பிள்ளைதான் இந்த பென்யமீன். அவ்வாறே இயேசுவும் புறஜாதி மணவாட்டியை ஏற்றுக் கொள்ளச் சென்றிருந்தபோது, அந்த வைதீக (Orthodox) சபையாகிய யூத சபை பெற்றெடுத்த பிள்ளைகள்தாம் இந்த 1,44,000 பேர். ஓ! என்னே! அது உங்களுக்கு பரவசமூட்டவில்லையா? அதுவேதான் அவர் கள் யாரென்று அறிந்துகொண்டீர்களா? அவர்கள் அங்கே உள்ளனர். இப்பொழுது கவனியுங்கள், அவர்கள் யோசேப்பை ஒழிக்க முயன்றபோதிலும் யோசேப்பின் கிருபை அவர்களுக்குக் கிடைத்தது. 110அவ்வாறே யூதர்கள் இயேசுவை ஒழிக்க முயன்றனர். ஆனால் அவர் மறுபடியும் அவர்களிடம் வந்து, (ஏனெனில் அவர்கள் குருடாகி யிருந்தனர்) அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு அங்கியைக் கொடுத்து, அவர்களை எவ்விதத்திலாயினும் தம் வீட்டிற்கு அழைத்துச்செல்கிறார். அவர்களிடம் அவருக்கு எவ்வித வெறுப்புமில்லை. ஏனெனில், “அவர் களெல்லாரையும் நான் எப்படியாவது இரட்சித்துக் கொள்வேன்'' என்று அவர் கூறியுள்ளார். அவர்கள் பழி வாங்க வேண்டுமென்று விரும்பினர் என்று பத் தாம் வசனம் உரைக்கின்றது. பாருங்கள். ஆனால் மணவாட்டி பழிவாங்க விரும்பமாட்டாள். அவள் ஸ்தேவானைப் போன்று, “பிதாவே, இவர்களுக்கு மன்னியும்'' என்று சொல்லுவாள். பாருங்கள்? எனவே, பழிவாங்க வேண்டுமென்று விரும்புகிறவர்கள் யூதர் களாகத்தான் இருக்கவேண்டும். மறுபடியும் கவனியுங்கள், பாருங்கள், அவர் மறுபடியும் கூறினார். கவனியுங்கள். அது அல்ல. அவர், ''அவர்கள் உங்கள் சகோதரர்'' என்றார். யூதர். அந்த நூற்று... “அவர்கள் பழிவாங்க வேண்டும்'' என்றனர். “இன்னும் சற்று காலம் காத்திருக்க வேண்டுமென்று அவர் களிடம் கூறப்படுகின்றது. அதை நான் மறுபடியும் படிக்கிறேன். அவர்கள், ''நாங்கள்... நீர் எங்கள் நிமித்தம் அவர்களைப் பழிவாங்க வேண்டும்,'' என்றனர். அவர்கள்: பரிசுத்தமும் சத்தியமுள்ள ஆண்டவரே, தேவரீர் பூமியின் மேல் குடியிருக்கிறவர்களிடத்தில் எங்கள் இரத்தத்தைக் குறித்து எதுவரைக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யா மலும் பழிவாங்காமலும் இருப்பீர் என்று மகா சத்தமிட்டுக் கூப்பிட்டார்கள். அப்பொழுது அவர்கள் ஒவ்வொருவருக்கும் வெள்ளை அங்கிகள் கொடுக்கப்பட்டது. அன்றியும், அவர்கள் தங்களைப் போலக் கொலைசெய்யப்படப்போகிறவர்களாகிய தங்கள் உடன் பணிவிடைக்காரரும்... பாருங்கள்? அது என்ன? தீர்க்கதரிசிகள் இஸ்ரவேலருக்குப் போதிக்கின்றனர். பாருங்கள்? தங்கள் சகோதரருமானவர்களின் தொகை நிறைவாகுமள் வும் இன்னுங்கொஞ்ச காலம் இளைப்பாற வேண்டும் என்று அவர்களுக்குச் சொல்லப்பட்டது. பாருங்கள், அவர்கள் கொலை செய்யப்பட வேண்டுமென்று முன் குறிக்கப்பட்டுள்ளனர். நீங்கள் பாருங்கள்? தங்கள் சகோதரருமானவர்களின் தொகை நிறைவாகுமள் வும் இன்னுங்கொஞ்ச காலம் இளைப்பாற வேண்டும் என்று அவர்களுக்குச் சொல்லப்பட்டது. 111பாருங்கள், அதாவது, அவர்கள் கொலை செய்யப்பட வேண்டு மென்று தேவனால் முன்னமே தீர்மானிக்கப்பட்டது. இவ்வேதவாக்கி யம் அவ்வாறு கூறுகின்றது. அதுவரைக்கும் அவர்கள் இளைப்பாற வேண்டும். 'இப்பொழுது நீங்கள் அங்கிகளைப் பெற்றுக் கொண்டீர்கள். ஆகவே நீங்கள் உன்னத வீட்டை அடைவீர்கள். சிறிது காலம் காத்தி ருங்கள்' என்று அவர்களுக்குச் சொல்லப்படுகின்றது. இப்பொழுது கவனியுங்கள். இப்பொழுது கவனியுங்கள். ''உங்கள் சகோதரர், கொலை செய்யப்பட போகிறவர்களாகிய உங்கள் சகோதரர்“ என்பதைக் கவனியுங்கள். அவர்கள் சகோதரர்கள் கொல்லப் பட வேண்டும். அதாவது உபத்திரவ காலத்தில் அழைக்கப்படும் 1,44,000 பேர். நமக்கு இன்னும் சமயம் இருந்தால் நலமாயிருக்கும். கர்த்தருக் குச் சித்தமானால் நாளை இரவு நாம் வேறொரு முத்திரையைக் குறித்து தியானிக்கும் முன்னர் இதைக் குறித்துப் பேசலாம். பாருங்கள்? இப்பொழுது கவனியுங்கள். அவர்கள் அந்திக்கிறிஸ்துவால் கொல்லப்படவேண்டும். அவன் கடைசியாக முறையாக சவாரி செய் யும்போது, யூதர்களுடன் அவன் செய்திருந்த உடன்படிக்கையை முறிக்கிறான். பாருங்கள்? 112இந்த 1,44,000 யூதர்கள் வெளிப்படுத்தல் 11-ம் அதிகாரத்தில் கூறப்பட்டுள்ள இரண்டு சாட்களின் மூலம் வெளியே அழைக்கப்படு கின்றனர். இப்பொழுது, அவர்கள் தீர்க்கதரிசனம் உரைக்க வேண்டும் என்பதை ஞாபகங் கொள்ளுங்கள். இவ்விரண்டு சாட்சிகளும் தீர்க்கதரிசினம் உரைக்கவேண்டு மென்று நீங்கள் வேதத்தில் படித்திருக்கிறீர்கள். உங்களில் அதை எத்தனைபேர் படித்திருக்கிறீர்கள் (சபையார் 'ஆமென்“ என்கின்றனர்ஆசி) நிச்சயமாக, நாம் அனைவரும் வேதம் வாசிக்கும் பழக்கமுடை யவராக இருக்கிறோம். அவர்கள் தானியேலின் எழுபது வாரங்களின் இரண்டாம் பகு தியில் தீர்க்கதரிசனம் உரைக்கின்றனர். அதுதான் கடைசி மூன்றரை வருடம். தானியேலின் எழுபது வாரங்களைக் குறித்து நாம் பேசியபோது முத்திரைகளின் இரகசியங்களைப் பற்றி நாம் தியானிக்கும் சமயத்தில் அது நமக்கு அவசியமாயிருக்கும். என்று நான் கூறினேன். ஏன் அவ் விதம் கூறினேன் என்று எனக்கே தெரியவில்லை. அது நமக்கு அவசிய மாயிருக்குமென்று ஏதோ ஒன்று என்னிடம் சொன்னது. அது இப்பொ ழுது உண்மையாயிருக்கிறது. ஆம். பாருங்கள்? 113கவனியுங்கள், தானியேலின் காலத்தில்... மேசியா வருவாரென் றும் அவர் தீர்க்கதரிசனம் உரைப்பாரென்றும் தானியேல் கூறினான் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இஸ்ரவேல் ஜனங்களுக்கு எழுபது வாரங்கள் விடப்பட்டிருந்தன. அந்த எழுபது வாரங்களின் மத்தியில் மேசியா சங்கரிக்கப்படுவார். அன்றாடக பலியும் நீக்கப்படும். நான் கூறுவது சரியா? (சபையார் 'ஆமென்'' என்கின்றனர்-ஆசி) ஆனால் இன்னமும் மூன்றரை வாரங்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றன. இந்த காலகட்டத்தில் அவர் புறஜாதி மணவாட்டியை எடுத்துச் செல்வார். இப்பொழுது, மணவாட்டி மேலே சென்றவுடனே, இரண்டு தீர்க்க தரிசிகள் இஸ்ரவேலரிடம் எழும்புவார்கள். பாருங்கள்? இரத்த சாட்சிகளாக மரித்த அந்த ஆத்துமாக்களின் பெயர்கள்உண்மையான யூதர்கள் - புஸ்தகத்தில் எழுதப்பட்டிருந்தன. அவர்கள் சன்மார்க்க வாழ்க்கை நடத்தி யூதமார்க்கத்தை நல்ல முறையில் கடை பிடித்தனர். அவர்கள் எய்க்மன் (Eichmann) போன்றவரால் கொல்லப் பட்டு உயிர்த்தியாகம் செய்தனர். கோடிக்கணக்கான உத்தமமான மக்களை ஜெர்மானியர் சுட்டுக்கொன்றனர். அது மாத்திரமல்ல. அவர்கள் பல்வேறு முறைகளைக் கையாண்டு அவர்களைக் கொன்றுபோட்டு, உடல் களை வேலிகளில் தொங்கவிட்டு, அவர்களைச் சுட்டெரித்தனர். ஹிட்லர், ஸ்டாலின், முசோலினி போன்ற கயவர்கள் யூதர்களை வெறுத்து அவர் கள் இரத்தத்தைக் குடித்தனர். 114நம் தேசம் யூதனுக்குரிய ஸ்தானத்தைக் கொடுப்பதால் இன்றும் நிலைநிற்கிறது என்றே நான் நினைக்கிறேன். ஒரு யூதனை நீங்கள் மதித் தால், தேவன் உங்களைக் கௌரவிப்பார். ஆனால் புறஜாதியாரில் தேவனுடைய கட்டளையைக் கைக்கொள் ளாதவர் இருப்பது போன்று யூதரிலும் உள்ளனர். 289. ஆனால் ஒரு உண்மையான யூதனின் பெயரைத் தேவன் உலகத் தோற்றத்துக்கு முன்னரே புஸ்தகத்தில் எழுதிவைத்துள்ளார். பெய ரெழுதப்பட்ட யூதர்கள் இப்பொழுது கொல்லப்படுகின்றனர். இது முற் றிலும் நிறைவேறினது என்பதை சிந்தித்துப் பாருங்கள். கோடிக்கணக் கான களங்கமற்ற யூதர்களை உலகிலுள்ள நாடுகள் கொன்று போட்டன. அவ்வாறு கொல்லப்பட்ட ஒவ்வொரு ஆத்துமாவும் பலி பீடத்தின்கீழ் காணப்பட்டு, நடந்த யாவற்றையும் உணர்ந்து கொண்டதாக வேத வாக்கியம் கூறுகின்றது. அவர்களுக்கு வெள்ளை அங்கிகள் கொடுக்கப் படுகின்றன. ''நல்லது, ஏன்? நாங்கள் இப்பொழுதே ராஜ்யத்துக்கு செல்ல முடியாதா?'' என்று அவர்கள் கேட்கின்றனர். யூதருடைய ராஜ்யம் பூமி யில் நிறுவப்படவேண்டுமென்பது உங்களுக்குத் தெரியும். யோவான் ஸ்நானன் தன் செய்தியில் குறிப்பிட்டது ராஜ்யத்தின் சுவிசேஷமாகும். பாருங்கள்? 115ஆனால் யூதருடைய ராஜ்யத்தைக் குறித்து இரண்டு தீர்க்க தரிசிகளும் பிரசங்கிப்பார்கள். ஆகவே கவனியுங்கள் - பூமியில் இங்கே நிறுவப்பட இருக்கின்ற ராஜ்யம். 292. ராஜ்யத்தின் சுவிசேஷமானது யூதரால் பிரசங்கிக்கப்படுகிறது அல்ல? அல்லது.. நான் கருதுவது, புறஜாதிகளுக்குப் பிரசங்கிக்கப்படு கின்றது. ஆனால் ஆயிரம் வருஷ அரசாட்சிக்குப் பிறகு யூதருடைய ராஜ் யம் இப்பூமியில் நிறுவப்படுகின்றது. இப்பொழுது கவனியுங்கள், அவர்கள் பிரசங்கிக்கையில் என்ன சம்பவிக்கின்றது என்று இப்பொழுது கவனியுங்கள். பாருங்கள்? இந்த இரண்டு சாட்சிகளும் எழும்பும் முன்னர். யூதர்கள் எய்க்மன் போன்றவரால் கொல்லப்படுகின்றனர். அவ்வாறு கொல்லப்படவேண்டு மென்று முன் குறிக்கப்பட்டவர்கள் ஒவ்வொருவருக்கும் தேவ கிருபை யினால் ஒரு வெள்ளை அங்கி கொடுக்கப்படுகின்றது. கவனியுங்கள். இப்பொழுது சம்பவிப்பது என்ன? அது சம்பவித்த உடனே... 116நான் கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். தாமதமாகிற தென்றும் நான் அறிகிறேன். நான் விரும்பாதது. பாருங்கள், நான்... அவர்கள். அவர்களெல்லாம் நின்றவண்ணமாகவே இருக்கின்றனர். சகோதரரே, தேவன் உங்களுக்கு உதவி செய்வாராக! அந்நாளிலே உங் கள் ஒவ்வொருவருக்கும் வெள்ளை அங்கி கொடுக்கப்படுமென்று நான் நம்புகிறேன். பாருங்கள். அதிக நேரம் நிற்பதால் உங்கள் கால்கள் வலிக்கும். உங்களில் சிலர் நாள் முழுவதும் வேலை செய்கின்றீர்கள். ஆகவே நிற்பதனால் ஏற்படும் கஷ்டம் எனக்குத் தெரியும். இங்கே கவனியுங்கள்... சில வயோதிப ஸ்திரீகளும் நின்று கொண்டிருக்கின்றனர். சில ஆண்கள் எழுந்து அவர்கள் ஆசனங்களை ஸ்திரீகளுக்குக் கொடுத்ததையும் கவனித்தேன். குழந்தையைக் கையிலேந்திக் கொண் டிருந்த ஒரு ஸ்திரீக்கும் ஆசனம் கொடுத்ததையும் நானறிவேன். இதை யெல்லாம் தேவன் காண்கிறார். கவனியுங்கள். உங்களை அதிக நேரம் தாமதிக்க நான் விரும்பவில்லை. செய்தி என்னவென்பதை நீங்கள் புரிந்துகொள்ள நான் உதவியாயிருந்தால்... அதுதான் என் விருப்பம். பாருங்கள்? 117இப்பொழுது இந்த யூதரைக் கவனியுங்கள். இந்த முத்திரை என்ன, பலிபீடத்திலுள்ள ஆத்துமாக்கள் யார் என்ற இந்த முத்திரையின் வெளிப்பாட்டை நீங்கள் காணவேண்டுமென்பதற்கே நான் இவ்விதம் செய்கிறேன். இப்பொழுது கவனியுங்கள். தானியேலின் எழுபது வாரங்களின் பிற்பகுதியில் மேசியா சங் கரிக்கப்படவேண்டும் என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். அது அந்த எழுபது வாரங்களின் மத்தியில் நிகழும் ஒரு சம்பவமாகும். நல்லது, ஏழில் பாதி எவ்வளவு? (சபையார் ''மூன்றரை'' என்கின்றனர்ஆசி) மூன்றரை. கிறிஸ்து எத்தனை வருடம் பிரசங்கித்தார்? (சபை யார் 'மூன்றரை வருடம்' என்று பதிலுரைக்கின்றனர். அது சரி. அந்த ஜனங்களுக்கு இன்னும் எத்தனை வருடங்கள் நியமிக்கப்பட்டிருக் கின்றன? மூன்றரை வருடங்கள். இந்த மூன்றரை வருட காலத்திற்கு முன்பு புற ஜாதி மணவாட்டி ஏழு சபையின் காலங்களில் தெரிந்து கொள்ளப்பட்டு, எடுக்கப்படு கின்றாள். 118அதன்பின்னர், குருடாக்கப்பட்டதன் காரணமாக இரத்த 'சாட்சி களாக மரித்து, பலிபீடத்தின் கீழ் காணப்படும் யூதர்களிடம் தேவன் வந்து, 'இது என்னவென்பதை அறிந்து கொண்டீர்களா? உங்கள் ஒவ் வொருவருக்கும் ஒரு வெள்ளை அங்கியைக் கொடுக்கப்போகிறேன்'' என்பார். அதற்கு அவர்கள், 'இன்னும் எவ்வளவு காலம், ஆண்டவரே! நாங்கள் இப்பொழுதே புறப்பட்டுச் செல்ல வேண்டுமா?' என்று கேட் பார்கள். அதற்கு அவர், “இல்லை, இல்லை, இல்லை, இல்லை, உங்கள் உடன் சகோதரரான யூதர்கள் கொலைசெய்யப்படும்வரை நீங்கள் காத்திருக்க வேண்டும். நீங்கள் கொலை செய்யப்பட்டது போல் அவர்களும் கொலை செய்யப்படவேண்டும். மிருகம் அவர்களிடம் செய்துக்கொண்ட உடன் படிக்கையை முறித்தபின்பு, அவர்களைக் கொன்றுபோடும்'' என்பார். இப்பொழுது கவனியுங்கள். இப்பொழுது கவனியுங்கள். ஒரு முறை... வெளிப்படுத்தல் 11-ம் அதிகாரத்தில் கூறப்பட்ட இரண்டு சாட்சிகள் தீர்க்கதரிசனம் உரைப்பார்கள். அதை நீங்கள் வாசித்திருக் கிறீர்கள் என்பதற்கு அடையாளமாக உங்கள் கரங்களை உயர்த்தினீர்கள். பாருங்கள்? அவர்களுக்கு வல்லமை அளிக்கப்படுகின்றது. 119ஆகவே, இவர்கள் யாரென்பதை, கர்த்தருக்குச் சித்தமானால் நாம் இன்னும் சில நிமிடங்களில் கண்டுகொள்ளப் போகிறோம். அவர்கள் யாரென்பதை வேதம் நமக்கு அறிவிக்கின்றது. ஆம், நிச்சயமாக அது அறிவிக்கின்றது. பாருங்கள்? 304. இப்பொழுது, கவனியுங்கள். அவர்கள் தீர்க்கதரிசனம் உரைக் கின்ற மூன்றரை வருடத்தின் பாதியில்... அவர்கள் ஆயிரத்து இருநூற் றறுபது நாட்கள் தீர்க்கதரிசனம் உரைப்பார்கள் என்று வெளிப்படுத் தின விசேஷம் கூறுகின்றது. யூத நாட்கணக்கின்படி, அது தேவனுடைய ஒழுங்கான நாட் கணக்கு (God's Calendar) ஒரு மாதத்திற்கு முப்பது நாட்கள் மாத்தி ரமேயுண்டு. ஆனால் ரோமன் நாட்கணக்கு அவ்வாறல்ல. யூதருடைய நாட்கணக்கின்படி ஒரு மாதத்திற்கு முப்பது நாட்கள் உண்டு. 120இப்பொழுது நாம் மூன்றரை வருடங்களை (நாற்பத்திரண்டு மாதங்களை) முப்பது நாட்களால் பெருக்கினால் நமக்குக் கிடைப்பது ஆயிரத்து இருநூற்றறுபது நாட்கள். ''ஆயிரத்து இருநூற்றறுபது நாட்கள்'' -சரியாக மூன்றரை வருடங்களாம். நல்லது, நீங்கள் அதை புரிந்து கொண்டீர்களா? இப்பொழுது, இது மிகவும் அழகாகப் பொருந்துகின்றது என்பதைப் பாருங்கள். அதில் எவ்வித தவறும் இல்லை. அவை சரியாக ஒன்றுடன் ஒன்று பொருந்துகிறது. கவனியுங்கள். இந்த இரண்டு தீர்க்க தரிசிகளும் யூதரிடம் மூன்றரை வருட காலம் பிரசங்கிக்கின்றனர். அதன் விளைவால் 1,44,000 பேர்கள் வெளியே அழைக்கப்படுகின்றனர். 121இவ்விரண்டு தீர்க்கதரிசிகளும் முறையே மோசேயும் எலியாவு மாம், பாருங்கள்? பாருங்கள்? இப்பொழுது கவனியுங்கள். அவர்களு டைய ஊழியத்தைக் கவனியுங்கள். இந்த தீர்க்கதரிசிகள் செய்வது என்னவென்று நீங்கள் கவனியுங்கள். அவர்கள் வேண்டும்போதெல் லாம் பூமியைச் சகலவித வாதைகளால் வாதிக்க அவர்களுக்கு அதிகா ரம் உண்டு.'' யார் அவ்விதம் செய்தது? மோசே, 'அவர்கள் ஊழியத் தின் நாட்களிலே மழை பெய்யாதபடிக்கு வானத்தை அடைக்க அவர் களுக்கு அதிகாரமுண்டு. மூன்றரை வருட காலம் வானத்தை அடைத் தது யார்? (சபையார், 'எலியா' வென்று பதிலுரைக்கின்றனர்-ஆசி). அங்கே அவர்களைப் பாருங்கள். அது அவர்களேயாகும். பாருங்கள், அது... பாருங்கள், ஒரு மனிதன் மரித்தபிறகும் அவனுடைய பதவி மாறுவதில்லை. அவனுடைய ஒப்பனை (make-up) மாறுவதில்லை. கவனியுங்கள் முன்பு... 122சவுல் பின்மாற்றமடைந்தான். யுத்தம் நேர்ந்தபோது, அவன் என்ன செய்வதென்று அறியாமலிருந்தான். அப்பொழுது தேசத்தில் ஒரு தீர்க்க தரிசி கூட இல்லை. எனவே அவன் எந்தோரில் அஞ்ஞனம் பார்க்கிற ஒரு ஸ்திரீயிடம் சென்றான். இப்பொழுது, காளை வெள்ளாட்டுக்கடாவின் இரத்தத்தினால், அவள் சாமுவேலின் ஆவியைக் கூப்பிட முடிந்தது. ஆகவே, சாமுவேல் எழுந்து வந்தபோது, அவன் தீர்க்கதரிசியின் அங்கியை அணிந்திருந்தான். அது மாத்திரமல்ல, மரித்த பிறகும் அவன் தீர்க்கதரிசியாகவே இருந்தான். அவன், 'தேவன் உன் சத்துருவாயிருக் கும் போது, நீ என்னை எழும்பிவரப் பண்ணினதென்ன? நாளை இரவில் இந்நேரத்தில் நீ யுத்தத்தில் விழுந்து போவாய். நாளை இரவில் இந்நேரத் தில் நீ என்னுடன் கூட இருப்பாய்' என்றான். அவன் கூறினவாறே நிகழ்ந்தது. பாருங்கள்? அவன் மரித்தும் தீர்க்கதரிசியாயிருந்தான். பாருங்கள்? ஆகவே இந்த இரண்டு நபர்களும் இன்னமும் அவ்வாறே தீர்க்க தரிசிகளாயிருக்கின்றனர். கர்த்தருக்குச் சித்தமானால், இன்னும் சில நிமி டங்களில் அதைக் குறித்து சற்று ஆழமாக சிந்திக்கலாம். பாருங்கள்? 123ஓ! என்னே! நான் எவ்வளவாக தேவனுடைய வார்த்தையை நேசிக் கிறேன். 'மனுஷன் அப்பத்தினால் மாத்திரமல்ல, தேவனுடைய வாயி லிருந்து புறப்படும் ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்'' என்று கூறப்பட்டுள்ளதில் வியப்பொன்றுமில்லை. மறுபடியுமாக நடப்பிக்கப்படுகின்ற அவர்களுடைய கிரியை களின்படியே பார்த்தால், இந்த இரண்டு தீர்க்கதரிசிகள் மோசே மற்றும் எலியா ஆவர். அதுதான் அவர்கள் எக்காலத்திலும் கொண்டிருக்கும் ஊழியமாம். அவர்கள் செய்ததை இப்பொழுது கவனியுங்கள். அது அவர்களை மாற்றவேயில்லை. இவர்கள் மரிக்கவில்லை என்பது நினை விருக்கட்டும். ஒரு நிமிடம் சற்று கவனியுங்கள். இப்பொழுது எலியாவின் ஐந்தாம் முறை ஊழியத்தை அவன் நான்காம் முறை ஊழியத்துடன் சேர்த்து குழப்பமுற வேண்டாம். புற ஜாதி சபை எலியாவின் வருகைக்காகக் காத்துக் கொண்டிருக்கிறது என்று நான் உங்களிடம் கூறிக் கொண்டேயிருக்கிறேன். சரி. 124ஆகவே இங்கே அவன் இரண்டு சாட்சிகளில் ஒருவனாக வரும் போது, யூதர்களுக்கென்று வருகிறான். எலியா நான்கு முறை வரமுடி யாது. ஏனெனில் நான்கு என்பது பிசாசின் எண்ணிக்கை. அவன் ஐந்து முறை வரவேண்டும். முதன் முறையாக அவன் எலியாவாக வருகிறான். இரண்டாவது முறை அவன் எலிசாவாகத் தோன்றுகிறான். அதற்கடுத்த முறை அவன் (என்ன?) யோவான் ஸ்நானனாக வந்தான். நான்காம் முறை அவன் ஏழாம் தூதனாக வருகிறான். ஐந்தாவது முறை அவன் மோசேயுடன் அங்கே பிரசங்கிக்கும்படி வருகிறான். நிச்சயம். ஆம், ஐயா. நீங்கள் குழப்பமுற வேண்டாம். ஊஊம். நீங்கள் வேதத்தின் எண்களை அறிவீர்களானால், ஐந்து என்பது உழைக்கும் கிருயிைன் (Laboring Grace) எண்ணிக்கையாகும். தேவன் அதைத்தான் செய்தார். இப்பொழுது கவனியுங்கள். அது எங்குள்ளது என்று நீங்கள் காண விரும்புகிறீர்களா? இயேசு கிருபையாலுண்டான ஊழியர் (Labor of Grace) அல்லவா? இயேசு - ஆங்கிலத்தில் J-E-S-U-S ஐந்து எழுத்து, உழைப்பு (Labor ஊழியம், உழைப்பு ஐந்து எழுத்து - அமெரிக்க நாட்டில் Labour என்ற வார்த்தையை Labor என்றே எழுதுவர் - தமிழாக்கியோன்). அது சரியா? நம்மீது அவர் கொண்ட அன்பினால் உண்டான ஊழியம், உழைப்பாகும். நாம் அவரிடம் எவ்விதம் அணுக வேண்டும்? எதனால்? ஊழியத்தில் கொண்டுள்ள விசு வாசத்தால். (F-A-I-T-H in L-A-B-O-R) அது சரியா? உழைப்பு என் பது (Labor) விசுவாசிகளுக்கு கிருபையின் எண்ணாக இருக்கின்றது. சரி, 125இப்பொழுது கவனியுங்கள். முதன்முறையாக அவன் எலியாவாக வருகிறான். இரண்டாவது முறை எலிசாவாக வருகிறான். மூன்றாவது முறை யோவான் ஸ்நானனாக. நான்காம் முறை மல்கியா 4-ன்படியும், வெளிப்படுத்தல் 10:7ன்படியும் அவன் ஏழாம் சபையின் தூதனாகவும், ஐந்தாம் முறை மோசேயுடன் யூதர்களுக்கான செய்தியாளனாக-1,44,000 பேர்களுக்காக-வருகிறான். ஆகவே இது சபை எடுக்கப்பட்ட பின்னர் நிகழும். 126எனக்கு ஒரு விசித்திரமான உணர்ர்ச்சி இப்பொழுது ஏற்படுகின் றது. பாருங்கள், பாருங்கள்? கவனியுங்கள், யாராவது நினைத்தால்... இப்பொழுது நான் கூறப்போவதை நீங்கள் நன்கு அறிந்து கொள்ளுதல் அவசியம். மல்கியா 4-ல் எலியா ஜனங்களைத் திருப்புவது' அவன் யூதர்களிடம் வருவதைக் குறித்தே சொல்லப்பட்டிருக்கிறது என்று சிலர் எண்ணிக் கொண்டிருக்கலாம். அதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன், மல்கியா 4-ல் அவன் “பிள்ளைகளுடைய இருதயங் களைப் பிதாக்களிடத்தில் திருப்புவான் என்று எழுதப்பட்டுள்ளது.' பாருங்கள், பிதாக்களிடத்திற்குத் திருப்புதல். இப்பொழுது, இவ்விரண்டு ஊழியங்களிலுள்ள வித்தியாசம் என்னவென்பதை நான் காண்பிக்கிறேன். அவன் பிள்ளைகளுடைய விசுவாசத்தைப் பிதாக்களிடத்துக்கு திருப்புகிறவனாக வருவது, யூதர் களிடம் அவன் வருவதைக் குறிக்குமானால் அவன் கிறிஸ்துவை மறுத லிக்கிறான் என்று அர்த்தமாகிறது. அப்படியானால் அவன் மறுபடியும் அவர்களை நியாயப் பிரமாணத்திற்குக் கொண்டு செல்லவேண்டும். அது சரியா? ஏனெனில் அவர்கள் முற்பிதாக்கள் நியாயப்பிரமாணத் தைக் கைக்கொண்டிருந்தனர். நீங்கள் அதைப் பெற்றுக் கொண்டீர் களா? (சபையார் “ஆமென்'' என்கின்றனர் -ஆசி). 127கவனியுங்கள். எலிசா மல்கியா 4-ல் கூறப்பட்டுள்ள ஊழியத்தை நிறைவேற்ற வரும்போது, பாருங்கள், மல்கியா 4, அவன் எலியாவாக தனியாக வருகிறான். ஆனால் வெளிப்படுத்தல் 11-ல் கூறியபடி யூதர்களுக்கு ஊழியஞ் செய்ய அவன் வரும்போது, மோசேயுடன் காணப்படுகின்றான். (சகோதரன் பிரான்ஹாம் தன் கரங்களை ஒன்று சேர்த்து இரண்டு முறை கொட்டுகிறார் -ஆசி) ஆகவே இதைக் குறித்து குழப்பமுண்டாக வழி யில்லை. பாருங்கள்? அதைப் புரிந்து கொண்டீர்களா? (சபையார் “ஆமென்'' என்கின்றனர்). 128எலிசா மல்கியா 4-ல் வரும்போது அவன் தனியாகவே வருகிறான். எலியாவும், மோசேயும் அல்ல. ''எலியா'' எழுகிறான். எலியா சபையின் காலங்களின் கடைசி கட்டத்தில் வந்து அந்திக்கிறிஸ்து பறித்துக் கொண்ட பிள்ளைகளின் விசுவாசத்தை அப்போஸ்தல பிதாக்களின் மூல விசுவாசத்துக்குத் திருப்புவானென்பதை மல்கியா 4-ம் அதிகாரம் எடுத் துரைக்கிறது. ''பண்டைய நிலைக்கு திரும்பக் கொண்டு செல்வது'' என்பது, ஏனைய வேதவாக்கியங்களும் இதனுடன் நன்றாக இணை கின்றன. பாருங்கள், அவன் தனியாகவே வருகிறான். பாருங்கள்? ஆனால் அவன் சபையினிடத்திற்கு வரும்பொழுது, வேதம். ஆனால் எலியா 1,44,000 பேர்களுக்காக வரும்போது, அவன் ஒருவனாக வரவில்லை. இருவர் வருகின்றனர் என்று வேதம் தெளிவாகக் கூறு கின்றது. இருவர் வருகின்றனர். அவனுடைய முதலாவது வருகையின் போது, அவனால் யூதர்களை மறுபடியும் நியாயப்பிரமாணத்திற்கு திருப்ப முடியவில்லை... அவன் இங்கே வரும்பொழுது, “அதோ அவர்தான், சங்கரிக்கப்பட்ட அந்த மேசியா'' என்று 1,44,000 யூதர்களுக்கு கிறிஸ்து வைப் பிரசங்கிப்பான். ஆமென், ஆமென். எனவே இதைக் குறித்து குழப்பமுற வேண்டாம். அது குழப்பமானதல்ல. வேதம் ஒருபோதும் பொய்யுரையாது. மகிமை! ஓ, நான் இதைக் கண்டபோது, நான் துள்ளிக் குதித்து ''கர்த்தாவே, உமக்கு ஸ்தோத்திரம்' என்று கூறினேன். முதலில் எலியா தனியாக வருவதையும், பின்பு சபை காலங்களில் அவன் மறுபடியும் தனிப்பட்டவனாக வருவதையும், முடிவில் யூதர்களுக்காக வரும்போது, அவன் மோசேயுடன் காணப்படுவதையும் நான் தரிசனமாகக் கண் டேன், “அதோ அங்கு அங்குள்ளது. கர்த்தாவே, நான் உண்மையை அறிந்து கொண்டு விட்டேன். ஆமென்! நான் இப்பொழுது அதைக் காண்கிறேன்! அல்லேலூயா! அது சரியாக உள்ளது.'' என்று நான் அவரிடம் கூறினேன். 129நான் அதை உங்களுக்கு குறிப்பிடாதிருந்தால், இங்கு யாராவது அதைக் குறித்து குழப்பமுற்றிருப்பீர்கள். ஆகவே, இதை நான் உங் களுக்கு விளக்கமாகக் கூற வேண்டுமென்று அவர் என்னிடம் சொன்னார். கவனியுங்கள், அவர்கள் அன்று செய்த ஊழியத்தை எதிர் காலத்திலும் செய்யவேண்டி தேவன் அவர்களை உயிருடன் வைத் திருக்கிறார் என்பதை கவனிக்கவும்; அவ்வூழியத்தை அவர்கள் நன்கு செய்தனர். எலியாவின் ஆவி ஐந்து முறை ஊழியம் செய்கின்றது. மோசேயின் ஊழியம் இருமுறை காணப்படுகின்றது. என்ன? மிகுந்த தொலைதூரத்திலுள்ள இனிமேலும் செய்யவேண்டிய ஊழியத்திற் கென்று அவர்கள் உயிருடன் வைக்கப்பட்டனர். அவர்களிருவரும் மரித்த நிலையில் இப்பொழுது இல்லை. அதை (அவர்கள் மரித்தனர் என்பதை - தமிழாக்கியோன்) நீங்கள் நம்ப வேண்டாம். மறுரூபமலையில் அவர்கள் உயிருள்ளவர்களாக, இயேசு வுடன் சம்பாஷித்துக் கொண்டிருக்கிறவர்களாகக் காணப்படுகின்றனர். ஆனால் அவர்கள் மரிக்க வேண்டும் என்பதை நீங்கள் நினைவில் கொள் ளுங்கள். இப்பொழுது, இப்பொழுது, மோசே உண்மையாகவே மரித்துப் போனான். ஆனால் அவன் உயிரோடெழுந்தான். ஏனெனில் அவன் கிறிஸ்துவுக்கு எல்லாவிதங்களிலும் பரிபூரண முன்னடையாளமாயி ருக்கிறான். பாருங்கள் அவன் எங்கு புதைக்கப்பட்டான் என்பதை எவருமே அறியார். தேவ தூதர்கள் அவனைக் கொண்டு சென்றனர். பாருங்கள்? அவனுடைய சவத்தைத் தூக்கிச் செல்ல தேவதூதர்கள் நியமிக்கப்பட்டனர். ஊஊம். ஏன்? எந்த ஒரு மனிதனும் அவன் வைக்கப்படவேண்டிய இடத்திற்கு அவனைக் கொண்டு சென்றிருக்க முடியாது. அவன் ஒரு காட்சிப்பகுதியின் மூலம் (act) கடந்து சென்றான். அவ்வளவு தான். அவன் எங்கு செல்ல வேண்டுமோ அங்கு அவனைக் கொண்டு செல்ல அவனுக்கு தேவதூதர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். அவன் எங்கு கொண்டு செல்லப்பட்டான் என்பதையும் யாருமே அறி யார். சாத்தானுங்கூட அதை அறியவில்லை. அவன் மிகாவேல் தேவ தூதனுடன் அவன் சரீரத்தைக் குறித்து வாக்குவாதம் செய்தான். அது சரி. அவன், “மோசேக்கு என்ன நேர்ந்ததென்று எனக்குப் புரியவே யில்லை. மலையின்மேல் ஏறி, நடுங்கிக் கொண்டே கானான் தேசத்தையும் இஸ்ரவேல் ஜனங்களையும் அவன் கண்ட காட்சி மாத்திரமே எனக்கு ஞாபகமிருக்கிறது. அதுதான் நான் அவனைக் கடைசி முறையாகக் கண் டது'' என்றான். ஆம், அவன் மலையின் மேல் ஏறினான். அது அந்த மலையேதான். நானும் என் ஜீவிய ஓட்டத்தின் முடிவில் அந்த மலையின் மேல் நிற் பேனாக! ஆம், ஐயா! இப்பொழுது, என் நீக்ரோ சகோதரர் இங்கு வந்து, ''என்னால் முடிந்தால் மோசே நின்ற அந்த மலையின் மேல் நானும் நிச்சயம் நிற்பேன்'' என்னும் அர்த்தம் கொண்ட பாட்டைப் பாடினது எனது நினைவுக்கு வருகின்றது. ஆம் ஐயா! அந்த மலையின் மேல் நானும் நிற்க விரும்புகிறேன். விசுவாசத்தில் நான் இப்பொழுதே அதன் மேல் நிற்கிறேன். 130இப்பொழுது நினைவில் கொள்ளுங்கள், எலியா, அவன் மிகவும் களைப்புற்றான், ஏனெனில் அவன் செய்ய வேண்டிய வேலை அவனுக்கு முன்பாக அதிகமாக இருந்தது. (சகோதரன் பிரான்ஹாம் பிரசங்கத்தை சிறிது நிறுத்துகிறார். சபையார் சிரிக்கின்றனர் -ஆசி) ஆகவே, அவன் களைப்புற்றிருந்த காரணத்தால் தேவன் ஒரு இரதத்தை அனுப்பி, அவனை வீட்டுக்கு அழைத்துக் கொண்டார். அது சரியா? (“ஆமென்'') அவர் அவனை எடுத்துக்கொண்டார். அவன் மரிக்கவேயில்லை. ஏனெனில் அவன் இன்னமும் செய்ய வேண்டிய வேலை உண்டு. வேறொருவன் எலியாவின் ஆவியைக் கொண்டவனாக வரலாம். ஆனால் எலியாவும் மோசேயும் மரணத்தை ருசி பார்க்க வேண்டும். இப்பொழுது வெளிப்படுத்தல் 11-ம் அதிகாரம். நான் இந்தப் பகுதிக்கு வந்துள்ளேன். ஆகவே, இப்பொழுது அதைத் தொடர்வோம். வெளிப் படுத்தின விசேஷம் 11-ம் அதிகாரத்தைப் பார்ப்போம். அவர்கள் கொல்லப்படுகின்றனரா என்று நாம் கவனிப்போம். ஆம், ஐயா. அவர்கள் இருவரும் மரணத்தை ருசி பார்க்க வேண்டும். ஆம், ஐயா. அவர்கள் ஊழியம் முடிவடைந்த பின்னர், அவர்கள் மரணத்தை ருசி பார்க் கின்றனர். வெளிப்படுத்தல் 11-ம் அதிகாரம் 7-ம் வசனம் முதல்: அவர்கள் தங்கள் சாட்சியைச் சொல்லி முடித்திருக்கும் போது, பாதாளத்திலிருந்தேறுகிற மிருகம் அவர்களோடு யுத்தம் பண்ணி ... ஓ, அவர்களைக் காணவே அவனுக்கு சகிக்கவில்லை. பரிசுத்த உரு ளர்கள் மறுபடியும் வந்து விட்டனர் என்று அவன் எண்ணுகின்றான். எனவே அவன் அவர்களுடன் யுத்தம் செய்கிறான். சரி, சரி. பாதாளத்திலிருந்தேறுகிற மிருகம் அவர்களோடு யுத்தம் பண்ணி... அவர்களை ஜெயித்து, அவர்களைக் கொன்றுபோடும். இப்பொழுது என்ன நேரிடுகிறதென்று கவனியுங்கள். அவர்கள் இப்பொழுது முழுமையான முன்னடையாளமாக்கப்படுகின்றனர். அவர்களுடைய உடல்கள் மகாநகரத்தின் விசாலமான வீதி யிலே கிடக்கும். அந்த நகரம் சோதோம் என்றும் எகிப்து என்றும் ஞானார்த்தமாய்ச் சொல்லப்படும்; அதிலே நம் முடைய கர்த்தரும் சிலுவையிலே அறையப்பட்டார். (எருசலேம், பாருங்கள்) 131இப்பொழுது, அவர்கள் ஊழியம் முடிவடைந்த பின்னர், (மரண மடைய வேண்டுமல்லவா?) அது சரி. மரணத்தை அவர்கள் சந்திக்க வேண்டும். ஏன்? அந்த ஏழாம் தூதனின் ஊழியம், ஏழாம் தூதனின் ஊழியம், ஏழாம் தூதனுக்கான எலியாவின் ஊழியமானது, அல்ல... நான் கூற முயற்சிப்பது என்னவெனில், ஏழாம் தூதனின் ஊழியம், ஏன் மோசேக்கு அளிக்கப்படவில்லை. மோசேயின் ஊழியம், எலியாவின் ஊழியத்தைப் போலவே அழியாத ஒன்றல்லவா? தேவன், “எலியாவே, நீ அதிக வேலை செய்து களைப்புற்றிருக்கிறாய். நீ இந்த வித்தியாசமான இடங்களுக்குச் சென்றாய். எனவே, நான் மோசேயை இவ்வூழியத்திற் கென்று அனுப்புகிறேன்'' என்று அவர் ஏன் சொல்லவில்லை? ஏன்? 132மோசேயின் ஊழியத்தை சற்று கவனியுங்கள், எலியா எல்லா தேசங்களுக்கும் ஒரு தீர்க்கதரிசியாக இருந்தான். ஆனால் மோசே யூதர்களுக்கு மாத்திரம் நியாயப்பிரமாணத்தை அளித்தான். ஆமென். மோசே அவர்களுக்குச் சொல்லும்படியாக அங்கே. மோசே எலியாவுடன் வருகின்ற காரணம் என்னவெனில்... யூதர்கள். ''நாங்கள் இன்னமும் நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்கிறோம்'' என்கின்றனர், ஆகையால், மோசே அவர்களுக்கென்று அனுப்பப்படுகின்றான். அவனுடன் கூட எலியாவும் காணப்படுகின்றான். ஓ, பாருங்கள், மோசே யூதர்களிடம் மாத்திமே வருகிறான். மோசே யூதர்களிடம் மாத்திரமே சென்றான். ஆனால் எலியா எல்லா தேசங்களுக்கும் தீர்க்கதரிசியாக இருப்பதால் அவன் புறஜாதிகளிடமும் வர முடிகிறது. மோசே யூதர்களுக்குத் தீர்க்க தரிசியாக விளங்கி, நியாயப்பிரமாணத்தை அளிக்கிறான். பாருங்கள். நியாயப் பிரமாணம்தான் அவனுடைய செய்தியாய் இருந்தது. ஆனால், எலியாவின் செய்தி என்ன? அவன் தலைமயிரைக் கத்தரித்துக்கொண்ட குட்டை மயிரைக்கொண்ட ஸ்திரீகளுக்கும் ஸ்தாபனங்களுக்கும் விரோதமாக பிரசங்கித்தான். ஆம், ஐயா. அவர்களை அவன் சின்னாபின்னமாக்கினான். வர்ணம் தீட்டியிருந்த அந்த பெண்ணை நாய்கள் தின்னும் என்று அவன் சொன்னான். அவன் அவைகளைத் கிழித் தெறிந்தான். ஆகவே எலியாவின் ஆவி மறுபடியும் யோவானில் வந்தபோது அவன் வனாந்திரத்திலிருந்து வெளியே வந்து எலியா செய்ததையே செய்தான். சரி. அவன், ''நீங்கள் இதைச் சார்ந்தவர்கள் அதைச் சார்ந்தவர்கள் என்று சொல்ல வேண்டாம். தேவன் இந்த கல்லுகளினாலே ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டுபண்ண வல்லவராயிருக்கிறார்'' என்றான். அவன் ஏரோதியாளை அணுகி, ''நீ உன் சொந்த மைத்துனனைக் கலியாணம் செய்து கொண்டது சரியா? நீ செய்தது சிறிதேனும் நியாய மில்லை'' என்று தைரியமாகக் கூறினான். கவனியுங்கள். ஓ, சகோதரனே, வ்யூ! ஹும்! அவன் தைரியமாகக் கூறினான். நிச்சயமாக. 133கவனியுங்கள், 1,44,000 பேர் இரத்த சாட்சியாய் மரிக்கும்வரை, பலிபீடத்தின் கீழுள்ள இந்த ஆத்துமாக்கள் காத்திருக்க வேண்டும். ஓ, அது அவ்வாறல்லவா... வேத வாக்கியங்கள் சரியாக இணைவதை நீங்கள் காண்கிறீர்களா? எனக்கு பிரசங்கத்திற்காக கொடுக்கப்பட்ட சமயம் முடிந்துவிட்டது. ஆனால் உங்களால் முடிந்தால், இன்னும் சில காரியங்களைக் கூற விரும்புகிறேன். (சபையார் ''தொடர்ந்து பேசுங்கள்“ என்கின்றனர்ஆசி) இங்கு உஷ்ணமாயிருக்கிறதென்று எனக்குத் தெரியும். எனக்கும் வியர்க்கிறது. ஆனால் கவனியுங்கள், சில காரியங்களை உங்களிடம் கூற நான் விரும்புகிறேன். அவை என் இருதயத்தை அனல் மூட்டும் அளவுக்கு நல்லவைகளாய் அமைந்துள்ளது. நீங்கள் அதை மறந்திருக்கமாட்டீர்கள் என்றே நான் நம்புகிறேன், பாருங்கள். இதை நான் தேவனுடைய சமூகத் திற்கு முன்பாக உங்களிடம் கூறுகிறேன். ஏறக்குறைய ஒரு வருடத் துக்கு முன்பு, என் ஊழியத்தில் இரட்சிக்கப்பட்ட என் ஜனங்கள் வெள்ளை யங்கிகள் தரித்திருப்பதை நான் காண அவர் கிருபையாய் அனுமதித் தார். உங்களுக்கு ஞாபகம் உள்ளதா? (சபையார் “ஆமென்” - ஆசி) நினைவிருக்கின்றதா? புறஜாதி மணவாட்டியை நான் கண்டதை உங்களிடம் கூறினது நினைவிருக்கிறதா? ( 'ஆமென்') இப் பொழுது அவர்கள் அங்கிருக்கின்றனர். நான் அவர்களைக் கண்டபோது அவர் களெல்லாரும் வெள்ளையங்கிகளை அணிந்திருந்தனர். 134நான் படுக்கையை விட்டு விழித்திருந்தேன். நான் ஒரு கூட் டத்தை நடத்தி முடித்திருந்தேன். ஏறக்குறைய ஒரு வருடத்திற்கு முன் னால் இருக்கும். நான் ஒரு நாள் படுக்கையை விட்டு எழுந்தேன். என் மனைவியைப் பார்த்து, ''அன்பே'' என்று கூப்பிட்டேன். அவள் அசையவேயில்லை. பிள்ளைகள்... நான் எழுந்திருந்து, பழைய இடத் திலுள்ள பள்ளிக்கு பிள்ளைகளைக் கொண்டு செல்ல வேண்டியிருந்தது. நல்லது, நான் படுக்கையை விட்டு எழுந்து, சாய்ந்து உட்கார்ந்தேன். எங்களிடத்தில் பழங்கால கட்டில் ஒன்று உண்டு. நான் அவ்விதமாக சாய்ந்து உட்கார்ந்தேன். ''எனக்கு ஐம்பத்து மூன்று வயதாகிவிட்டது. தேவனுக்கென்று ஏதாவது செய்யவேண்டுமென்றால் உடனடியாக நான் செய்ய வேண்டும். இல்லையேல் சற்று கழிந்தால் ஒன்றும் செய்ய முடியாதபடிக்கு வய தாகிவிட்டிருக்கும்'' என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆகவே நான் அது உண்மை என்று நினைத்தேன். இன்னும் எனக்கு அதிக நாட்களில்லை என்றும், நான் சீக்கிரமாக கடந்து செல்ல வேண்டியவனாயிருக்கிறேன் என்றும் எண்ணினேன். நான் என் தந்தை வாழ்ந்ததைவிட இப்பொழுது ஒரு வயது கூடுதலாகவே வாழ்ந்திருக் கிறேன். பாருங்கள்? ''நான் அதிசீக்கிரத்தில் கடந்து செல்ல வேண்டிய வனாய் இருக்கிறேன். நான் அதைக் காண்கிறேன். ஆனால் தேவனுக் கென்று இன்னும் ஒன்றும் செய்யவில்லை“ என்றே எண்ணினேன். 'நான் தேவனுக்காக ஏதாவது ஒன்றைச் செய்ய வேண்டும் என்று எப்பொழு துமே விரும்பியுள்ளேன். நான் அவ்விதமாகச் செய்ய வேண்டுமெனில், அதைத் துரிதமாகச் செய்ய வேண்டும். நான் அதை எப்படிச் செய்யப் போகிறேன் என்று அறியாதவனாய் இருக்கிறேன், அவ்வளவுதான், என்று நினைத்துக் கொண்டிருந்தேன். 135அவரது வருகையின்போது நான் உயிர் வாழ்ந்து கொண்டிருக்க வேண்டுமென்னும் விருப்பம் எனக்கு எப்பொழுதும் இருந்து வந்தது. ஏனெனில் நான் ஒரு ஆவியாயிருக்க, ஒரு ஆவியின் உருவம் (spook) கொண்டவனாயிருக்க விரும்பவில்லை. பாருங்கள், நான் அந்த ஆவி உருவத்திலிருக்க பயந்தேன். நீங் கள் அறிவீர்கள், அவ்விதமாக நான் சகோதரன் நெவிலை சந்திப்பேனானால் அவர் ஒரு வெண் மேகமாகவே சுற்றி அசைந்து கொண்டிருப்பார் என்றே நான் எப்பொழுதும் எண்ணினேன். நான் வேறொரு உணர்வினால் அவரைப் பார்த்து, “ஹலோ, சகோதரன் நெவில்'' என்பேன். அவரும் ”ஹலோ சகோதரன் பிரான்ஹாமே'' என்பார்; ஏனெனில் அவரால் அசைய முடியாதே என்றே எண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால் அது சகோதரன் நெவில் என்பதை மாத்திரமே அறிந்திருப்பேன் என்று நினைத்தேன். ஆம், நான் எப்பொழுதும் செய்வதுபோல் சகோதரன் நெவிலுடைய கரங்களை குலுக்குவேன். மனிதனான நான், அதை மட் டுமே செய்ய அறிந்துள்ளேன். பாருங்கள், அவருடைய கரத்தை குலுக்கு வேன்; ஆனால் அவருக்கு கைகள் இராதே. ஏனெனில் அவைகள் மர ணக்குழியில் அழுகிப் போனதே என்று நினைத்தேன். பாருங்கள்? ''என்னே, நான் இவ்விதமாகக் கடந்து செல்ல வேண்டியதில்லை என்றே நம்புகிறேன்'' என்று எண்ணினேன். இப்பொழுது... நான் உங்களுக்கு உண்மையைக் கூறிடவே விரும்புகிறேன். நான் மரிப் பதற்கு பயந்தேன். ஆனால் நான் கைவிடப்படுவேன் என்ற பயம் எனக்கில்லை. ஆனால் என்னமோ ஒரு ஆவியாக இருக்க நான் விரும்பி னதில்லை. உடலைக்கொண்ட ஒரு மனிதனாகவே இருக்க நான் விரும்பி னேன். நான் எடுக்கப்படுதலுக்காக காத்திருக்கவே விரும்பினேன். பாருங்கள். ஒரு ஆவியாக சுற்றிக் கொண்டிருக்க எனக்கு விருப்பமில்லை. இங்ஙனம் எண்ணியவாறே நான் படுத்துக்கொண்டிருந்தேன். திடீரென்று அதிசயமான ஒன்று சம்பவித்தது. (சகோதரன் 136இப்பொழுது, அந்த தரிசனங்களைக் குறித்து நீங்கள் அறிவீர்கள். அவைகள் உங்களுக்குப் பழக்கமானதே. இதை நான் தரிசனமென்று கூறத் தலைப்பட்டால், இத்தகைய ஒரு தரிசனத்தை நான் என் சிறுவயது முதல் கண்டதேயில்லை. பாருங்கள்? சடுதியாக இச்சரீரத்தை விட்டுப்போகும் உணர்ச்சி எனக்கு ஏற் பட்டது. 'ஊம்-ஓ' என்று நான் நினைத்தேன். ''நான் ஏற்கனவே மரித்து விட்டேன், பாருங்கள்,'' என்றே எண்ணினேன். பாருங்கள்? என் ஆவி என் சரீரத்தை விட்டுப் பிரிந்தது. நான் ஒரு ஸ்தலத்திற்கு வந்தேன். அப்பொழுது, “நான் திரும்பி பார்க்க விரும்புகிறேன்'' என்று எண்ணினேன். நண்பர்களே, நான் உங்களுக்கு முன்பு நிற்பது போலவே, அது மிக உண்மையாகவே இருந்தது. பாருங்கள்? நான் திரும்பிப் பார்த்தபோது, என் சரீரம் மாத் திரம் என் மனைவியின் பக்கத்தில் படுத்திருப்பதைக் கண்டேன். இருதய அதிர்ச்சியின் காரணமாக நான் சடுதியாக இறந்து விட்ட தாக எண்ணிக்கொண்டேன். பாருங்கள்? இவ்விதமாக சடுதியாய் மரிப்பதுதான் அருமையானது என்று எண்ணினேன். “இருதய அதிர்ச்சி யினால் மரித்துவிட்டேன். நான் துன்பப்படவில்லை'' என்று நினைத்தேன். நான் நோக்கிப் பார்த்து, ''நல்லது, இப்பொழுது இது விநோதமாயுள்ளதே. அங்கே நான் படுக்கையில் படுத்திருக்கிறேன்; இங்கே நிற் கிறேன்'' என்று எண்ணினேன். 137ஆகவே, நான் திரும்பினேன். என் ஆவி சென்ற ஸ்தலத்தில் ஒரு மகத்தான, பெரிய வயல் வெளியைக் கண்டேன். அங்கே ஊதா நிறப் புற்கள் பரவியிருந்தன. இது என்னவென்று நான் அதிசயப்பட்டேன். நான் பார்க்கையில், சடுதியாக, லட்சக்கணக்கான வாலிபப் பெண்கள் வெள்ளையங்கி தரித்தவர்களாய், தலைமுடி இடுப்பு வரைக் கும் வளர்ந்து, காலில் ஒன்றும் அணியாமல் என்னை நோக்கி ஓடிவரு வதைக் கண்டேன். நான் “இது என்ன'' என்று நினைத்தேன். அவர்கள் மிகவும் அழகாயிருந்தனர். நான் திரும்பி அங்கே நோக்கினேன். நான் அங்குதான் (படுக் கையில் தமிழாக்கியோன்) இருந்தேன். நான் இந்த வழியாய் மேலே நோக்கிப் பார்த்தேன். அதோ அவர்கள் வந்தார்கள். நான் என் நகத்தைக் கடித்துக் கொண்டேன். நான் நித்திரையில் இல்லையே, அது சரி'' ஆனால் என்னால் உணர முடிந்தது. ஆகவே, ''நல்லது, ஏதோவொன்று, புதிராய் இருக்கின்றது'' என்று எண்ணினேன். அந்த வாலிபப் பெண்கள் என்னை நோக்கி ஓடிவந்தனர். இவ்வித அழகான பெண்களை நான் ஒருபோதும் கண்டதேயில்லை. அவர்கள் என்னை நோக்கி ஓடி வந்தனர். அவர்கள் என்னிடம் ஓடி வந்தபோது... 138நான் எவ்விதமானவன் என்று நீங்கள் அறிவீர்கள். நான் ஸ்திரீகளை வெறுப்பவன் என்று எல்லோரும் கூறுவது வழக்கம். ஆனால் அது உண்மையல்ல. பாருங்கள். ஒரு நல்ல ஸ்திரீ விலையேறப் பெற்ற ஆபரணமாயிருக்கிறாள். சாலமோன் கூறுவதைப்போல, இரத்தத்தில் தண்ணீர் கலந்த தண்ணீரைப்போல... நன்னடத்தை கெட்ட ஸ்திரீ களையே நான் வெறுக்கிறேன். இந்தப் பெண்கள் என்னருகில் வந்து, தங்கள் கரங்களினால் என்னைச் சுற்ற ஆரம்பித்தனர். இப்பொழுது, இது அசாதாரண ஒன்றாகும். நான் அதற்கு ஒப்புதல் அளிப்பவன் அல்ல என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆகவே, அவர்கள். இது ஆண்களும் பெண்களுமாக ஒன்றாய் அமர்ந்துள்ள ஒரு கூட்டம். ஆகவே நான் இதை இவ்வழியில் கூற வேண்டியவனாய் இருக்கிறேன். அவர்கள் பெண்கள். அவர்கள் பெண்கள், அவர்கள் என்னை ஒவ்வொருவராகக் கட்டித் தழுவி, “எங்கள் அருமை சகோதரனே'' என்றனர். என்னை ஒரு பெண் கட்டித் தழுவின பின்பு, வேறொரு பெண் என்னைக் கட்டித் தழுவினாள். நான் அங்கே நின்று, பார்த்துக் கொண்டிருந்தேன். “நல்லது, இப்பொழுது, இது என்ன?” என்று நினைத்தேன். அவர்கள் அங்கே நின் றிருந்தனர். “என்ன சம்பவித்தது'' என்று எண்ணினேன். நான் திரும்பி கீழே பார்த்தேன். அங்கே நான் கட்டிலில் படுத்திருந்தேன். ஆனால் இங்கே நான் நின்றிருந்தேன். இந்த விசித்திரமான காட்சியை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. 139அந்தப் பெண்கள், “எங்கள் அருமை சகோதரனே,'' என்று சத்த மிட்டுக் கொண்டிருந்தனர். 366. சகோதரிகளே, நான் இப்பொழுது கூறப்போவதை நீங்கள் மன் னிக்க வேண்டும். நான் சொல்லுவதின் காரணம் என்னவெனில்... நீங்கள் உங்கள் வைத்தியரைக் கேட்டுப் பாருங்கள். நமக்கு மாசற்ற சிந்தை இல்லாவிடில் நாம் கிறிஸ்தவர்களல்ல. எனக்குக் கவலையில்லை... நான் அவ்வாறு என் சிறு வயது முதல் வாழ்ந்து வந்திருக்கிறேன் என்பதை தேவனறிவார். நான் சிறுவனாயிருந்தபோது கர்த்தருடைய தூதன் என்னிடம், நான் புகைபிடித்தல், மது அருந்துதல், அல்லது சரீ ரத்தை அசுசிப்படுத்தும் எந்த செயல்களிலும் ஈடுபடக்கூடாது என்று கூறியிருந்தார். அது உண்மையாகவே இருந்து வந்திருக்கிறது. தேவ கிருபையினால் நான் அதை அனுசரித்து வந்திருக்கிறேன். இரட்சிக்கப் படுவதற்கு முன்பும் கூட நான் எந்தப் பெண்ணுடனும் சுற்றித் திரிந்த தில்லை . ஆகவே ... ஆனால் ஒரு மனிதன் ஒரு பெண்ணை கட்டித் தழுவும்போது, அவர்கள் ஆரோக்கியமுள்ளவர்களாயிருந்தால், அவர்களிருவருக்கும் ஓர் உணர்ச்சி ஏற்படுகிறது. ஏனெனில் அவர்கள் அணுக்களைக் (Cells) கொண்டவராயிருக்கின்றனர். நீ யாராய் இருந்தாலும் எனக்குக் கவலையில்லை. இப்பொழுது, உனக்கு அவ்வித உணர்வு இல்லை என்று நீ என்னிடம் கூற வேண்டாம். 140ஆனால் நான் ஆவியில் சென்றவிடத்தில் அங்குள்ளவர்களுக்கு அணுக்கள் இல்லாததால் அவர்கள் கட்டித் தழுவினாலும் பாவம் செய் வதில்லை. அங்கே ஒரு வித்தியாசம் இருந்தது. அந்தப் பெண்களிடம் சகோதர அன்பு காணப்பட்டதேயன்றி வேறல்ல. ஒரு ஸ்திரீ தனக்களிக்கப்பட்ட ஸ்தானத்தில் நிலை நின்றால், அவள் பூமியில் ஒரு விலையேறப்பெற்ற ஆபரணமாயிருக்கிறாள். இயல் நயமுடைய நேர்த்தியான ஒவ்வொன்றையும் நான் விரும்புகின்றேன். அவள் அப்பொழுது கெளரவிக்கப்படும் ஒரு சிலையைப் போன்றிருக்கி றாள். நானும் அதை நம்புகிறேன். ஆனால் அவள் நிலை மாறும்போது, கிறிஸ்துவுக்கும் அந்திக்கிறிஸ்துவுக்கும் என்ன வித்தியாசமோ, அவ்வ ளவு வித்தியாசம் அவர்களிருவருக்கும் உண்டு. 141இயற்கையான ஒவ்வொன்றையும் நான் விரும்புகிறேன். ஒரு அசலான, அழகான குதிரை தன் ரூபத்தில் நிற்பதால் நான் அழகான குதிரையை விரும்புகிறேன். அதைப் போலவே ஒவ்வொன்றையும் விரும்புகிறேன். தேவனுடைய அமைப்பில் நிற்கிற ஒரு அழகான மலை, ஸ்திரீகள், அழகான புருஷர்கள் மற்றவை எல்லாவற்றையும் நான் வியந்து பாராட்டுகிறேன். ஆகவே, அவர்கள் குறைபாடற்றவராய் இருந்தனர். அவர்கள் ஸ்திரீகள் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள். அவர்கள் தங்கள் கரங்களில் எவ்வளவாய்க் கட்டித் தழுவினாலும், பாவம் என்பதே அங்கே ஒரு போதும் இல்லை. ஏனெனில் ஆண் பெண் இருவரின் சுரப்பிகளும் (பாலினச் சுரப்பிகளும்) நீக்கப்பட்டிருந்தன. (சகோதரன் பிரான்ஹாம் தன்னுடைய கரங்களை ஒன்று சேர்த்து ஒரு முறை கொட்டுகிறார் - ஆசி) கர்த்தருக்கு ஸ்தோத்திரம். அவர்கள் குறைபாடற்ற என் சகோதரிகளாக இருந்தனர். நான் நோக்கிப் பார்த்தேன். ஆகவே, நான் துவங்கி... நான் என் கைகளைப் பார்த்தேன். அந்தப் பெண்கள் காண்பதற்கு மிகவும் வாலிப மாயிருந்தனர். நானும் வாலிபனைப் போலிருந்தேன். நான்... நான் இளைஞனாக இருந்தபோதே என் தலைமயிரை இழந்திருந் தேன். நான் சிறியவனாக இருந்தபோது, ஒரு சவரத் தொழிலாளி என் தலைமயிரில் கார்பாலிக் அமிலத்தை (carbolic acid) கொட்டி விட்டதால் எனக்கு அவ்விதமாயிற்று. அப்பொழுது முதல் அது அவ்விதமாகவே இருந்து வருகின்றது. என் தலையுச்சி வட்டம் (scalp) மிருதுவாக இருப் பதால், நான் மிக விரைவில் தடுமல் கொள்கிறேன் (get cold). என் தலையில் மயிர்க்கால்கள் இருந்த போதிலும், அது கார்பாலிக் அமிலத்தால் சுடப்பட்டதால், இனிமேல் ஒரு போதும் தலைமயிர் முளைக்காது. பாருங்கள்? பல வருடங்களுக்கு முன்பாக நானும் என் மனைவியும்.... என் தலையை மூடுவதற்கென்று ஒரு சிறிய பொய்மயிர்த்தோகையை (hair piece - wig) வாங்கினோம். அது பொய்யான ஒன்றாய் எனக்குத் தோன் றினதால், நான் அதை அணிவதற்கு எப்பொழுதும் வெட்கப்பட்டேன். நான் பொய்யான ஒன்றையும் விரும்பமாட்டேன். ஆகவே நான் இவ்விதமான ஒரு தொப்பியை அணிந்து கொள் வேன் என்று நினைத்து சிறிது காலம் அவ்விதமாக அணிந்திருந்தேன். அவர்கள் என்ன செய்தனர் என்று நீங்கள் அறிவீர்களா? அவர்கள் என்னை பேராயர் (Bishop) என்று அழைக்க விரும்பினர். நான் இவ்வித மாக முயல்கிறேன் என்று... பாருங்கள்? ஆகவே நான் ''இது வேண் டாம்“ என்று கூறிவிட்டேன். 142ஆனால், இப்பொழுது ஜன்னல்கள் அல்லது மற்றொன்றை உயர்த் துவதால் சிறிது குளிர்ந்த காற்று என்னைத் தாக்கும்போது, நான் ஜல தோஷத்தினால் அவதியுறுகிறேன். இதைக் குறித்து அவருடைய கருத்து என்ன என்று கேட்பதற் காக நான் ஒரு மருத்துவரிடம் சென்றேன். அதற்கு அவர், 'நல்லது பாருங்கள், உங்களுடைய மயிர்க்கண்கள் (pores) திறந்துள்ளன. நீங் கள் பிரசங்கிப்பதால் வியர்வை உண்டாகிறது. குளிர்ந்த காற்று வீசு வதால், ஜலதோஷக் கிருமிகளால் சளிபிடித்து, அது உமது தொண்டை யில் இறங்குவதால் அடுத்த நாள் காலையில் உம்முடைய தொண்டை கரகரப்பாகிவிடுகின்றது. அவ்வளவுதான்'' என்றார். ஆகவே - ஆகவே, ஓ, என்னே , தலைமயிர் உடையவர்களே, நீங்கள் அதற்காக எவ் வளவு நன்றியுடைவர்களாய் இருக்க வேண்டும். அது சரி. பாருங்கள்? நல்லது, இப்பொழுது, நான் கண்டுபிடித்தது, நான்... எனக்கு பல் இல்லாமல் போனாலும், நான் ஒரு நாள் அவைகளைப் பெற்றுக் கொள்வேன். ஆகவே ஒரு மனிதனோ ஸ்திரீயோ தான் விரும்பினால் தன் தலை மயிரின் இழப்பை ஈடு செய்ய பொய் மயிர்த்தோகை இனிமேல் அணிந்து கொள்ள வேண்டியதில்லை என்றும், ஒரு ஸ்திரீ தன் தலையில் எலிகள் அல்லது ஐந்து சுண்டெலியைப் போன்று வைத்துக் கொள்ளக் கூடாது என்று நான் நினைக்கமாட்டேன். பாருங்கள். ஆனால் நீங்கள் அதைச் செய்வீர்களானால், நீங்கள் அதை எதற்காக செய்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது. பாருங்கள்? நீங்கள் எதற்காக அதைச் செய்கிறீர்கள் என்பதைப் பொறுத்ததாகும். ஆகவே... 143நான் அவ்விதமாக அங்கே நின்று கொண்டிருந்தேன். நான் இழந்து போயிருந்த தலைமயிரும் மறுபடியும் அடர்த்தியாக முளைத்து விட்டது போன்று தோன்றியது. என்னே! நான் ஒரு வாலிபனைப் போலிருந்தேன். அந்தப் பெண்களும் அனைவரும் வாலிபமாயிருந்தனர். இது என்ன விசித்திரமாயிருக்கிறதே என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அவர்கள் என்னை நோக்கி ஓடி... அவர்கள் ஓடி வருவதைக் காண்கையில், என் மனைவி ஹோப் (Hope) வருவதைக் கண்டேன். அவள் பார்த்தாள்... அவள் இருபத்தி ரெண்டு வயதில் மரணமடைந்தாள் என்பது உங்களுக்குத் தெரியும். அவள் முன்பிருந்தது போல அழகாகக் காணப்பட்டாள். அவளுக்குக் கறுத்த பெரிய கண்களும் நீண்ட கருமையான தலைமயிரும் இருந்த தென்று அநேகர் அறிவீர்கள். அவள் ஜெர்மனி நாட்டவள். அவளுடைய கறுத்த கூந்தல் பின்புறமாக கீழே தொங்கிக் கொண்டிருந்தது. “இப்பொழுது, அவள் இங்கே வந்து, அவள் என்னை, பில்லி' என்று கூப்பிடுவாள் என்று நினைத்தேன். அவள் அவ்விதம் அழைப்பாள் என்று அறிவேன். அவள் இங்கே வந்து 'பில்லி' என்று கூப்பிடுவாள் என்று நான் அறிவேன்.'' 144நான் கவனித்துக்கொண்டேயிருந்தேன். அங்குள்ள ஒவ்வொரு பெண்ணும் என்னிடம் வந்து, என்னைக் கட்டித் தழுவி, “ஓ, அருமை யான சகோதரனே, நாங்கள் உம்மைக் காண்பதில் மகிழ்ச்சி அடை கிறோம்'' என்று கூறினர். நான் நினைத்தேன்... அனைவரும் ஒரே விதத்தில் உடை அணிந்துள்ளனர். ஆனால் அவர்கள் தலைமயிர், கறுப்பு, சிகப்பு, வெண்பொன்னிறம் என்று வெவ்வேறு வித்தியாசமான நிறத்தில் இருந் தது. அவர்கள் என்னை நோக்கி வந்தார்கள்; ஆனால் அவர்கள் அனைவரும் வாலிபமாயிருந்தனர். அவள் என்னிடத்தில் வரும்போது, ''அவள் என்ன சொல்லப் போகிறாள் என்று மாத்திரம் நான் பார்க்கப்போகிறேன்'' என்று நான் நினைத்தேன். அவள் என்னை நோக்கிப் பார்த்து, 'எங்கள் அருமை சகோதரனே' என்றழைத்தாள். அவள் என்னைக் கட்டி தழுவிவிட்டு, பேசாமல் சென் றாள். மற்ற பெண்களும் என்னிடம் வந்து, என்னைக் கட்டித் தழுவி சென்று விட்டனர். ஒரு சத்தம் கேட்டது. நான் இவ்விதம் பார்த்தபோது, வாலிபர்கள் என்னை நோக்கி வந்து கொண்டிருந்தனர். அவர்கள் ஏறக்குறைய இரு பது வயது நிரம்பியதுபோல் காணப்பட்டனர். அவர்களும் கறுப்பு, பொன்நிறம் என்று வித்தியாசமான தலைமயிர் உடையவராய் இருந்தனர். அவர்களும் வெள்ளையங்கி தரித்து, காலணிகளின்றி என்னை அணுகி, கட்டித் தழுவி, “எங்கள் அருமை சகோதரனே'' என்றனர். நான் கீழே நோக்கியபோது, என் உடல் அங்கு இருப்பதைக் கண்டேன். என்ன அதிசயம்'' என்று எண்ணிக்கொண்டிருந்தேன். ஆகவே, அப்பொழுது ஒரு சத்தம் என்னிடம் பேச ஆரம்பித்தது. 'உன் ஜனங்களிடம் நீ சேர்க்கப்பட்டிருக்கிறாய்' என்று சொன்னது. அந்த சத்தத்தை நான் காணமுடியவில்லை. அப்பொழுது ஒருவர் என்னை இதைப் போன்ற ஒரு உயர்ந்த பீடத்தின்மேல் நிறுத்தினார். “ஏன் அவ்வாறு செய்கின்றீர்?'' என்று நான் கேட்டேன். அவர், “பூமியில் எங்களுக்கு வழிகாட்டியாய் இருந்தீர்” (Leader) என்றார். ஆகவே நான், 'நல்லது என்னால் - என்னால் இதைப் புரிந்து கொள்ள முடியவில்லையே'' என்றேன். 145அந்த சத்தம் என்னிடம் பேசிக் கொண்டிருந்தது. ஆனால் நான் அந்த சத்தத்தைக் காண முடியவில்லை. இப்பொழுது அது எனக்கு மேலாக இருந்தது, என்னுடன் பேசிக்கொண்டிருந்தது. “நல்லது, நான் கடந்து வந்திருப்பேனாகில், நான் இயேசுவைக் காண விரும்புகிறேன். அவரே என் ஜீவன், நான் அவரைக் காண விரும்பு கிறேன்'' என்று கூறினேன். அதற்கு அவர், ''அவரை நீ இப்பொழுது காண முடியாது. அவர் இன்னும் உயர்ந்த ஸ்தலத்தில் இருக்கிறார்“ என்றார். பாருங்கள்? மனிதன் மரித்த பின்பு ஆறாம் ஸ்தலத்துக்குப் போகி றான். அது பலிபீடத்தின் கீழிருக்கும். ஆனால் தேவன் ஏழாம் பரிமாணத் தில் இருக்கிறார். இது ஆறாவதாகும். 146ஆகவே அவர்கள் அங்கே இருந்தனர். ஒவ்வொருவரும் கடந்து சென்றுக் கொண்டிருந்தனர். நான் கூறினேன். அங்கே உண்மை யாகவே அவர்கள் அங்கே லட்சக்கணக்கில் இருந்தனர். நான் அவர்களை ஒரு போதும் காணவில்லை... நான் அங்கே உட்கார்ந்திருந்தபொழுது, இந்தப் பெண்களும், ஆண்களும் என்னிடம் ஓடிவந்து, இன்னும் என்னைக் கட்டித் தழுவிக்கொண்டு, ''சகோதரனே'' என்று அழைத்துக் கொண் டிருந்தனர். நான் அங்கே உட்கார்ந்திருந்தேன். அப்பொழுது அந்தச் சத்தம், “யாக்கோபு தன் ஜனங்களோடு சேர்க்கப்பட்டதுபோல, நீயும் உன் ஜனங்களுடன் சேர்க்கப்பட்டிருக் கிறாய்” என்று கூறிற்று. “இவர்களெல்லாம் என் ஜனங்களா? இவர்கள் பிரான்ஹாம் குடும்பத்தைச் சார்ந்தவர்களா?'' என்று நான் கேட்டேன். அவர் “இல்லை, அவர்களெல்லாம் உன் மூலமாக கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டவர்கள்” என்று பதில் கூறினார். நான் சுற்றிலும் நோக்கினேன். அப்பொழுது மிக அழகிய ஒரு ஸ்திரீ என்னிடத்தில் ஓடி வந்தாள். அவளும் மற்ற பெண்களைப் போலவே இருந்தாள். அவள் தன் கரங்களால் என்னைச் சுற்றி, என்னைத் தழுவி, ''என் அருமை சகோதரனே'' என்று கூறி, என்னை நோக்கிப் பார்த்தாள். ''என்னே! அவள் ஒரு தூதனைப்போன்று காணப்பட்டாள்'' என்று நான் எண்ணினேன். அவள் கடந்து சென்றாள். அந்த சத்தம் என்னிடம், 'அவள் யாரென்று தெரிகிறதா?' என்று கேட்டது. ''இல்லை, என்னால் அவளை அடையாளங் கண்டு கொள்ள இயலவில்லை“ என்றேன். அதற்கு அது, “அவள் தொண்ணூறு வயது கடந்த பிறகு அவளை நீ கிறிஸ்துவினிடம் வழி நடத்தினாய். ஆகவே அவள் உன்னை அதிகம் மதிக்கிறாள்'' என்றது. “அந்த அழகிய பெண் தொண்ணூறு வயது கடந்தவளா?' என்றேன். “ஆம், அவள் இனி ஒருபோதும் வயது சென்றவளாக மாறுவ தில்லை. ஆகவேதான் அவள், 'அருமையான சகோதரனே' என்று அழைக்கிறாள்'' என்று அது கூறினது. “ஓ, என்னே ! நான் இதைக் குறித்தா பயந்தேன். இவர்கள் தத்ரூ பமாக இருக்கிறார்களே! இவர்கள் வேறெங்கும் செல்வதில்லை. அவர்கள் அங்கு சதாகாலமும் இருப்பதால் சலிப்பு கொள்வதில்லை'' என்று நினைத் துக்கொண்டேன். “நான் ஏன் இயேசுவைக் காணமுடியாது?'' என்று கேட்டேன். அப்பொழுது அந்த சத்தம் என்னிடம், “அவர் ஒரு நாள் வரு வார். அவர் முதலில் உன்னிடம் வந்து உனக்குத் தீர்ப்பளிப்பார்' என் றது. அது, ”இவர்கள் நீ வழிநடத்தின உன்னுடைய ஜனங்கள்உன்னால் மாறுதல் அடைந்தவர்கள் (Converts),'' என்று கூறினது. அதற்கு நான், 'இவர்களுக்கு வழிகாட்டினதினாலே அதை அனு சரித்து எனக்குத் தீர்ப்பளிக்க வேண்டுமா?' என்று கேட்டேன். 'ஆம்' என்று பதில் வந்தது. “ஒவ்வொரு வழிகாட்டிக்கும் இவ்வாறே தீர்ப்பளிக்கப்பட வேண்டுமா'' என்றேன். அது 'ஆம்'' என்றது. நான் “பவுலைக் குறித்து என்ன?” என்றேன். அவர், “அவனும் அவனுடைய கூட்டத்துடன் நியாயந்தீர்க்கப் படுவான்'' என்றார். ''பவுலின் கூட்டம் பிரவேசிக்குமானால் என் கூட்டமும் பிரவே சிக்க வேண்டும், ஏனெனில் அவன் பிரசங்கித்த அதே வார்த்தையையே நானும் பிரசங்கித்தேன்.'' அதுதான். அவன் இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுத்தான்; நானும் அவ்வாறே ஞானஸ்நானம் கொடுத் தேன்; நான் பிரசங்கித்தேன்.. என்றேன். அதற்கு லட்சக்கணக்கான அவர்கள் எல்லாரும் ஒன்றாக, “அதன் பேரில்தான் நாங்கள் இளைப்பாறிக்கொண்டிருக்கிறோம்'' என்றனர். என்னே, “இதை மாத்திரம் நான் முன்னமே அறிந்திருந்தால், எல் லோரையும் இங்கு வரவழைத்திருப்பேன். அவர்கள் ஒருக்காலும் இதைக் காணத் தவறக்கூடாது” என்று நான் நினைத்தேன். அவர், “இப்பொழுது, ஒரு நாள் அவர் வருவார்; அதன்பின்... நாங்கள் இங்கே புசிப்பதும், குடிப்பதும், நித்திரை செய்வதும் இல்லை. நாங்கள் அனைவரும் ஒன்றாக மாத்திரம் இருக்கிறோம்,'' என்றார். 147அது பரிபூரணமல்ல; அதற்கும் மேம்பட்ட காட்சியாயிருந்தது. பயபக்தியூட்டும் ஒன்றுக்கும் மேம்பட்டதாயிருந்தது. அதற்கு எந்தப் பெயரும்... உன்னால் நினைக்கவும் முடியாத... அதை விவரிப்பதற்கு அகராதியில் எந்த வார்த்தையும் கிடையாது. நீங்கள் இந்த க்ஷணத்தில் வந்துவிட்டீர்கள், அவ்வளவே. “நல்லது, இது பரிபூரணமாக இருக்கும். ஆகவே பிறகு அடுத்த தாக நாம் என்ன செய்யப் போகிறோம்'' என்று நான் கேட்டேன். அவர்கள், “இயேசு வந்து உம்முடைய ஊழியத்தை தீர்ப்பளித்த பிறகு, நாங்கள் பூமிக்கு சென்று சரீரங்களை பெற்றுக் கொள்வோம்' என் றனர். நல்லது, அதைப்பற்றி நான் யோசிக்கவேயில்லை. அது வேத வாக்கியத்துடன் ஒத்திருக்கிறது. 'நாங்கள் பூமிக்குச் சென்று, சரீரங் களைப் பெற்றுக் கொள்வோம். அங்கு நாங்கள் புசிப்போம். இங்கு நாங்கள் புசிப்பதுமில்லை, குடிப்பதுமில்லை, நித்திரை செய்வதுமில்லை, நாங்கள் பூமிக்குச் சென்று அங்கு புசிப்போம்'' என்றனர். 148இது மிகவும் அற்புதமாயிருக்கிறதல்லவா? ஓ, என்னே ! நான் ஏன் மரணத்திற்குப் பயந்திருந்தேன்? நான் இங்கு வருவதற்கு, நான் ஏன் மரணத்தைக் குறித்து பயந்தேன்? நல்லது. இது பரிபூரணமான, இன்னும் மிகுதிப்படியான பரிபூரணம், இன்னும் மிகுதிப்படியான பரிபூரண மாயிருக்கிறது. ஓ, இது அற்புதமானதாகும். பாருங்கள். நாங்கள் அனைவரும் அங்கு பீடத்தின் (altar) கீழ் தான் இருந்தோம். பாருங்கள்? அவர்கள் அங்கு இருந்து கொண்டு கர்த் தருடைய வருகையை எதிர்நோக்கியிருக்கின்றனர். அவர் நித்திரை யடைந்தவர்களின் சரீரங்களைப் பூமியின் தூளினின்று எழுப்புவார். அவர் வருகையில் நம்மை எழுப்புவார். அவர் வருகையில் நம்மை எழுப்புவார். அப்பொழுது பரதீசியில் காத்திருக்கும் இவ்வாத்துமாக்கள் அவர் களுடைய சரீரங்களைப் பெற்றுக் கொள்வார்கள். இயேசு பரதீசுக்குச் சென்று ஆபிரகாம், ஈசாக்கு இன்னும் பழைய ஏற்பாட்டின் பரிசுத்த வான்களை உயிரோடெழச் செய்தார். அவர்களும் பரிசுத்த நகரத்தில் பிர வேசித்து அநேகருக்குக் காணப்பட்டனர். இது பூரணமாக வேதப்பூர்வமாய் அமைந்துள்ளது. நான் கண்டது தரிசனமோ அது வேறொன்றே, அது பூரணமாய் வேதப்பூர்வமாயிருக் கிறது. 'இது மிகவும் அதிசயம்' என்று எண்ணியிருக்கும்போது, ஏதோ ஒன்று சத்தமிடுவதைக் கண்டேன். நான் திரும்பிப் பார்த்த போது, நான் சவாரி செய்த 'பிரின்ஸ்' என்னும் குதிரை என்னருகில் நின்று அதன் தலையை என் தோளின்மேல் போட்டு என்னைத் தழுவ வந் தது. நான் அதற்கு சர்க்கரை கொடுக்கும்போது இருப்பதுபோன்று, உங்களுக்குத் தெரியும், அது தன்னுடைய... நானும் என் கையை அதன் மேலிட்டு, “பிரின்ஸ், நீங்கு இருப்பாய் என்று எனக்குத் தெரி யும்'' என்றேன். பிறகு ஏதோ ஒன்று என் கையை நக்கியது போன்ற உணர்ச்சி ஏற்பட்டது. என் நாய் அங்கு நின்று கொண்டிருந்தது. 149ஷார்ட் (Short) என்பவர் அதற்கு விஷம் கொடுத்து கொன்ற போது, அவரைக் கொன்று பழிவாங்குவேன் என்று சபதம் செய்தேன். அப்பொழுது, எனக்கு ஏறக்குறைய பதினாறு வயதிருக்கும். துப்பாக் கியை எடுத்துக்கொண்டு காவல் நிலையத்திலேயே அவரைச் சுட்டுக் கொல்ல நான் புறப்பட்டபோது, என் தகப்பனார் என்னைத் தடுத்து விட்டார். நான் அந்த நாயின் கல்லறைக்குச் சென்று, எப்படியாவது அவரைக் கொன்று பழிவாங்குவேனென்று சபதம் செய்தேன். நான் 'ஃபிரிட்ஸ் (Fritz) நீ எனக்கு ஒரு தோழனைப் போலிருந்தாய். நான் பள்ளிக்கு செல்ல, என்னை கவனித்தாய். உனக்கு வயதாகும்போது, நான் உன்னைக் காப்பேன். ஆனால் இப்பொழுதோ உன்னைக் கொன்று விட்டார்களே. ஃபிரிட்ஸ் அவர் இனிமேல் உயிர்வாழ்வதில்லை என்று நான் உனக்கு வாக்களிக்கிறேன். அவர் வாழமாட்டார் என்று நான் உனக்கு வாக்கு கொடுக்கிறேன். அவர்மீது வண்டியை ஏற்றி கொன்று விடுவேன் என்று நான் நினைத்தேன். (என்றைக்காவது தெருவில் அவர் நடந்து செல்வதைப் பார்ப்பேன் அப்பொழுது) உனக்காக நான் அவரை கொல்வேன்'' என்று இவ்விதமாய்க் கூறினேன். ஆனால் என்ன நேர்ந்தது தெரியுமா? அந்த மனிதனை நான் கிறிஸ்துவினிடத்தில் வழிநடத்தி, அவருக்கு இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுத்தேன். அவர் மரித்தபோது அவர் உடலை அடக்கம் செய்தேன். ஆம், ஐயா. என் நாயை அவர் விஷம் வைத்துக்கொன்ற சில வருடங்களுக்குள் நான் இரட்சிக்கப்பட்டேன். அதன்பின் நான் காரி யங்களை வித்தியாசமாகக் கண்டேன். அப்பொழுது அவரை வெறுப் பதற்கு மாறாக அவரை சிநேகித்தேன். 150அங்கு ஃபிரிட்ஸ் (Fritz) என்னும் பெயர் கொண்ட என் நாய் என் கையை நக்கினவாறு நின்றுகொண்டிருந்தது. நான் பார்த்தேன்... அதைக் கண்டபோது, என்னால் அழமுடியவில்லை. அங்கு எவரும் அழவே முடியாது. அங்கு எல்லோரும் மகிழ்ச்சியுற்றிருக்க வேண்டும். விசனம் என்பது அங்கு காணப்பட முடியாது. அங்கு எவரும் மரிக்க வும் முடியாது. ஏனெனில் அங்கு எல்லாம் ஜீவனாகவே அமைந்திருந்த து. பாருங்கள்? பாருங்கள்? அவ்வாறே எவரும் அங்கு வயோதிபப் பிரா யத்தை அடைய முடியாது. எல்லோரும் வாலிபராகவே இருந்தனர். அது மிகவும் பரிபூரணமாயிருந்தது. 'ஓ, இது மிகவும் அற்புதமல்லவா!' என்று நான் நினைத்தேன். இத்தகைய லட்சக்கணக்கானவர் மத்தியில் நானும் இருந்தேன். ஓ, என்னே! நான் உண்மையாக என் வீட்டில் இருந்தேன், பாருங்கள். அப்பொழுது அங்கு ஒரு சத்தம் கேட்டது. அது, 'நீ சிநேகித்த அனைவரையும், உன்னை மனப்பூர்வமாக சிநேகித்த அனைவரையும், தேவன் உனக்குக் கொடுத்திருக்கிறார்' என்றது. இது நான் செய்த ஊழி யத்திற்கு தேவன் அளித்த பலன். ஆனால் எனக்கு எவ்வித பலனும் வேண்டாம். நான் 'கர்த்தருக்கு ஸ்தோத்திரம்' என்றேன். எனக்கு ஒரு விசித்திரமான உணர்ச்சி அப்பொழுது ஏற்பட்டது. அப்பொழுது நான் காரியம் என்ன? விசித்திரமாக உணர்கிறேன்'' என்று நினைத்தேன். நான் திரும்பிப் பார்த்தபோது கட்டிலின் மேல் கிடந்திருந்த என் உடல் அசையத் தொடங்கினது. அப்பொழுது நான், 'ஓ, எனக்கு இங்கிருந்து போவதற்கு மனதில்லை. என்னைப் போகவிட வேண்டாம்' என்றேன். 151ஆனால் சுவிசேஷம் மக்களுக்குப் பிரசங்கிக்கப்பட வேண்டும். ஒரு நொடிப்பொழுதில் நான் மறுபடியும் கட்டிலின் மேல் படுத்துக் கொண்டிருந்தேன். இந்த என் அனுபவம் 'வியாபாரிகளின் சத்தம்' (Business men's Voice) என்னும் பத்திரிக்கைளில் இரண்டு மாதங்களுக்கு முன்னர் அச்ச டிக்கப்பட்டு உலகம் பூராவும் சென்றது. சகோ, நார்மன்- அவர் இக்கூட்டத்தில் இருக்கிறார் என்று நினைக்கிறேன். அவர் அதனை மொழிப் பெயர்த்து கைப்பிரதிகளாக அச்சடித்து விநியோகம் செய்தார். அது எல்லா இடங் களுக்கும் சென்றது. அநேக ஊழியர்கள் அதைக் குறித்து எனக்கு எழுதினார்கள். அவர்களில் அநேகர்... 424. அவைகளில் ஒன்றை நான் கூறட்டும். நூற்றுக்கணக்கானவர் எனக்கு எழுதினர். இதோ இது இவ்விதமாக இருந்தது, “சகோதரன் பிரான்ஹாம், வியாபாரிகளின் சத்தம் என்னும் பத்திரிகையில் வந்த உங்களுடைய தரிசனம்...'' டாமி நிக்கலை (Tommy Nickel) நான் பாராட்டுகிறேன். அவர் இப்பொழுது வியாபாரிகள் சங்கத்தில் இல்லை. என்ன காரணமோ நான் அறியேன். திரித்துவக் கொள்கையைக் கடைபிடிக்கும் அந்த பத்திரிக் கையில் அவர், 'பவுல் இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுத்து அவ்விதம் செய்யக் கட்டளையிட்டுள்ளார். நானும் அதையே செய் துள்ளேன்' என்று நான் கூறியதை எவ்வித மாற்றமுமின்றி அப்படியே பிரசுரித்தார். அதன்பின் நான், “என்னே!'' என்று யோசித்தேன். 152அந்த போதகர், “சகோதரன் பிரான்ஹாமே உங்கள் தரிசனம்...'' என்று எழுதியிருந்தார். 427. அவர் அதை தரிசனம் என்று குறிப்பிட்டிருந்தார். அது ஒருக்கால் தரிசனமாய் இருந்திருக்கலாம். நான் வானத்துக்கு எடுத்துக் கொள்ளப் பட்டதாகக் கூற விரும்பவில்லை. நான் முதலாம் வானம் வரைக்கும் எடுக்கப்பட்டு இத்தகைய சம்பவங்களைக் கண்டேனானால், மூன்றாம் வானம் வரைக்கும் எடுக்கப்பட்ட பவுல் என்னவெல்லாம் கண்டிருப் பான்? அது என்ன? அதைக் குறித்து மனிதர் பேசவும் கூடாது என்று அவன் கூறினான். எனக்கு நேர்ந்ததும் எடுக்கப்படுதலா என்னவென் பது எனக்குத் தெரியவில்லை. என்னால் சொல்ல முடியவில்லை. நான் அதை உங்களுக்கு கூறவும் முடியாது. அதை வாசித்த ஒரு போதகர், 'சகோ. பிரான்ஹாம் உங்கள் தரி சனம் பெரும்பாலும் வேதவாக்கியங்களுடன் ஒத்திருக்கின்றது. ஆனால் குதிரை அங்கு இருந்ததாக நீர் கூறுவது மாத்திரம் என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. பரலோகம் மனிதருக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளதேயன்றி குதிரைகளுக்கல்ல' என்று எழுதியிருந்தார். வேததத்துவத்தினால் உண்டாகும் மனித ஞானத்தைப் பாருங்கள். நல்லது, நான் அங்கு சபையின் அலுவலகத்தில் அமர்ந்திருந் தேன். நான்கு அல்லது ஐந்து மாதங்களுக்கு முன்பு எனது மகன் பில்லி அந்தக் கடிதத்தை என்னிடம் கொண்டு வந்தான். 153நான் அந்த போதகருக்கு இவ்விதம் பதிலளித்தேன்; 'என் அருமை சகோதரனே, நீங்கள் வேதவாக்கியங்களைக் குறித்து கொண்டுள்ள அறிவைக் குறித்து அதிசயமுறுகிறேன். நான் பரலோகத்திலிருந்ததாகச் சொல்லவில்லை. பரதீசைப் போன்ற ஒரு ஸ்தலத்தில் இருந்ததாகவே நான் குறிப்பிட்டுள்ளேன். ஏனெனில் கிறிஸ்து அதற்கும் உயரமா யுள்ள ஒரு ஸ்தலத்தில் இருந்தார். உங்கள் சந்தேகம் தீரவேண்டுமானால், வெளிப்படுத்தல் 19-ம் அதிகாரத்தை வாசித்துப் பாருங்கள். இயேசு பர லோகத்திலிருந்து புறப்பட்டு வரும்போது வெள்ளைக் குதிரையின் மேல் ஏறிக்கொண்டு வருகிறார். (வெளி. 19:11-14). அது மாத்திரமல்ல. அவ ருடன் காணப்படும் பரிசுத்தவான்கள் அனைவரும் வெள்ளைக் குதிரை களின்மேல் காணப்படுகின்றனர் என்பதை அறியவும். சரி. முற்றிலும் சரி. ஆம், உண்மையாக. 154அதே ஸ்தலத்தில்... கழுகைப் போன்ற ஜீவன், காளையைப் போன்ற ஜீவன் இருக்கின்றனவே... நல்லது, என்னே, எலியாவைக் கொண்டு சென்ற குதிரைகள் எங்கிருந்து வந்தன? மனித சிந்தை அதில் தவறு காண விழைவதைப் பாருங்கள். அது உண்மை . இப்பொழுது கவனியுங்கள். இந்த அருமையான, தேவ பக்தி யுள்ள சகோதரன் யோவானைக் குறித்து நான் சற்று சிந்தித்துக் கொண் டிருந்தேன்... நான் முடிக்கும் முன்பாக இதைக் கூறுவதற்கு சரியான நல்ல இடம் இதுதான் என்று நான் சற்று யோசித்தேன். யோவான் கொஞ்ச காலம் துன்புறுத்தப்பட்டு அவனுடைய சகோதரரைக் காண அனுமதிக்கப்பட்டான். அவ்வாறே நானும் கர்த்தருடைய வருகைக்காகக் காத்துக் கொண்டிருக்கும் என் சகோதரரையும் மற்ற பரிசுத்தவான்களை யும் காண தேவனாகிய கர்த்தர் அனுமதித்தார். கவனியுங்கள். நான் கண்ட என் ஜனங்கள் பரிசுத்தவான்கள் பலி செலுத்தப்படும் பீடத்தின் கீழ் இல்லை. ஆனால் ஐந்தாம் முத்திரையில் காணப்படும் ஆத்துமாக்கள் தாங்கள் கடைப்பிடித்திருந்த கொள்கைக்காக உயிர்த்தியாகம் செய்த தால், பலிபீடத்தின் (Altar of sacrifice) கீழ் காணப்படுகின்றனர். இப்பொழுது இதை நீங்கள் நன்கு கவனிக்க விரும்புகிறேன். இன்னும் பத்து நிமிடங்களுக்குள் சரியாக 10.00 மணிக்கு முடித்துவிடு கிறேன். கவனியுங்கள், கர்த்தர் எனக்குக் காண்பித்த மணவாட்டி பலி பீடத்தின் கீழ் காணப்படவில்லை. ஏனெனில் அவள் ஜீவனுள்ள வார்த்தை கிருபையாய் அளித்துள்ள மன்னிப்பை எற்றுக்கொண்டதன் விளைவாக வெள்ளையங்கியை கிறிஸ்துவினிடமிருந்து பெற்றுக் கொண் டாள். நான் நினைக்கவில்லை, திறக்கப்பட்டதால்... 155ஐந்தாம் முத்திரை நமக்குத் திறக்கப்பட்டு விட்டதென நான் முற் றிலும் நம்புகிறேன். தேவனிடத்திலிருந்து நான் தெளிவான வெளிப் பாட்டைப் பெற்று அதை சுத்த மனச்சாட்சியுடன் உங்களுக்கு அளித் தேன். நான் அதை ஊகித்து உங்களுக்குப் போதிக்கவில்லை. எக்காலத் தும் நான் ஸ்தாபனங்களுக்கு விரோதமாயுள்ளவன் என்பதை நீங்கள் அறிவீர்கள். முத்திரைகள் திறக்கப்படுவதன் மூலம் அதன் உண்மை புலப்பட்டுவிட்டது. வேறொரு காரியத்தையும் நான் நினைத்துப் பார்க்கின்றேன். இந்த ஐந்தாம் முத்திரை இந்த நாளில் திறக்கப்பட்டதனால், 'ஆத்துமாக்கள் உறங்குதல்' (Soul Sleeping) என்னும் போதகம் தவறென்பது ருசுவா கிட்டது. அப்போதகத்தை விசுவாசிப்பவர் சிலர் இங்குள்ளனர் என்று நானறிவேன். ஆனால் அது தவறென்பது இப்பொழுது நிரூபிக்கப்பட்டு விட்டது. அவர்கள் உறங்கிக் கொண்டிருக்கவில்லை. அவர்கள் உயிரோ டுள்ளனர். சரீரங்கள் மாத்திரமே கல்லறைகளில் உறங்கிக் கொண்டிருக் கின்றன. ஆனால் அவர்களுடைய ஆத்துமாக்கள் தேவ சமூகத்தில் பீடத் தின் கீழ் உயிரோடுள்ளன. 156இந்த விஷயத்தில் என் அருமை சகோதரனான சகோ. உரியா ஸ்மித் (Bro. Uria Smith) என்பவருடன் எனக்கு கருத்து வேறுபாடு உண்டு. அவரைச் சார்ந்த சிலர் இங்கு அமர்ந்திருப்பதைக் காண்கிறேன். அவர் டாக்டர் பட்டம் பெற்ற மேதாவி. அது மாத்திரமல்ல, அவர் ஒரு நல்ல போதகரும், நல்ல எழுத்தாளருமாம். 'வெளிப்படுத்தலில் காணப் படும் தானியேல்' (Daniel of Revelation) என்னும் புத்தகத்தின் ஆக் கியோன் அவரே. அவர் போதகத்தைப் பின்பற்றும் உங்களுக்கு இதை கூறிட விரும்புகிறேன். இப்பொழுது நான் அவ்வாறு... நான் ஒரு... அதனால் நான் இறுமாப்புள்ளவன் என்று எண்ணவேண்டாம். பாருங்கள்? ஆனால் நான்... பாருங்கள்? 157'ஆத்துமா உறங்குதல்' என்னும் போதகத்தை வலியுறுத்த எண்ணி, பரலோகத்தில் பலிபீடம் இல்லையென்றும், தூபம் காட்டும் பீடம் ஒன்று மாத்திரமேயுண்டு என்றும் சகோ.ஸ்மித் கூறியுள்ளார். அந்த அருமை சகோதரனுடன் கருத்து வேறுபாடு உண்டாக்கிக்கொள்ளவேண் டும் என்னும் நோக்கத்துடன் நான் இதைக் கூறவில்லை. அவரை மறு கரையில் நான் சந்திப்பேன் என்று எதிர்பார்க்கிறேன். அந்தப் பெரிய போதகருடன் கருத்து வேறுபாடு உண்டாக்கிக் கொள்ளவேண்டும் என்னும் நோக்கம் எனக்கில்லை. ஆனால் இந்தக் கடைசி நாட்களில் ஐந்தாம் முத்திரை உடைப்ப டும்போது அந்தப் போதகம் தவறென நிரூபிக்கப்படுகின்றது. பாருங் கள்? அவர்கள் மரிக்கவில்லை, அவர்களுடைய ஆத்துமாக்கள் உயிரோ டுள்ளன. பாருங்கள்? கவனியுங்கள். 158இப்பொழுது இதைக் கவனியுங்கள். இப்பொழுது பரலோகத்தில் பலிபீடம் இல்லையெனில், பாவத்திற்கென செலுத்தப்பட்ட பலி -ஆட் டுக் குட்டியானவர் - எங்குள்ளது? அடிக்கப்பட்டு இரத்தம் தோய்ந்த ஆட்டுக்குட்டியானவர் கிடக்கும் (laying) ஸ்தலம் ஒன்று இருக்கவேண் டுமல்லவா? அங்குதான் அவர் இரத்தம் காணப்படுகின்றது. இப்பொழுது தூபம் என்பது எரிக்கப்படும் வாசனைத் திரவிய மாம். அது “பரிசுத்தவான்களின் ஜெபங்கள்” என்று வேதம் கூறுகின் றது. பலிபீடத்தின்மேல் பலி இல்லாவிடில், ஜெபங்கள் ஏற்றுக்கொள் ளப்பட முடியாது. பலிபீடத்தின்மேல் காணப்படும் இரத்தமே, ஜெபங்கள் தேவனுடைய சமூகத்தையடைய அனுமதிக்கின்றது. 159சகோ. ஸ்மித் கூறியது தவறென்பதை நான் சகோதர அன்புட னும், அவருடைய எழுத்துக்களின்மேல் நான் கொண்டுள்ள அபிமானத்துடனும் கூறுகின்றேன். அவருடன் கருத்துவேறுபாடுகொள்ள வேண்டு மென்ற எண்ணம் எனக்கில்லை. ஆனால் அவர் தவறாய் இருக்கின்றார். படிக்கைப் பெட்டி இப்பொழுது எங்குள்ளது? ஜெபங்கள் அங்கு அடைவதற்கென பாவ நிவர்த்தியுண்டாக்கினவர்- அடிக்கப் பட்டு இரத்தம் தோய்ந்த ஆட்டுக்குட்டியானவர்-எங்குள்ளார்? படிக்கைப் பெட்டி இப்பொழுது எங்குள்ளது? ஜெபங்கள் அங்கு அடைவதற்கென பாவ நிவர்த்தியுண்டாக்கினவர்- அடிக்கப் பட்டு இரத்தம் தோய்ந்த ஆட்டுக்குட்டியானவர்-எங்குள்ளார்? 'பூமிக்குரிய இக்கூடாரம் அழிந்து போனாலும், (ஆங்கிலத்தில் (Dissolve) என்ற வார்த்தை உபயோகப்படுத்தப்படுகின்றது. அதற்கு கரை அல்லது கூட்டுச் சிதைவி என்று பொருளாகும் - தமிழாக்கியோன்) நித்திய வீடு பரலோகத்தில் உண்டு' என்று வேதம் கூறுகின்றது. அங்கு தான் நான் இப்பரிசுத்தவான்களைக் கண்டேன். பாருங்கள்? 160கவனியுங்கள், ஒரு குழந்தை... இப்பொழுது நான் வெளிப்படை யாய்க் கூறப்போவதை சகோதரிகள் மன்னிக்க வேண்டுகிறேன். ஆனால், கவனியுங்கள். ஒரு தாயார் கருத்தரிக்கும்போது, அந்தக் குழந்தையின் தசை வளர்ந்து அது கையையும் காலையும் ஆட்டுகிறது. அது இயற்கை யான சரீரம். இயற்கை அந்தச் சரீரத்தை வளரச்செய்கின்றது.... குழந்தை பிறப்பதற்கு சற்று முன்பு, கர்ப்பிணியாயுள்ள உங்கள் மனைவியை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா? அச்சமயம் அவள் மிகவும் அன்பாகவும், இனிய சுபாவமுள்ளவளாகவும் காணப்படுவாள், அவள் வாழ்நாள் முழுவதும் அங்ஙனம் இல்லையென்றாலும், குழந்தை பெறப் போகும் சமயத்திலாவது இனிய சுபாவமுள்ளவளாய் இருப்பாள். அது எதைக் காண்பிக்கிறது? இவ்விதமாக கர்ப்பிணியாயுள்ள பெண்களை சில பாவிகள் பரிகசிப்பதை நீங்கள் கண்டிருக்கிறீர்களா? அது முட்டாள்தனமானது என்றே நான் நினைக்கிறேன். ஏனெனில், அங்கே உலகத்திற்கு ஒரு ஜீவன் வந்து கொண்டிருக்கின்றது. அந்தத் தாயைச் சுற்றிலும் ஓர் இனிய உணர்வு காணப்படுவதை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா? அது என்ன? அந்தக் குழந்தை பிறந் தவுடன் ஆவிக்குரிய ஜீவன் அக்குழந்தைக்குள் பிரவேசிப்பதை அது எடுத்து காண்பிக்கின்றது. இப்பொழுது, ஜெநிப்பிக்கப்படவுள்ள அந்த குழந்தை பிறக்கும்போது, ஆவிக்குரிய சரீரம் இயற்கை சரீரத்துடன் ஒன்றுபடுகின்றது. 161ஆகவே, நாமெல்லாரும் தேவனால் இப்பொழுது ஜெநிப்பிக்கப் பட்டிருக்கிறோம் என்று வேதம் கூறுகின்றது. நாம் பரிசுத்த ஆவியால் ஜெநிக்கப்பட்டிருக்கிறோமென வேதம் கூறுகின்றது. தேவகுமாரனாகிய கிறிஸ்து நமக்குள் உருவாகிக் கொண்டிருக்கிறார். பூமிக்குரிய நம் சரீரம் அழிந்துபோகும்போது, (கரைந்து போகும்போது - Dissolved - தமிழாக் கியோன்) நமக்குள் இருக்கும் ஆவிக்குரிய சரீரத்தைப் பெற்றுக்கொள்ள வேறொரு சரீரம் அங்கு காத்துக்கொண்டிருக்கிறது. இந்த பூமிக்குரிய கூடாரம் கீழே விழும்போது, அதை ஏற்றுக்கொள்ள வேறொரு சரீரம் காத் திருக்கிறது. அழிவுள்ள சரீரம் அப்பொழுது அழியாமையைத் தரித்துக் கொள்கிறது- பூமிக்குரியது பரலோகத்துக்குரியதைத் தரித்துக்கொள்ளும். நான் சொல்லுகிறது உங்களுக்குப் புரிகின்றதா? மாம்சத்துக்குரிய சரீரம் பாவமுள்ளது. ஆனால் அது போன்ற வேறொரு சரீரத்துக்குள் நாம் அங்கு பிரவேசிக்கிறோம். 162அந்த சரீரத்தில் அவர்களைக் காணவும், அவர்களை என் கைகளால் தொடவும் கிடைத்த சிலாக்கியத்திற்காக நான் தேவனுக்கு நன்றியுள்ள வனாயிருக்கிறேன். உங்கள் போதகனும் சகோதரனும் என்ற ரீதியில் அவர்களை நான் அச்சரீரத்தில் கண்டேன் என்று உறுதி கூறுகிறேன். அது உண்மை . கவனியுங்கள். மோசேயையும் எலிசாவையும் பாருங்கள். மோசே மரித்தான். எலிசா மரிக்காமல் பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டான். அவர் களிருவரும் மறுரூப மலையில் ஐம்புலன்களையும் கொண்டவர்களாய், இயேசு சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு அவருடன் பேசிக் கொண்டிருந்ததாகக் காணப்பட்டனர். அவர்கள் எத்தகைய சரீரம் பெற் றிருந்தனர்? சாமுவேலைப் பாருங்கள். அவன் மரித்து இரண்டு வருடங்களுக் குப் பிறகு அந்த இரவில் அந்த - அந்த குகைக்குள் எந்தோரின் மந்திர வாதியால் வெளியே கொண்டு வரப்பட்டான். சவுல் கூறினதை அவன் கேட்டான். அவனும் சவுலுடன் பாஷையில் பேசி, வரப்போகும் காரிய ங்களை அறிவித்தான். அவன் மரித்த பிறகும் அவனுடைய ஆவியின் தன்மை மாறவில்லை. அவன் அப்பொழுதும் தீர்க்கதரிசியாகவே இருந் தான். 163அவ்வாறே எலியாவின் ஆவி ஒரு மனிதனின் மேல் வரும்போது, எலியாவைப் போன்றிருக்கவே அவனைத் தூண்டும். அவன் வனாந்தரத் துக்கு செல்வான். அவன் வனாந்தரத்தின் மீது பிரியம் கொண்டிருப் பான். நல்லொழுக்கம் கெட்ட பெண்களை அவன் வெறுப்பான். அவன் ஸ்தாபனங்களுக்கு விரோதமாயிருப்பான். அவன் எவரையும் சார்ந்தி ருக்கமாட்டான். அவன் தன்மை அவ்வாறிருக்கும். ஒவ்வொரு முறை யும் அந்த ஆவி வரும்போது அதன் தன்மை மாறுவதில்லை. அதே போன்ற நபராக மோசேயும் இருப்பான். இப்பொழுது, ஆகவே வெளிப்படுத்தல் 22:8-ல் அதே காரியத்தை நாம் பார்க்கிறோம். இப்பொழுது, கிறிஸ்துவின் மரணத்திற்கும் சபை எடுக்கப்படுத லுக்கும் இடையேயுள்ள காலத்தில் எய்க்மன் போன்றவரால் கொல்லப் பட்ட புஸ்தகத்தில் தங்கள் பெயர்களையுடைய உண்மையான யூதர்கள் பலிபீடத்தின் கீழ் காணப்படுகின்றனர் என்று இம்முத்திரை உடைக் கப்பட்டதன் மூலமாக நாமறிகிறோம். என் சகோதரனே, நீ அவர்களை கவனித்தால், அவர்கள் பேசுகின்றனர், பேசுவதைக் கேட்கின்றனர். அவர் கள் ஐம்புலன்களையும் கொண்டுள்ளனர் என்று வேதம் கூறுகின்றது. அவர்கள் கல்லறைகளில் ஒன்றுமறியாத நிலையில் நித்திரை செய்து கொண்டிருக்கவில்லை. அவர்கள் விழித்துக்கொண்டு ஐம்புலன்களும் உடையவர்களாயிருக்கின்றனர். அது உண்மையா? (சபையார் “ஆமென்'' என்கின்றனர் -ஆசி) ஓ! எங்களுக்கு உதவி செய்வீராக. 164இரண்டு நிமிடங்கள். ஆமென். நான் அரைமணி நேரம் உங்களை தாமதப்படுத்திவிட்டேன். அதற்காக நான் வருந்துகிறேன். இல்லை. நான் அவ்விதம் சொல்லக்கூடாது, பாருங்கள், பாருங்கள்? அது சரி, பாருங்கள். ஆனால் கவனியுங்கள். இது (ஐந்தாம் முத்திரை) நான் சிறந்த முறையில் புரிந்து கொண்டதின்படி இங்குள்ளது. இன்று விடியற் காலை கர்த்தராகிய இயேசுகிறிஸ்து எனக்களித்த வெளிப்பாட்டின் மூலம் மற்ற நான்கு முத்திரைகளைப் போல ஐந்தாம் முத்திரையும் திறக்கப் பட்டு விட்டது என்று நானறிவேன். அவர் உங்கள் மேலும் என் மீதும் வைத்திருக்கிற கிருபையினிமித்தம் வெளிப்பாட்டை நமக்களித்தார். அதற்காக நாம் அவருக்கு நன்றி செலுத்துகிறோம். என்னாலானவரை அவருடைய ஒத்தாசையால் அவருடன் நெருங்கி வாழத் தீர்மானிக்கிறேன். எல்லாம் முடிவடைந்து, நான் உங்களுடன் அவரை மகிமையில் சந்திக்கும் வரை, மற்றவர்களும் அவருடன் நெருங்கி வாழ வேண்டுமென்று போதித்து வருவேன். அதை அறிந்து கொள்வதற்கு எனக்களித்த அறிவிற்காக நான் அவரை நேசிக்கிறேன். முதல் ஐந்து முத்திரைகளின் உண்மையான வெளிப்பாடுகள் நமக்குத் திறக்கப்பட்டுவிட்டன என்பதை நான் உறுதியாக நம்பு கிறேன். நேசிக்கிறேன் நேசிக்கிறேன் முன்பு அவர் நேசித்ததால் (சகோதரன் பிரான்ஹாம் யாருடனோ மெதுவாகப் பேசுகிறார் ஆசி). சம்பாதித்தார் என் இரட்சிப்பை கல்வாரி மரத்திலே. ('நான் நேசிக்கிறேன்' என்ற பாடலை சகோதரன் பிரான்ஹாம் மெளனமாக இசைக்க ஆரம்பிக்கிறார் - ஆசி) 165இம்முத்திரை திறக்கப்பட்டதைக் கண்ட நாம் இப்பொழுது தேவ னுடைய சமூகத்தில் அமைதியாயும் பயபக்தியாயும் இருப்போம். தேவன் தாம் சிநேகித்த தம் சொந்த பிள்ளைகளைக் குருடாக்க வேண்டியதாயிருந் தது. ஏனெனில் அவருடைய நீதியின்படி பாவம் நியாயந்தீர்க்கப்பட வேண்டும். சற்று யோசித்துப்பாருங்கள். அவருடைய நீதியும் பரிசுத்தமும் நீதியைச் கோருகின்றது. தண்டனையற்ற ஒரு சட்டம் சட்டமேயல்ல. தேவன் தாம் ஏற்படுத்தின கட்டளைகளை எதிர்த்தால் அவர் தேவ னாயிருக்க முடியாது. ஆகவேதான் அவர் மனிதனாக வேண்டிய அவசியம் ஏற்பட்டது. பாவப் பரிகாரத்திற்கென்று சாதாரண ஒருவனை அவர் தெரிந்துகொள்ள முடியவில்லை. நியாயத்தைக் கடைப்பிடிப்பதற்கென இயேசுவே குமாரனும் தேவனுமாக வேண்டிதாயிருந்தது. தேவனே அந்த தண்டனையை ஏற்றுக்கொண்டார். அதை வேறொருவர் மீது சுமத்துவது நியாயமாயிருக்காது. எனவே, தேவன் இயேசுவாக மாம்சத்தில் வெளிப்பட்டு இம்மானுவேல் என அழைக்கப்பட்டார். அஞ்ஞான புறஜாதிகளின்று ஒரு கூட்டத்தை மணவாட்டியாகத் தெரிந்துகொள்ள அவர் தம் சொந்த பிள்ளைகளைக் குருடாக்கி, அவரைப் புறக்கணித்ததினிமித்தம் அவர்களைத் தண்டிக்க வேண்டியதாயிருந்தது. ஆனால் அவருடைய கிருபையோ அவர்களுக்கு வெள்ளையங்கிகளை அளித்தது. ஆனால் அந்த ஜீவனுக்கு என்ன சம்பவித்தது என்று பாருங்கள். 166நமக்குத் தருணம் அளிக்க எண்ணி அவர் இவ்விதம் செய்திருக் கும்போது, அதை நாம் எங்ஙனம் உதறித் தள்ளமுடியும். இன்றிரவு இக்கட்டிடத்தில் தேவன் செலுத்திய விலைமதிக்க முடியாத கிரயத்தை இது வரை உதறித் தள்ளினவர் யாராகிலும் இளைஞனோ, வயோதிபனோ, இருந்து, இப்பொழுது அதை ஏற்றுக்கொள்ள விரும்பினால் நீங்கள் இரத்த சாட்சிகளாக மரிக்காமலே உங்களுக்கு வெள்ளையங்கிகள் கொடுக்கப் டும். கர்த்தர் உங்கள் இருதயங்களைத் தட்டிக்கொண்டிருப்பாரெனில், நீங்கள் ஏன் அவரை ஏற்றுக்கொள்ளக் கூடாது? (சகோதரன் பிரான்ஹாம் பிரசங்க பீடத்தை மூன்று முறை தட்டினார் -ஆசி) நாம் மறுடியும் தலைகுனிவோம். தேவன் உங்களுக்காக சிந்தின இரத்தத்தின் பேரில் விசுவாசம் வைத்து அவரை ஏற்றுக்கொள்ள விரும்பினால்... அவர் பட்ட வேதனையை எந்த மனிதனும் படவில்லை. அவருடைய துயரம் இரத்தக் குழாய்களின் வழியாய் ஓடி, அவர் இரத்தத்திலிருந்து தண்ணீரை வேறு பிரித்தது. அவர் கல்வாரிக்குச் செல்லும் முன்னர், அவருடைய சரீரத்திலிருந்து இரத்தத் துளிகள் வெளிவந்தன. வேண்டுமானால் அவர் இவ் வேதனையை ஏற்காது மறுத்திருக்கலாம். ஆனால் அவர் உங்களுக்காகவும் எனக்காகவும் மனப்பூர்வமாய் பாடுபட்டார். அத்தகைய இணையற்ற அன்பை நீங்கள் புறக்கணிக்கலாமா? 167அவர் நமக்காக முத்திரையைத் திறந்ததன் மூலமாக அவருடைய அன்பை நமக்கு வெளிப்படுத்தினார். அவர் செய்த எல்லாவற்றிற்காக வும் உங்கள் ஜீவியத்தை அவருக்குப் பரிபூரணமாக அர்ப்பணிக்க ஆயத்தமாயிருக்கவேண்டும். இப்பொழுது அவர் உங்களை அந்திக் கிறிஸ்துவின் கரங்களிலிருந்து விடுவிக்க சித்தமுள்ளவராயிருக்கிறார். அதை ஏற்றுக்கொள்ள விரும்பினால் அதன் அறிகுறியாக உங்கள் கைகளை உயர்த்தி, தேவனே, நீர் கிருபையாக அளிப்பதை நான் ஏற்றுக் கொள்வேன் என்பதற்கு அடையாளமாக என் கையை உயர்த்துகிறேன். ''சகோ. பிரான்ஹாமே நான் உண்மையுள்ளவனாய் ஜீவிப்பதற் கென உமது ஜெபம் எனக்கவசியம்'' என்று சொல்லுங்கள். நீங்கள் உங்கள் கரங்களை உயர்த்தினால், நான் உங்களுக்காக ஜெபம் செய்வேன். தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. நீங்கள் உண்மையாகவே கருதுகின்றீர்களா? இல்லை யெனில் நீங்கள் உங்கள் கரங்களை உயர்த்தவேண்டாம். நீங்கள் அமர்ந்துள்ள இடங்களிலேயே அதை ஏற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில், நினைவிருக்கட்டும். ஏதோ ஒன்று உங்களிடம் அவ்விதம் கூறாவிடில், நீங்கள் உங்கள் கரங்களை உயர்த்தியிருக்கமுடியாது. தேவனைத் தவிர, வேறு யாரும் அதைச் செய்யவும் முடியாது. 168ஆகவே இப்பொழுது, காலங்கள்தோறும் என்ன நிகழ்ந்ததென்று வேதவாக்கியங்கள் மூலம் நமக்கு முற்றிலுமாக வெளிப்படுவதைப் பாருங்கள். கடந்த இருபத்தைந்து அல்லது முப்பது வருடகாலமாக அது உறுதியாக்கப்பட்டு வருகிறது. இதுவரை நிகழ்ந்தது என்னவென் றும், இனி நிகழவிருப்பவை என்னவென்றும் வேதம் நமக்குத் திட்ட வட்டமாக எடுத்துரைக்கிறது. கிறிஸ்து நமக்கென்று செய்த முடித்த கிரி யைகளின் மேல் விசுவாசம் கொண்டு ஆசனத்தில் அமர்ந்தவாறே உங்கள் கைகளையுயர்த்தி, 'இந்த நிமிடம் முதற்கொண்டு நான் கிறிஸ்துவை என் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு என் வாழ்நாள் முழு வதும் அவருக்கென்று ஜீவிப்பேன். அவர் என்னைப் பரிசுத்த ஆவியால் நிரப்பவேண்டுமென்று ஆசிக்கிறேன்' என்று கூறுங்கள், நீங்கள் ஏற் கனவே இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளாமலிருந்தால், தண்ணீர் குளம் உங்களுக்காக காத்துக்கொண் டிருக்கிறது. நாம் இப்பொழுது ஜெபம் செய்வோம். 169தேவனாகிய கர்த்தரே. அநேக கரங்கள் இப்பொழுது உயர்த்தப் பட்டன. அநேக வருடங்களுக்கு முன்னர் பாவநிவர்த்திக்கென உம்முடைய இரத்தத்தை சிந்தின கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவாகிய நீர் ஒரு போதும் மாறுவதில்லையென்று நான் நிச்சயம் அறிந்திருக்கிறேன், கடந்த சில வருடங்களாக நீர் எங்கள் மத்தியில் செய்து கொண்டு வருவதையும், முத்திரைகளைக் திறந்து கொடுப்பதையும் ஆதாரமாகக் கொண்டு, கிருபை யின் வாசல் அடைபடத் தொடங்கிவிட்டதென்றும், உம் ஜனங்களை மீட்டுக்கொள்ள வருவதற்கு நீர் இப்பொழுது ஆயத்தமாயிருக்கிறீர் என் பதையும் மனப்பூர்வமாக விசுவாசிக்கிறேன். வாசல் திறந்திருக்கும் போதே, இந்த அருமையான ஆத்துமாக்கள் உள்ளே வரட்டும். அவர்கள் இப்பொழுது தங்கியுள்ள, சரீரமாகிய கூடாரம் ஒரு நாளில் அழிந்து போம். நீர் கிருபையாய் அளித்துள்ள இரட்சிப்பை விசுவாசித்து ஏற்றுக் கொண்டதன் அறிகுறியாக அவர்கள் கைகளை உயர்த்தினர். கர்த்தாவே, இன்றிரவே, இயேசு கிறிஸ்துவின் நீதியின் அங்கியை அவர்களுக் களித்து, அவர்கள் ஆத்துமாக்களை உடுத்துவியும், அப்பொழுது அவர்கள் கிறிஸ்துவின் இரத்தத்தினால் பரிபூரணபட்டு அந்நாளில் உமக்கு முன்னால் நிற்கும் தகுதியைப் பெறுவார்கள், அந்நாள் அருகாமையி லுள்ளது என்று நாங்கள் அறிவோம். 170தேவனாகிய கர்த்தாவே, இயேசுகிறிஸ்துவின் நாமத்திலுள்ள ஞானஸ்நானமே சரியென்னும் வெளிப்பாட்டை எனக்களித்திருக்கிறீர். யோவான் ஸ்நானனிடம் ஞானஸ்நானம் பெற்றவர், பரிசுத்த ஆவியைப்பெற மறுபடியும் இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெறவேண்டுமென்று அப்போஸ்தலர் 19-ம் அதிகாரத்தில் பவுல் அவர் களுக்குக் கட்டளையிட்டான். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ் நானம் பெறாதவர் இங்கு இருப்பார்களானால், கர்த்தாவே, சத்தியத்தை அவர்களுக்கு நீர் உணர்த்திக்காண்பித்து அவர்கள் உமக்குத் கீழ்ப் படிய அருள்புரியும். அவர்கள் அவ்விதம் கீழ்ப்படிந்து ஏற்றுக்கொள்வார்களானால், அவர்கள் உமக்கு ஊழியம் செய்ய பரிசுத்த ஆவியின் வல்லமையினால் வாழ்நாள் முழுவதும் அவர்களை நிரப்பும். பலி செலுத்தப்பட்ட தேவ ஆட்டுக் குட்டியாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் அவர்களை உமது கரங்களில் சமர்ப்பிக்கிறேன். ஆமென். ஆமென். நேசிக்கிறேன் நேசிக்கிறேன் முன்பு அவர் நேசித்ததால் சம்பாதித்தார் என் இரட்சிப்பை கல்வாரி மரத்திலே. 171இப்பொழுது கைகளை உயர்த்தினவர்களே, பரிசுத்த ஆவியான வரின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து, மனந்திரும்பி பாவிகளுக்கென சொல்லப்பட்டிருக்கும் தேவனுடைய வார்த்தையை பின்பற்றுங்கள். உங்களுடைய ஒவ்வொரு செயலிலும் அதை பின்பற்றுங்கள். பரலோகத்தின் தேவன் தாமே நீங்கள் எடுத்துக்கொண்டிருக்கும் இவ்வுறுதிக்காக உங் களுக்குப் பலனளிப்பாராக! நாளை இரவு உங்கள் காகிதங்களையும் பென்சில்களையும் கொண்டு வாருங்கள். கர்த்தருக்குச் சித்தமானால் நாளையிரவு சரியாக 7.30 மணிக்கு இங்கு கூடலாம். தேவன் ஆறாம் முத்திரையை எனக்குத் திறந்து காண் பிக்கவேண்டுமென்றும் அவர் வெளிப்படுத்தினவாறே நான் அதை உங்களுக்கு எடுத்துக் காண்பிக்கவேண்டுமென்றும் எனக்காக ஜெபியுங்கள். நாம் மறுபடியும் பாடுவோமாக. நமக்காக மரித்து நம்மை மீட்டுக் கொண்ட அவருக்குத் துதிகளை ஏறெடுத்து நாம் பாடுவோமாக. உங்கள் போதகர் இப்பொழுது இங்கே இருக்கிறார். நேசிக்கிறேன், “நான்...'' நேசிக்கிறேன் நேசிக்கிறேன் முன்பு அவர் நேசித்ததால் சம்பாதித்தார் என் இரட்சிப்பை கல்வாரி மரத்திலே.